Monday 28 May 2012

திருவிழாக் கோலங்கள்.





மிழிர்தல்.


     அறநெறிப்பாடசாலைக் கட்டிடத்தின் முழுமையான உள் மற்றும் வெளிப்புறப் பூச்சுவேலைகளுக்கான முழுப்பொறுப்பையும்
 திரு.கார்த்திகேசு விஜயரத்தினம் குடும்பத்தைச் சேர்ந்த  விஜி  ,அருணன் ,பிரபா  மனோ, பாஸ்கரன் ஆகியோரும் திரு.கந்தையா சிவப்பிரகாசம் குடும்பத்தைச் சேர்ந்த   கவிதா , ஜெகசோதி ,அருட்சோதி  ஆகியோரும் ஏற்றுக்கொண்டு அதற்கான நிதியாக
$2150 .00டொலர்களை(Rs 276275.00)அறநெறிப்பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளனர்.
குறிப்பிட்ட வேலைத்திட்டம் அறநெறிப்பாடசாலை நிர்வாகத்தினால் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
வெள்ளையடிக்கும் வேலை விரைவாக நிறைவேற்றப்படும்.
                மாணவர்களின் கல்விவளர்ச்சியில் மனதார்ந்த ஆர்வம்கொண்டு இப்பாரிய நற்பணியைப் பொறுப்பேற்று நிறைவேற்றியமைக்காக ஊரவர்கள் அனைவரினதும் சார்பாக திரு.கார்த்திகேசு விஜயரத்தினம் குடும்பத்தினருக்கும் திரு.பசுபதிப்பிள்ளை சிவப்பிரகாசம் குடும்பத்தினருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அறநெறிப்பாடசாலை சார்பாக
திரு.தயாபரன் அருளானந்தம்.
May 28.2012
 
          We would like to take this space to pay special thanks to two families who have helped the Araneri school program take a significant step towards becoming fully functional. After hearing that the school construction was not fully complete, the Vijayaratnam family and the Sivapirahasam family donated $2150.00 (Rs 276275.00) towards finishing the walling on the school. Thanks to their contribution, the building is almost completely finished.
 The money was donated to the school on behalf of Viji, Arunan, Piraba, Mano and Baskaran of the Vijaratnam family and on behalf of Kavitha, Jegasothy, and Arudsothy of the Sivapirahasam family.
 Once again, we would like to thank these generous people for their contributions. Thank you.
 On behalf of the Araneri school,
Mr. Thayaparan Arulanantham
May 28, 2012

எழில்மிகு மனோன்மணி அம்பாள் ஆலய புதிய கோபுரம்.






Monday 21 May 2012

கதிர்.

 
கல்விச் சூரியனின் கதிர்வீச்சிற்குள்  காத்திருந்து நாளைய விருட்சங்களாய் வளரும் இன்றைய தளிர்கள்.
2010ம் ஆண்டு யாழ் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.
வழங்கியவர்: திரு..இராஜகோபால் ஆசிரியர் அவர்கள்.





Thursday 17 May 2012

பகிர்தலும் நிமிர்தலும்.





காடுவெட்டிக் களனிகட்டி ஏர்நிமிர்த்தி  ஊர்வளர்த்த வன்னிமக்கள் யுத்தத்தின் பினனான இன்றைய நாட்களில்தான் கொடுமையான யுத்தவலியை இன்னமும் எதிர்கொள்கிறார்கள்.
                 இப்பிரதேச மாணவர்களின் கல்விமேம்பாட்டின் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்ந்து கிளிநொச்சி  கரைச்சி பிரதேசசபைக்குட்பட்ட வட்டக்கச்சியிலுள்ள பொதுநூலகத்திற்கு அறநெறிப்பாடசாலையினூடாக உலகெங்குமுள்ள  அனலைதீவு  மக்களனைவரினதும்
சார்பாக ரூபா 106 000.00 பெறுமதியான 317 புத்தகங்களை அன்பளிப்புச் செய்ததில் நெகிழ்வுறும் நாம் இம்முயற்சிக்கு மனப்பூர்வமாக உதவியவர்கள் அனைவருக்கும் எமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அறநெறிப்பாடசாலையின் வளர்முகப் பாதையில் மிக மகிழ்வான  இச்சந்தர்ப்பத்தில்  ஆரம்ப நாட்களிலிருந்து  உதவியும் ஒத்துளைப்பும் தருகின்ற  நேசமுள்ள அனைவருக்கும் எமது  இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அறநெறிப்பாடசாலை சார்பாக
திருமதி.சிவபதி ஜெயசக்தி.
திரு..நாராயணன்.
May 17.2012.




            The Araneri school project is happy to announce that, through the goodwill of our donators, we have been able to purchase 317 books worth Rs. 106000.00 for the Vaddakkachchi Public Library in the Kilinochchi District. While the Araneri school itself still has many challenges to overcome, we feel strongly that the plight of other educational institutions, like public libraries, should also be addressed.
          We want to thank everyone who contributed to this, and further give thanks to each and every person that has volunteered their time and contributed their efforts to seeing the Araneri school project succeed.
 On behalf of Araneri school,
Mr. T Narayanan
May 17, 2012



Tuesday 15 May 2012



உதாரணம்;;.

    அறநெறிப்பாடசாலையின் தேவையையும் சேவையையும் உணர்ந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த திரு.செல்வா விமல் அவர்கள் அறநெறிப்பாடசாலைக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக 310.00 nlhyu;fs;அன்பளிப்புச் செய்துள்ளார் என்பதை மகிழ்வோடு எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் நாம் எமது மனம் நெகிழ்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
    எந்த எல்லைகளுக்கும் உட்படாத நேசமும் தர்மமும் எல்லாச் சமுகத்திற்கும் ஆரோக்கியமானது.

அறநெறிப்பாடசாலை சார்பாக
திரு.செல்வா வீரகத்தி. 14.05.2012



          We would like to highlight a charitable donation that shows how we can give to anybody in need, not just the people or places we know.
         
 Mr. Selva Vimal, who lives in Canada but came from Nainathivu island, just south of Analaitivu, has been kind enough to donate $310.00 to the Araneri school. His belief in the services we aim to provide and his concern for the students who needed the funding to help their education serves as a shining example of true compassion.
 On behalf of Araneri school,
Mr. Selva Veerakathy
May 14, 2012

Monday 14 May 2012


Sunday 13 May 2012

Friday 11 May 2012

நினைவு.





 
     அனலைதீவு வைத்தியசாலையின்   முன் சுற்றுமதில் புனரமைப்பு மற்றும் வெள்ளையடித்தல் முதலான திருத்த வேலைகள் அறநெறிப்பாடசாலை நிர்வாகத்தினூடாக  மேற்கொள்ளப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.  
 1500.00 டொலர்(190 000.00 ரூபாய்) செலவிலான      இந்த வேலைத்திட்டத்தை கனடாவில் வசிக்கும்
திரு.அனுசன் கனகலிங்கம் அவர்கள் தமது தாத்தாவாகிய
திரு.வைத்திலிங்கம் கணேசு அவர்களின் ஞாபகார்த்தமாக முழுமையாகப் பொறுப்பேற்று ஊரவர்களின் நலனில் பங்காற்றுகிறார் என்ற மகிழ்வான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடையும் நாம் எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
  இவ்வாறான ஞாபகார்த்த நற்பணிகளில் மேலும் பல வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் நிறைவேற்ற நாமெல்லோரும் முயற்சிப்போம்.
அறநெறிப்பாடசாலை சார்பாக  
திரு.செல்வா வீரகத்தி
May 11.2012.



          We would like to thank Mr. Anusan Kanagalingam, who, in memory of his grandfather Vaithilingam Kanesu, donated $1500.00(Rs190000.00) through the Araneri school project to help finish restoring the front falls of the Analaitivu Public Hospital.
 We want to share this good news and generosity with everyone and hope that others will choose to follow his example in honouring his family by helping those in need.
 On behalf of Araneri school,
Mr. Selva Veerakathy
May 11, 2012