Sunday 21 July 2013

கற்றல்.


பேரன்பிற்குரியவர்களோடு!
            அனலைதீவு அறநெறிப் பாடசாலை தொடர்ந்து மாலைநேர வகுப்புகளை நடாத்திவருகிறது.முதலாம் தரம் தொடக்கம் நான்காம் தரம் வரையான மாணவர்களுக்கும் மற்றும் அத்தியாவசிய அடிப்படை கல்வியூட்டல் பயனாளிகளாகவுள்ள மாணவர்களுக்கும் தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுகின்றன. அவசியமான கல்விசார் கொடுப்பனவுகளோடு கற்கைக் கொடுப்பனவுகளும் எமது புரிந்துணர்வுமிக்க ஊரவர்களின் நல்லுதவியோடு அறநெறி நிர்வாகம் செய்துவருகிறது.
அறநெறிப் பாடசாலை.
July 22.2013.







தேர்திருவிழா.

Saturday 20 July 2013

திருத்தேர்.


     அனலை ஐயனார் திருத்தேர் நிகழ்வை நினைந்து உளம் குளிரப் போற்றுவோம். ஐயனின் ஆலய மணியோசை திக்கெட்டும் எதிரொலிக்க பச்சைப் பசீரென புத்தாடை துளசிமாலை அணிந்து பூரணை புஸ்கலை சமேதராய் அமர்ந்து புத்தொளி முகத்தில் தெறிக்க ஆனந்த ரூபமாய் சித்திரத்திருத்தேரிலிருந்து பக்தர்கள் புடைசூழ மெல்லென மண்டபத்தில் அமர்ந்தனரே. மண்டபப் படியுடன் அலங்கார தீபாராதனைகள் ஒளிரவே அந்தணர்கள் வேதம் ஓதி மலர்கள் சொரிந்திடவே ஓதுவார் திருமுறைகள் பாடி பரவசம் காணவே. நாதஸ்வரம் தவில் இன்னிசை தந்திடவே குடைகளுடன் கொடி ஆலவட்டம் முன் நகர்ந்திடவே பக்தர்கள் பரவசம் அடைந்து உன் நாமம் ஓதிட பக்தைகள் சிரசினில் கற்பூர சட்டியினை சுமந்தே நடந்திட சங்கொலி முழங்க அடியார்கள் புஜம்தனில் நர்த்தனம் ஆடி ஆடி எழுந்தருளும் ஐயன் பன்னீர் மழைதனில் குளிர்ந்திடவே  வானில் மலரிதழ்கள் சொரிந்து நறுமணம் வீசிடவே தம்நிலை மறந்த அடியார்கள் உன்நிலை தாவி கூத்தாடிடவே பால் காவடி பறவைக்காவடிகள் குதித்தாடி வீதிவலம் வரவே ஆடும் அடியார்கள் உனைநாடித் தொழுது பணிந்திடவே  அன்னம்போல் நடை நடந்து வாசலை அடைந்து தரித்திடவே பாங்குடனே அந்தணர் இருகரம்கொண்டு ஆராத்தியினை அசைந்து நெளிந்து உன்முகம்நோக்கி திலகம் இட்டனரே. கும்பத்து நீர்கொண்டு பாதக்கமலம்தனை நீராட்டி பூசித்தனரே. கற்பூர தீபமேற்றி பக்தி நெறியுடன் திருமுறை ஓதி அவையிடம் அடையும்போது ஒலித்திடுமே.பாலாளியிற்றுயில் மாலரன் பாலா அனகூலா நீலாளி கற்றனையூருறை நிமலா எச்சரிக்கை. எங்கள் அமலா எச்சரிக்கை என அடியார்கள் உள்ளத்தில் உறைந்திடுமே.. உன்நாமம். மகா அபிஷேகப் பிரியனே! அலங்கார வடிவம் பூண்டு பூரண புஸ்கலா தேவிகள் இருபுறம் அமர்ந்த காட்சியினை கண்கள் கண்டு களிப்புற்றதே..எங்கள் ஐயனே! அனலைநகர் காவலனே!  உன்தேர்வலம்வரும் காட்சியினை எமக்களித்த ஐயனாரே! உன்னடி சரணமென வந்தோம். எங்கள் ஐயனாரே நயினாகுளம் அமர்வோனே. அடியார்களுக்கருளும் ஐயனாரே. கூழாவடியுறை அரிகரபுத்திரனே ஐயனாரே சரணம். ஐயனாரே போற்றி போற்றி.
                                                          திரு.த.நாராயணன். 
July 21.2013.