Saturday 27 April 2013










Wednesday 17 April 2013


Saturday 13 April 2013

மனப் பயிற்சி.

பெருமதிப்புக்குரிய அனலை மக்களுக்கு!
                நமது நெஞ்சோரமாய் மயிலிறகு தடவும் நமது ஊரின் பழைய நினைவுகளோடு புதிதாய் உயிரோட்டத்தை உசுப்பிவிடும் எம்மாலியன்ற நிழற்பட பதிவுகளின் மூலம் தங்களனைவருடனும் இரத்தினச்சுருக்கமாக பேசுவதற்காகவும் ,தகவல்களைப் பரிமாறுவதற்காகவும் எமது செயற்பாடுகளின் சாட்சியங்களை நமது முகநூலில் பதிவுசெய்கிறோம்.
                படங்கள்  வார்த்தைகளைவிட அதிகமாவும் ,ஆழமாகவும், விரைவாகவும் உணர்வுகளோடு பேசிவிடுகின்றன.
                நமது ஊரின் நிகழ்வுகளை எல்லோரும் அறிவதற்கு உறுதுணையாக அவற்றை நாம் எல்லோரும் (Share) பகிர்ந்துகொள்கின்ற தேவை அதிகமாகவேயுள்ளது.
                அலைமுதிற்சோலை http://mass7-lk.blogspot.ca/ முகவரியை நம்மால் முடிந்தவரை  நமக்குத்தெரிந்த அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதன் மூலம் நம்மாலியன்ற நற்பணியைச் செய்தோமென்ற மனநிறைவையடைவோம்.
                நமது முகநூலில் இணைந்துள்ள அனைவரும் நமது பதிவுகளைப் பகிர்வதன் மூலம் நமதூரின் வளர்ச்சியிலும் மகிழ்விலும் நாம் மானசீகமான பங்காற்ற முடியும்.
                காசு பணமல்ல.உளளங்கையில் உருண்டு சுருண்டுபோன இன்றைய உலகின் தபால்காரனின் முதுகில் சிறிதாய் ஒரு "க்ளிக் " அவ்வளவுதான்.
மனது பக்குவத்தில் நனைந்து ஈரமாகிவிடும்.
                அந்த அப்பழுக்கற்ற ஈரம் வருங்காலச்சந்ததியின் எதிர்காலத்தில் பெருநதியாய் பாய்ந்தோடும்.
அறநெறிப் பாடசாலை.
திரு..நாராயணன்.
April  12.2013.



                 அனலைதீவு தெற்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் எடுக்கப்பட்ட படங்கள்.
                விளையாட்டுக்களிலும் மற்றும் மாணவர்களின் மனதை மலரச்செய்யும் எல்லா நிகழ்வுகளிலும் கற்றலுக்கான ஊக்குவிப்பை ஊற்றி ஊட்டி நிரப்புதல் என்பது அரசிலிருந்து சமூகத்தின் கடைசி மனிதன் வரையிலான சமூகப்பொறுப்பாகும்.
அறநெறிப் பாடசாலை.