Sunday 28 February 2021

நடைமுறை.

ஒவ்வொரு வளவுக்குள்ளும் நான்கு கத்தரி நடுங்கள்.
கிழமைக்கு ஓரிரு தடவை இயற்கையான காய்களைத் தரும்.
நடைமுறை முன்மாதிரிகள் மனங்களில் வேரூன்றவேண்டும்.
உழைப்பு: க.உதயப்பிரகாஷ்





 

Saturday 27 February 2021

நன்றி .




அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய முதல்வர்  திரு.நா.இராதாகிருஸ்ணன் அவர்களின் முயற்சியால்  வித்தியாலய உள் மண்டபத்தின் வெளிச்சத்தை அதிகரிக்குமுகமாக கூரையில் கண்ணாடி பதித்த ஓடுகள் மாற்றுவதற்கான  உதவியை அனலைதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த  திரு.நாகலிங்கம் நேமிநாதன் அவர்களின் நினைவாக அவரது உறவினர்கள் வழங்கியுள்ளனர்.
இந்த நல்முயற்சியில் பங்குகொண்டு 200 ஓடுகளையும் கொழும்பிலிருந்து யாழ் வரை தருவித்துத்தந்துதவிய
மு.புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை  அதிபர் மதிப்பிற்குரிய திரு நல்லையா அமிர்தநாதன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றி கூறிக்கொள்கிறோம்.

-FB:Analaitivu Sathasiva MV Analaitivu














 

Saturday 20 February 2021



யாழ் அனலைதீவு அமரர் செல்வா வீரகத்தி நினைவாக இன்று
மு/வேணாவில் சிறி முருகாணந்த வித்தியாலய மாணவர் ஒருவருக்கு பாதணியும்
மு/பாரதி மகா வித்தியாலய மாணவர்கள் இருவருக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நன்றி _ செல்வா வீரகத்தி அவர்களின் நண்பர்கள்.



 

Tuesday 16 February 2021

பசுமை.


குழந்தைகள் சின்னஞ்சிறு பிஞ்சுக் கரங்களால் மரங்கள் நடும் அழகு எதிர்காலத்தின் முளைப்பு.
அவர்கள் மனதில் பசுமையை விதைக்க பாடசாலை சமூகமும் பசுமை அனலை அமைப்பினரும் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி மனதாரப் பாராட்டி வரவேற்கத்தக்க அரிய முன்மாதிரியாகும்.
பசுமை அனலை அமைப்பின் தொண்டுகள் தொடர ஊர்மக்களனைவரினதும் சார்பாக உளமார்ந்த
வாழ்த்துக்கள்
.
















 

Sunday 14 February 2021

Saturday 13 February 2021

யாருக்கு?


 

தொடரும்
இனி.

இமயத்துக் காற்றை
உள்ளங்கையில் ஊட்டிவிடும்
சீனத்து வித்தைகள் நம்தெருவில் நடக்கும்.

ஐங்கோணச் சுவருக்கள் இருந்தபடியே
மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பர்.
கருவாடாய் நமக்கே விற்பர்.

கறுப்புத் திரவத் தங்கம் அள்ளிமுடித்து
மலட்டுப் புழுதியில்  விதைக்க
ஒருமுறை மட்டுமே  முளைக்கும் விதைகள் தருவர்.

மறதி சேகரித்த தேனீகள்
கூடு திரும்பா.

மழைநீர் சேமிக்கும் மூளைகளை
உப்பில் மூடி
கடல்  நீரிலிருந்து குடிநீர் தருவர்.

நோய்களில் மடித்துவைத்து
இலகுவான உணவு தருவர்.

மருந்துகள் உணவாகும்.

மரணம் உயிர்வாழும்.

அரை நூற்றாண்டுகளுக்குமுன் கண்டுபிடித்த கனிமங்களை 
"
உதவி" என்ற சொல்லைக் கூர்மைப்படுத்தி வறுகுவர்.

அபிவிருத்தி என்பர்.

யாருக்கு?

-
சிவம்.

 2011