Friday 30 June 2017

விழிப்புணர்வு.

 ஊர்காவற்றுறை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் நடாத்தப்பட்ட சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் ஊர்வலமும் இன்றைய தினம் அனலைதீவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை சமுர்த்தி முகாமையாளர்,நிர்வாக கிராம உத்தியோகத்தர்,பொதுச்சுகாதாரப் பரிசோதகர்,பிரிவின் கிராம உத்தியாகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,ஆசிரியர்கள்,மா
ணவர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
- -படங்களுடன் தகவல்: திரு.த.கோகுலராஜ்.

















கைவினைப் பயிற்சி.

 ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினால் அனலைதீவு துஃ38 கிராம பிரிவிற்குட்பட்ட மக்களுக்கான   பனை ஓலையிலான கைவினைப் பயிற்சி வேலைத் திடம்   கடந்த ஒரு வார காலமாக  இடம்பெற்றது. இதில் 33 பேர் கலந்து கொண்டு பயிற்சியினைப்பெற்றுக்கொண்டனர்.  இப் பயிற்சியினை எமது மக்களுக்கு ஒழுங்கமைத்த பிரதேச செயலர், பொறுப்பான உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனலைதீவு மாதர் சங்கம் அனைவருக்கும் நன்றிகளை தேரிவித்துக் கொள்கின்றோம்.
படங்களுடன் தகவல்: திரு.த.கோகுலராஜ்.











கும்பபிஷேகம்.


படங்களுடன் தகவல்: திரு.த.கோகுலராஜ்.



Saturday 17 June 2017

மாணவர்கள்.


தேசிய கல்வியற் கல்லூரிக்கு அனலைதீவில் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு.
தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வியாண்டு 2016/2018 மாணவர்களின் பெயர் விபரங்கள் கடந்த வாரம் வெளியாகி இருந்து. கடந்த 2014 ஆண்டு கா.போ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான தேசிய கல்வியற் கல்லூரி தெரிவு கடந்த ஆண்டு இடம்பெற்றது இதில் எமது ஊரினைச் சேர்ந்த தேவபாலன் நிதர்சன் (கண்டி தேசிய கல்வியற் கல்லூரி ) மற்றும் கேமமாளினி செளந்தராஜன் (யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி) ஆகிய இருவரும் தெரிவாகியுள்ளனர்.
இவர்களுடைய கல்வி பயணம் சிறப்பாக அமைய எமது அனலைதீவு சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
தகவல்: திரு.த.கோகுலராஜ்.






தாகம்.

 வெய்யில் காலங்களில் கால்நடைகள் தாகம் தீர்த்து உயிர்வாழ  ஊரில் அங்காங்கே தண்ணீர்த் தொட்டிகளைக் கட்டி உதவுமாறு அனலைதீவு ஐயனார்கோவில் நிர்வாகத்தினரை பணிவோடும் நம்பிக்கையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: திரு.த.கோகுலராஜ்.




Sunday 4 June 2017

வேண்டுகிறோம்.


 அனலைதீவு இலவச ஆரம்ப அறிமுக கணனி வகுப்பில் மாணவர்கள்.
அன்பான அனலைதீவு பெற்றோர் சமூகத்திற்கான பணிவான வேண்டுகோள்.
மாணவர்களின் வரவு மிகவும் மனவருத்தத்திற்குரியதும், அசெளகரியம் நிறைந்ததாகவும், செலவிடும் நிதிக்கான நிறைவின்மையுடையதாகவும் தொடர்ந்து இருப்பது இப்பணியை நிறுத்திவிடுவதற்கான சாத்தியப்பாடுகளை அதிகரிக்கின்றன. தயவுசெய்து ஊரிலுள்ள அமைப்புகள், சங்கங்கள், பெரியவர்கள், அரச நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆசிரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இலவச கணனி வகுப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கான அடிப்படைத்தேவையான மாணவர்களின் ஓழுங்கான, அதிகபட்ச வரவை உறுதிசெய்து உதவுமாறு பணிவோடு வேண்டுகிறோம். அனலைதீவில் உள்ளவர்களோடு பொதுவெளியில் உரையாடுவது இப்போது இலகுவாக இருப்பதால்
இப்பதிவை இங்கு பதிவிடுகிறோம். நன்றி.