Monday 30 March 2015

ஊர்க்கோலங்கள்.

 ஊர்க்கோலங்கள்.






Add caption



Saturday 28 March 2015


Friday 27 March 2015



Sunday 22 March 2015








Saturday 21 March 2015

மரங்கள்.

அனலைதீவு அறநெறிப்பாடசாலை நிர்வாகத்தினரால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்ட மரங்கள்.
மரங்களின் நடுகையில் காலம்தான் மூலதனம். ஆர்வமுள்ள இயற்கையாளர்கள் தமது விருப்பமான மரங்களை, விரும்பிய இடங்களில் தங்களின் அன்புக்குரியவர்களின் ஞாபகமாக காலந்தாழ்த்தாது நடவுசெய்வது அடுத்த சந்ததிக்கு சுத்தமான காற்றையும் பருவமழையையும் உறுதிப்படுத்தும்.
இப்பதிவை பகிர்வதன்மூலமும் சில பல மரங்கள் பூமியில் நடப்படுவதற்கு உதவுபவராவீர்கள்.






Friday 20 March 2015

ஈனமான செயல்.




கனவு முதலாளிகளான, சாதியத்தில் முறுகிமூத்த தமிழ் மேட்டுக்குடிகளின் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான பிரகடனப்படுத்தப்படாத அகோரமான நிழல் யுத்தமொன்று நடந்துகொண்டேயிருக்கிறது.
குரூரமான,
மூர்க்கத்தனமான,
பகுத்தறிவற்ற இந்த இழி செயலை மாணவர்களின் உயிர்பறிக்கும் எண்ணம்கொண்டு செய்யுமளவிற்கு உந்திய நிஜமான காரணம் கண்டறியப்படவேண்டும்.
குற்றவாளியைக் கண்டுபிடித்துத் தண்டனை தருவது அவசியமானது.குற்றவாளியைத் தூண்டியவரையும், அதன் காரணியையும் கண்டறிந்துகொள்வது மிக அவசியமானது. சமூக அமைப்புகளும் அரசியல்வாதிகளும் இதுபோன்ற இன்னொரு ஈனமான செயல் இடம்பெறாதவண்ணம் செயற்படவேண்டும்.
இங்கு குறிவைக்கப்பட்டது
மாணவர்களின் உயிரா?
ஒரு சமூகத்தின் கல்வி வளர்ச்சியா? என்ற கேள்வி
ஒரு சமூகத்தின் கல்வி வளர்ச்சியின்மீதே இச்சதிச்செயல் இடம்பெற்றிருக்கிறது என்ற தெளிவான பதிலையே தருகிறது.
பதின்மூன்றும் பதின்மூன்றுக்கப்பாலும் எகிறிப்பாய்ந்தாலும் கொழும்பில் உள்ள அதிகாரத் தளத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதாகவே அமையும்.
மனிதத்தன்மையை வளர்த்தெடுக்காத சமூகம் சுதந்திரத்தை நுகராது.
கல்வியில் உயர்வதும், இனவாதத்தையும் சாதியத்தையும் பயன்படுத்தி அரசியல் செய்யமுடியாத சமூகங்களாக இலங்கை முழுவதும் மாற்றமடைவதுமே சுபீட்சமான எதிர்காலத்தைத் தரும்.



படங்கள்:

News1st-பாடசாலை நீர் தாங்கியினுள் நஞ்சு குப்பி - ஏழாலையில் 27 மாணவர்கள் ...

Tuesday 17 March 2015

விளையாட்டுப்போட்டி.



March 17.2015ம் திகதி அனலைதீவு வடலூர் தமிழ்க்கலவன் வித்தியாலயத்தில் நடைபெற்ற  இல்ல விளையாட்டுப்போட்டியின்போதான படங்கள்.