Wednesday 23 August 2017

நிழலும் நிலமும்.



நிழலும் நிலமும்.

சுடுமணல் தாங்காப் பாதம்
மரமில்லையென்றால் வேகும்.
புத்திக்கும் பக்திக்கும்  விதை போடு.
புத்திக்குள் வளரும் பெரும் காடு.
மூச்சுக்கும் காற்றுக்கும் மரம் வேண்டும்.
மனதுக்கும் மரமொன்று நடவேண்டும்.
சுற்றிக் கடல் சூழ்ந்திருக்கும் பூமியிது
ஆழக்கடல் அள்ளிச் செய்த சாமியிது.
பச்சிலையைக் கட்டிக் கொஞ்சம் ஆறவிடு.
பாலாற்றில் தேன் சுனையா ஓடவிடு.
மரங்களை நீ நட்டுவைச்சா
பேரப்பிள்ளை நிழல் குடிப்பான்.
மரங்களை நீ சாய்த்து விட்டா
உன் பிள்ளை மூச்சடைப்பான்.
கடலும்தான் தன் மடியில்
மரத்தோட்டம் வைச்சிருக்கு.
காவலுக்கு கரையை வைத்து
உன் நிலத்தைச் தைச்சிருக்கு.
கடற்காத்து மேச்சலுக்கு
இலை பார்த்து மரத்தை நடு.
காலம் உன்னை மேயும் முன்னே
ஆழம் பார்த்து வேரை விடு.
உன்னைச் சுமக்கும் மண்ணுக்கு
ஒரு மரமேனும் நட்டுவிடு.
மண்ணைச் சுமக்கும் மரத்திற்கு
உயிரைத் துளியாய் விட்டுவிடு

- சிவம்.

 அனலைதீவு ஐயனார் கோவில் முன்றலில் நிற்கின்ற விருட்சங்களான அரச மரம் மலை வேம்பு இலுப்பை மரம் போன்றவை   1985ம் ஆண்டு திரு.த.திருநீலகண்டன் அவர்களால் நடப்பட்டவை என்ற இந்த இன்றைய தேவை கருதிய   பதிவானது பார்ப்பவர்களின் மனதில் காலம் தருணம் பார்த்து செய்யும் செயல்கள் எதிர்காலத்தில் எப்படி வளர்ந்து உயர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கையையும் ஆர்வத்தையும் உண்டாக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வருடம் இம்மரங்களின் கீழ் நிழலாறிய  உள்ளங்கள் ஊர் நிறை மரங்களை நடவேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாகும்.
32 வருடங்களுக்கு முன்பாக தொலைநோக்கோடு இம்மரங்களை ஆலய முன்றலில் நட்டுவைத்த
திரு.த. திருநீலகண்டன் அவர்களுக்கு ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
 படங்கள்: திரு.த.கோகுலராஜ்.

















Sunday 20 August 2017

 ஊர்காவற்றுறை பிரதேச சபையினால் அனலைதீவு J/38 பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் கடந்த ஆவனி 18 திகதி வெள்ளிக்கிழமை மாலை 07.00 மணியளவில் நடைபெற்றது. இப் பிரதேசத்திற்கு   தேவையான அபிவிருத்தி வேலை திட்டம் என்ன  என்பதை மக்களினால் முன்மொழியப்பட்டு அதனை பிரதேச சபையினுடைய அபிவிருத்தி வேலைத்திட்ட அறிக்கையில் இணைத்துக் கொள்வதேயாகும். இதில் ஊர்காவற்றுறை பிரதேச சபை பொறுப்பதிகாரிகள் மற்றும் அனலைதீவு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
படங்களுடன் தகவல்: திரு.த.கோகுலராஜ்.







Wednesday 16 August 2017

பாலம்.

 அனலைதீவு:  அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள்.



Saturday 12 August 2017

தொழில்நுட்ப அலசல்: யாழ்ப்பாண கடல் நீரேரித் திட்டம்

தொழில்நுட்ப அலசல்: யாழ்ப்பாண கடல் நீரேரித் திட்டம்: யாழ்ப்பாணமானது எந்தவித மேற்பரப்பு நன்னீர் ஆதாரங்களையும் கொண்டிராத ஓர்பகுதியியாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மழைநீர் தேங்கி நிற்கும் க...

Thursday 10 August 2017

பனம்பொருள்.


மதிப்பிற்குரியவர்களோடு!
பனை வளங்களின் உற்பத்திப்பொருட்களை அதிகப்படுத்துவதன்மூலம் நெகிழிப் பொருட்களின் பாவனையை மட்டுப்படுத்துவதில் தொடங்கி முற்றாக தவிர்த்துக்கொள்வதுவரையான முயற்சியின் முதற்படியாக பனம்பொருள் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்துமுகமாகவும் பனை வளங்களை அதியுச்ச பாவனைக்குட்படுத்துவதற்காகவும்
இவ்வருட அனலைதீவு ஐயனார்கோவில் திருவழாவிற்கான 500 அர்ச்சனைப்பெட்டிகளை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கொள்வனவுசெய்து அவர்களின் உழைப்பினைக் கௌரவப்படுத்தி சுற்றுச் சூழலையும் இயற்கையையும் போற்றும்படியான முன்மாதிரியை நடைமுறைப்படுத்த முனைந்திருக்கிறோம்.
பனைவளங்களால் பயன்பெறவேண்டிய நிலையிலுள்ள பனம்பொருள் உற்பத்தியாளர்களிடமிருந்து 500 அர்ச்சனைப் பெட்டிகளை ஊக்குவிப்புத் தொகையுடனான விலைக்கு வாங்கி அவற்றை அனலைதீவு மாதர் சங்க நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளோம். இவற்றை சந்தை விலைக்கு விற்றுவரும் பணத்தை அனலைதீவு மாதர் சங்க நிர்வாகத்தினர் பனம்பொருள் உற்பத்தி வளர்ச்சிக்காக மீண்டும் மீணடும் பயன்படுத்துவார்கள்.

அனலைதீவு ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் இந்தவருட திருவிழாவின்போது நெகிழிப் பொருட்களை தவிர்த்து ஊரிலுள்ள பனம்பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் தங்களாலான நிர்வாக ரீதியான நடைமுறைகளை அமுல்படுத்தியதற்காக நமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்வோம்.
இம்முயற்சியில் பங்காற்றி ஒத்துழைப்பு வழங்கிய அனலைதீவு மாதர் சங்கத்தினர் மற்றும் திரு.த.கோகுலராஜ் ஆகியோருக்கு எமது நன்றிகள். இம்முன்மாதிரியை செயற்படுத்த ஆதரவு வழங்கிய மதிப்பிற்குரிய ஊற்காவற்துறை பிரதேச செயலர்மற்றும் கிராம அலுவலர் ஆகியோருக்கும் ஊர் மக்கள் சார்பாக நன்றிகள்.
ஊரிலுள்ள பனம்பொருள் உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும்.