Monday 27 January 2014

கொட்டிவைச்ச ஆசையெல்லாம்
குதிர் விரிஞ்சு கதிராச்சு.
கோபுரத்து நிழல் விழுந்து
பசுமையில நனைஞ்சாச்சு.
அலை நுரையில் கரையருகில்
அன்றொரு நாள் கால் பதிச்ச
நிலையிலதான் மனசாச்சு.       
நீல நிறம் பச்சை நிறம் கலந்ததினால்- ஊர்
நெய்தலுமாய் மருதமுமாய் நிமிர்ந்தாச்சு.
  
      படம்: துஷியந்தன்.     

Thursday 23 January 2014

மனதில் விளைந்த வயல்வெளி.

                இந்த வருடம் வயல்வெளிகளில் பசுமைப் பட்டாடை போர்த்தி அழகுபடுத்திய இயற்கையை நாம் வணங்குவோம். அனலைதீவு வயல்வெளிகளை வேலியடைத்து நெல்விதைக்க உதவிய மனவெளிகளில் விதைத்து வயல்வெளிகளில் அறுவடைசெய்யத்தெரிந்த  மதிப்புக்குரிய அனலையின் தருமக்கரத்திற்கு சொந்தமான அந்த மனிதருக்கு நாம் நமது பசுமை நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வது ஊரவர்களனைவரினதும் தலையாய கடமையாகும். இன்னும் பல நற்பணிகளை ஊருக்குத் தொடர்ந்து செய்வார்  என்பது திண்ணம்.
                நிழற்படங்களையே உரிமைகோரும் இன்றைய உலகில் இவர்போன்றவர்களின் சிந்தனையும் செயற்பாடுகளும் மதிக்கப்படுவதோடு பின்பற்றப்படவும் வேண்டும். 
                                                                                                    - அனலை சமூகநல மன்றம்.
                                                                                                       Jan 23.2014.