Friday 31 August 2012

கற்றுக்கொள்வதில்லை.


நாங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட ஒரே ஒரு விடயம் என்னவென்றால்
நாங்கள் அனுபவத்திலிருந்து ஒன்றையும் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான்
-
சின்னு அச்சபே -
”The only thing we have learnt from experience is that we learn nothing from experience.” ( Chinua Achebe)

Thursday 30 August 2012

அடிகளார்.


மதங்களை வீட்டுக்குள்ளேயே விட்டுவிடுங்கள்.
 வெளியில் வரும்போது இந்தியனாக இருங்கள்.
உலகத்தைப் பார்க்கும்போது மனிதனாக இருங்கள்.
                உயர்திரு.குன்றக்குடி அடிகளார்.

Friday 24 August 2012

கல்வி.


யாழ் பல்கலைக்கழக மாணவன் செல்வன்.சௌ.விஜயதாஸ் அவர்களின் மாதாந்த கல்விச் செலவுக்கான தொகையின் ஒரு பகுதியான ரூபா மூவாயிரத்தை (3000.00)பிரான்ஸ் நாட்டில் வதியும் திரு.மு.நடராசா குடும்பத்தினரின் மனப்பூர்வமான மாதாந்த நிதியுதவியோடு அறநெறிப் பாடசாலை பொறுப்பேற்றுக் கொள்கிறது என்ற மகிழ்வான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்வுறுகிறோம்.
அறநெறிப் பாடசாலை.
திரு.த.நாராயணன்.
August 24.2012.

Wednesday 22 August 2012

Monday 20 August 2012

மாதிரி.

ஆட்டோக்கள் எல்லாம் வெய்யிலுக்கு குடைமாதிரி ஆயிடுத்து.

விமர்சகன்.


விமர்சகர்களை இரண்டுவகையாகப் பார்க்கலாம்.
சமூக நோக்குள்ள விமர்சகன்.
விமர்சனமே நோக்காகக் கொண்டவன்.
சமூகத்தின்மீது மயிலிறகு தடவுபவன் நோக்குள்ள விமர்சகன்.
 தனக்குத்தானே மயிலிறகு வீசிக்கொள்பவன் விமர்சனமே நோக்காகக் கொண்டவன்.
இருவரிடமும் மயிலிறகு இருக்கிறது என்பதை நாம் புரிதல்வேண்டும்.
தேவையான மாற்றத்தை நாம்தான் ஏற்படுத்த வேண்டும்.
                                         அறநெறிப் பாடசாலை.

இனிப்பு.


Sunday 19 August 2012

Thursday 16 August 2012

மனதோடு.....


 

    கனேடிய அனலைதீவு கலாச்சார ஒன்றியத்தின் முழுமுயற்சியினால் ஊர்காவற்துறை பிரதேச சபையோடிணைந்து மேலும் அழகுபடுத்தப்பட்டுள்ள அனலைதீவு பொது நூலகத்தின் வெளிச்சுற்று மற்றும் முன்னரங்குத் தோற்றங்கள் வெகுசிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு மிக நேர்த்தியான தொழிலாளர்களின் கைவண்ணமும் சிறப்புற அமைந்திருக்கிறது.
    கனேடிய அனலைதீவு கலாச்சார ஒன்றியத்தின் செயற்பாட்டிற்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்.
மேலும் பற்பல நற்செயல்களை ஊரில் செய்து முடிக்க எமது வாழ்த்துக்கள்.
அறநெறிப் பாடசாலை.
 திரு.. நாராயணன்.
August 16.2012.

Tuesday 14 August 2012

மாணவர்கள்.

அனலைதீவு அறநெறிப் பாடசாலையில் மாணவர்கள்.

Monday 13 August 2012

விமர்சகன்.


விமர்சகர்களை இரண்டுவகையாகப் பார்க்கலாம்.
சமூக நோக்குள்ள விமர்சகன்.
விமர்சனமே நோக்காகக் கொண்டவன்.
சமூகத்தின்மீது மயிலிறகு தடவுபவன் நோக்குள்ள விமர்சகன்.
 தனக்குத்தானே மயிலிறகு வீசிக்கொள்பவன் விமர்சனமே நோக்காகக் கொண்டவன்.
இருவரிடமும் மயிலிறகு இருக்கிறது என்பதை நாம் புரிதல்வேண்டும்.
தேவையான மாற்றத்தை நாம்தான் ஏற்படுத்த வேண்டும்.
                                         அறநெறிப் பாடசாலை.

Saturday 11 August 2012

மனதோடு மனது...

 மதிப்புக்குரியவர்களே!
            நமது சமூகத்தின் கட்டமைப்பான, திடமான,ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு
தயவு தாட்சண்யமற்ற ,
பிரதேச வாதங்களை வளர்த்துவிடாத,
 இன ஒருமைப்பாட்டை குலைத்துவிடாத ,
தனிப்பட்ட சுயநலத்திற்காக மனிதனின் நுண்ணுணர்வுகளான மதம், இனம் மொழி,சார்ந்த உணர்வுகளைக் கூர்மைப்படுத்தாத,
நேர்மையான எதிர்வாதங்களுக்கு மதிப்பளிக்கின்ற,
எதிர்க்கருத்துள்ளவர்களை எதிரிகளாகக்கருதாத ,
வளமான ,
மனம்திறந்த
விமர்சன மேடை மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.
அறநெறிப் பாடசாலை.
திரு..நாராயணன்.
August 11.2012

Saturday 4 August 2012

நெடுந்தீவு முகிலன்.

அகப்பை காம்பால் மாவு கிளறி
அரிசிப் பேணியால் கொத்தி
ஓலைப்பெட்டியில் அவியும்
அம்மாவின் புட்டையும்
பழங்கறிச்சட்டியையும் நான்
பதம் பார்த்ததையும்...

அக்காளும் தங்கச்சியும்
மாத்துலைக்கை போட்டு
கை வலித்த போது – விரல்களுக்கு
நான் நல்லெண்ணை தடவியதையும்...

ஒல்லித்தேங்காய்களை இணைத்து
வாய்க்காலுக்குள் நீந்தப்பழகியபோது
காற்சட்டை கழன்றதை பக்கத்துவீட்டு
பார்வதி பார்த்து சிரித்ததையையும்...

புத்து இடித்து கறையான் கொண்டுவந்து
அப்பா வளர்த்த கோழி குஞ்சுகளை
கீரியும் பிலாந்தும் சண்டை பிடித்து திண்றதையும்...

வேப்பம் பூ வடகமும்
காத்தோட்டியம் காய் சீவலும் - அப்பா
அப்பாவுக்கு பிடிக்கும்
ஆடி அமாவாசை விரதத்தையும் ...

ஓடியல் கூழும் ஒற்றைப்பனை கள்ளும்
முற்றத்து கொய்யாவின் கீழ்
சுற்றி இருந்து பருகியதையும்...

பாட்டிகளின் ஒப்பாரி ஊரில் இருந்தே
யமனை ஓடஓட கலைப்பதையும் ...

“இப்போதும் நினைக்க இனிக்கிறதே”

இதில் ஒன்றையேனும் என்
மகன் அனுபவிப்பானா…

“இப்போதே என் வீட்டுக்காரி வெளிநாடு போவோம் என்கிறாள்”

நெடுந்தீவு முகிலன்.
04-08-2012