Monday 26 May 2014

பக்திப்பாடல்கள்.




அனலைதீவு அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத மகாவிஷ்ணு (வல்லியப்பர்) சுவாமி திருக்கோவில்  பக்திப்பாடல்கள்.
சிறப்பாக எழுதி இசையமைக்கப்பட்டுள்ள  இப்பாடல்களை அனைவரும் கேட்கவேண்டும் என்ற நோக்கோடு இப்பாடல்களை பதிவுசெய்யும் நாம் இப்பாடல்களை எழுதியவர்கள், இசையமைத்தவர்கள் மற்றும் வெளியிட்டவர்களனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்ளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் விபரங்களறிய திரு.க.மகாலிங்கம்(ஜேர்மனி) 49 23 321 3606 அவர்களின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.
அனலை சமூக நல மன்றம்.
May 25.2014.

Sunday 25 May 2014



Tuesday 20 May 2014

சிவரமணி.

விடுதலைப் போராட்ட நிழலாகபுதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிப்போம் வாருங்கள் தோழியரேஎன்று எழுதிய நெருப்பு பற்றி, இளைஞர்களின் விடுதலை எழுச்சியின் ிண்ணனியில்என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி, ஒரேயொரு கைக்குண்டு, என் எதிரிக்கெதிராய்ப் போரைப் பிரகடனம் செய்ய என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி ஒரேயொரு கைக்குண்டு எனினும் நான் தளரவில்லை......” என்று வீரமா உருவாகிய தமிழர் கலை இலக்கிய மலர்ச்சியின் எழுச்சியில் உருவாக்கிய ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர் சிவரமணி, சிவரமணி எழுதிய எல்லாக் கவிதைகளையும்,சேர்த்து வைத்து இருந்த புத்தங்கங்கள் எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு நெருப்பு பத்த வைத்துப் போட்டு ,நித்திரைக் குளிசையை அள்ளிப்போட்டு "....மூச்சறுத்த மரணத்தின் சுவடுகள் என் பாதங்களுக்கிடையில் மூச்சையுற என் வெளிச்ச நோக்குகை இன்மையை விரட்டுகிறது...." என்று விரக்தியாக எழுதிய சிவரமணி இருவத்தி மூன்று வயதில் தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்டன.
சிவரமணி எங்களின் ஊரிலதான் உயர் கல்வி அறிவுள்ள பிண்ணனியில் இருந்த ஒரு குடும்பத்தில்ப் பிறந்தவா. பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ,அப்பா சின்ன வயசில் இறந்துபோக ,அம்மாவுடனும் ஒரே ஒரு சிறிய சகோதரியுடனும் வாழ்ந்தவா. கொஞ்சம் எல்லாரோடும் சேராத,அரசாங்க உத்தியோகம் செய்த வசதியான குடும்பம், சிவரமணி யாருடனும் அதிகம் பழகாத ஒரு அப்பாவிப் பெண் போன்ற தோற்றம் உடைய, மிகவும் உயரம் குறைந்த, யாரையும் அதிகம் நிமிர்ந்தே பார்க்காத அந்தப் பெண்ணின் உள்ளே ஒரு எரிமலை இருந்து, அது கவிதை வடிவில் எப்பவுமே வெடித்து வெளியே வர ,சிவரமணி தற்கொலை செய்த பின் பல விமர்சனங்கள்,நிழலான கருத்துக்கள் இலங்கையிலும் புலம் பெயர்நாடுகளிலும் வெளிவந்தன.
மர்மமான அந்த நிகழ்வின் சில விசியங்கள் இன்னும் பலருக்கு தெரிய வரவேயில்லை,காரணம் சிவரமணியே ஒரு மர்மமான கவிதாயினி.மேடையில் ஏறி கவிதை வாசித்தோ,அல்லது அப்போது யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த முக்கிய இலக்கிய சஞ்சிகைகளே அவரின் ஆக்கம் வெளிவரவில்லை எண்டு நினைக்கிறன்,அப்புறம் எப்படி சிவரமணி கவிதை உலகில் இவளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பதுக்குக் காரணம், சிவரமணி கவிதை எழுதிய விதம்,அதன் கவிதை மொழியின் வீரியம், அது ஏட்படுதிய ஜோசிக்க வைக்கும் சலசலப்பு எல்லாத் தரப்பையும் நீதி கேட்ட நியாயங்கள்.
மிகவும் சிறப்பாக ஆங்கில அறிவுள்ள சிவரமணி யாழ் பல் கலைகழகத்தில் படித்து,அங்கேயே பின்னர் ஆங்கில இன்டலெக்சுவல் இலக்கிய,அரசியல் புத்தகம், கட்டுரைகளை மொழி பெயர்தவா, இன்னுமொரு கம்பஸ் கவிதாயினி செல்வி, போன்றவர்களுடன் வேலை செய்தவா. சிவரமணி ஆரம்பத்தில் ...... என்ற அமைப்பின் அரசியல் விசுவாசியா இருந்து விடுதலை எழுச்சி கவிதைகளை விடவும் பெண்களின் சமூக விழிப்புணர்வுக் கவிதைகள் எழுதியவா, மனித உரிமை அமைப்புக்களுடன் நிழலாக இயங்கியவா,நீங்களே சொல்லுங்க பார்ப்பம், இவளவும் போதாதா ஒரு பெண்னை இயல்பாக இயங்க விடாமல் செய்வதுக்கு.
சொல்லபோனால் அவாவின் எழுதும் முறை அப்போது எழுதிக்கொண்டு இருந்த கவிஞ்சர்களின் ஸ்டைலை விடவித்தியாசமானது. முக்கியமா அவா ஆங்கிலக் கவிதைகள் மொழி பெயர்ததால் சில்வியா பிளாத் இன் " கொன்பெஸ்சனல் " ஸ்டைலில்,அலன ஜின்ச் பெர்கின் கோப வரிகளின் பாதிப்பு நிறையவே இருக்கு அவாவின் கவிதைகளில். எரிக்கா யங் எழுதிய கவிதைகள் போல சில தரமான கவிதைகள் எளிமையான தமிழில் எழுதிய சிவரமணி கடைசியில் சில்வியா பிளாத் போலவே தற்கொலை செய்ததுக்கு நிறைய மன அழுத்தக் காரணங்கள் அவாவின் வீட்டிலை அதிகமாயும் வீட்டுக்க்கு வெளியே நாட்டிலை கொஞ்சமும் இருந்தது..
ஈழ விடுதலைப் போராட்டதில் எல்லா இளஞர்,யுவதிகள் ஆர்வாமாய் இணைந்ததை " ..தேசத்தின் அறிவாளிகள் தெருக்களில் துப்பாக்கிகளுடன்...." என்று இயல்பாக எழுதிய சிவரமணி அவர்களே,ஜனநாஜகப் பாதையில் இருந்து கொஞ்சம் குளறுபடியாக பாதை மாறிய போது , சிவரமணியின் குரல் கொஞ்சம் காட்டமாக "....நிராகரிக்கப்பட முடியாதவள் நான்..... " என்று எழுதத் தொடங்கி ,துணிவோடு “....என்னிடம் ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை...” என்று எழுதி இன்னும் குழப்பமாக அந்த நாட்களில் இயங்கிய ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளின் குறுகிய மனப்பான்மை,போட்டி,பொறமை,எல்லாத்தையும்வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்பட்டுள்ளன.....”என்று எழுதிய பொழுதே சிவரமணியின் சிந்தனை வீச்சு கவனிக்கப்படத் தொடங்கி இருக்கலாம், அது அவாவுக்கும் தெரிந்து இருக்கலாம்.
எண்பதுகளின் புதுக் கவிதைப் போக்கில் கவிதை மொழியில் நிறைய புதுமை செய்த ஒரு அடக்கமான பெண் என்பதால் சிவரமணி ஈழத்துக் கவிதை வரலாற்றில், புரட்சிகர காலகட்டத்தின் மிக முக்கியமான கவிதாயினி என்பதுடன் இன்றைக்கு யாழ்பாணத்தில் இருந்து எழுதும் பெண் கவிதாயினிகளின் கவிதைகளில் சிவரமணி பற்ற வைத்த “..கூனல் விழுந்த எம்பொழுதுகளை நிமிர்த்தத்தக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை..” போன்ற பொறியைப் பார்க்கலாம்.
தற்கொலை ஒரு தற்காலிக பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு எண்டு சொல்லும் இந்த உலகத்தில், ஒரு படைப்பாளி வாழும் சுழல் எவளவு மன உளைச்சலை தனிப்படக் கொடுக்கும் என்பதுக்கு உதாரனமான சிவரமணியின் கவிதைகளைத் தொகுத்து கனடாவில் "விழிப்பு " பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ளன, பேராசிரியை சித்திரலேகா மவுனகுரு சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள . மின்னியல் வெப் ஊடறுவின் நூலகப்பகுதியிலும் சில கவிதைகள் வாசிக்க முடியும்...
யாழ்பாணத்தில் பிறந்த சிவரமணி பற்றியோ,அவர கவிதைகள் பற்றியோ யாழ்பாணத்தில் இருந்து எழுதும் எழுத்து ஜாம்பவான்கள் அதிகம் பேர் ஒண்டுமே எழுதவில்லை. தமிழ் நாட்டில் இருந்து எழுதும் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் ஒரு அருமையான கட்டுரை "....என்னையும் நிர்வாணமாக்கும் என்கிற நம்பிக்கைக் கீற்றில் கணங்களைக் கொழுத்தி என்னைப் பட்டைதீட்டிக் கொள்கிறேன்.." என்ற வரிகள் வரும் கவிதையையும்,வேறு சில கவிதைகளையும் சிலாகித்து, கமலா தாஸ் போன்ற இந்திய உப கண்டப் பெண்ணியல் கவிதாயினிகளை விடவும் மிகவும் சிறந்த ஒரு கவிதாயினி சிவரமணி என்று எழுதி இருந்தார்,அது நிறைய பேர் தமிழ் நாட்டில் சிவரமணி யார் எண்டு தேடி வாசிக்க வைத்தது.
இலங்கை ராணுவத்தின் அட்டகாசம் ,சகோதர இயக்கப் படு கொலைக் குளறுபடிகள் , இந்தியஅமைதி காக்கும் படை அமைதியை விலை பேசியது போன்ற , வரலாற்று நிகழ்வுகளின் நடுவே, மொழி இழந்த அப்பாவி மக்கள்,விதவைப் பெண்கள்,இயக்கப் போராளிகள், போராட்டம், ஜனநாஜகம், இவற்றின் நொந்து போன குரலின் குரல்வளையாக மாறிய சிவரமணியின் கவிதை வரிகள் ஒரு காலகட்டத்தின் தவிர்க்க முடியாத தரவாகப் பதிவாகிஎனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்......” என்று கையறுநிலை பற்றி எழுதி வைத்துவிட்டுச் சென்றவர் ,சிவரமணி .
சிவரமணியின் மரண வீட்டில், அவாவின் யாழ் பல்கலைக்கழக நண்பர்கள் ஒரே ஒரு கவிதை எழுதி ஒரு துண்டுப் பிரசுரம் போலக் கொடுத்தார்கள்,அந்தக் கவிதையின் கடைசி வரி இப்படி முடியும் " ,,,எல்லாம் முடிய முன்னர் முற்றுப்புள்ளியை ஏனம்மா முன்னுக்கு வைத்தாய் ...." எண்டு. ஏனோ தெரியவில்லை எங்கள் அன்புக்கு உரிய சிவரமணி தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்ட பின்னும் அந்த வரிகளை இன்னும் மறக்க முடியாமல், அதன் அர்த்தம் தானாகவே சொல்லும் வரிகளின் வேதனையை விளங்கிய எல்லா கவிதை ரசிகர்களுடனும் நானும் சேர்ந்த ,மனதில் நினைவு வைத்துக் கொண்டு , இதயத்தில்க் காவிக்கொண்டு தெரிகிறேன்.
...........சில கவிதை வரிகளையும , அதை எழுதியவர்களையும் அவளவு சுலபமாக, இதயத்தை விட்டு இறக்கி வைக்கவே முடியாது.......இதுதான் வாழ்க்கை......
நாவுக் அரசன்
ஒஸ்லோ19.05.14

 http://www.sooddram.com/

Saturday 17 May 2014

வெளி.


அழியாத வரம்புகளுக்குட்பட்ட வாழ்க்கை வெளியில் கொத்தித்தின்னும் ஞாபகக் குருவிகளுக்கான  நினைவுத்தானியங்கள் மனப்புதர்களின் உள்மடியில் இன்னும் ஒளிந்துதான் கிடக்கின்றன

Wednesday 14 May 2014

அனலையூர் ஐயனாரே போற்றி.



அனலையூர் ஐயனாரே போற்றி.
அலைகடல் சூழ் அனலையம்பதியுறை அரிகரன் குமரனே போற்றி
அரவம் அணிந்த சங்கரன் உமையவள் புதல்வனே போற்றி.
ஆதிசேடனுறை மாதவன் சிகாமணியே போற்றி
யானைமுகன் ஐங்கரனின் தம்பியே போற்றி
ஆறுபடை அதிபதி ஆறுமுகன் சோதரனே போற்றி
ஆழ்கடல் தாவி எழுந்தருளிய பெருமானே போற்றி
கூழாவடியுறை பாதம் பதித்தோனே போற்றி
நயினா குளமருகில் அமர்ந்த தேவனே போற்றி
காராளர் கூடி முறையிட ஆக்கம் புரிந்தோனே போற்றி
பூரணா புட்கலை ஆட்கொண்ட நாயகனே போற்றி
சித்தத்திலே வந்துதித்த எங்கள் ஐயனே போற்றி
காக்கும் காவலனே பேரின்ப சுந்தரனே போற்றி
உன்நாமம் ஓதி வருவோரை இரட்சிப்பவனே போற்றி
உனை நினைந்து நோன்பிருப்போரை அரவணைப்பவனே போற்றி
கரவறை அமர்ந்தே சுடரொளி பரப்பபவனே போற்றி
திருவடி அடைந்தோரை ஆதரிப்பவனே போற்றி
பிள்ளைவரம் வேண்டுவோர்க்கு சித்திக்க அருள் சுரப்பவனே போற்றி





யாதுமறியா திசை மாறியோரை காத்தருள்பவனே போற்றி
உன்பாதம் தழுவி உறங்குவோரை விழித்திட அருள்பவனே போற்றி
வழி நீர் மல்கும் பக்தரை காத்தருள்வாய் ஐயனே போற்றி
நெடுந்தூரம் சென்றாலும் கூட வந்தே அரவணைப்பவனே போற்றி
ஊன் உறக்கமின்றி உன்தலம் தஞ்சமென வருவோரை காப்பவனே போற்றி
அனிச்சமலர் வாடுவதுபோல வாடும் காராளரை இரட்சிப்பவனே போற்றி
வண்ண மலர் தொடுத்து உனக்களித்தே மகிழ்ந்தோரை மகிழ்விப்பவனே போற்றி
கடல் அலை கரை தாண்டி உன் அருள் தக்கெட்டும் பொழிபவனே போற்றி
தினம் தினம் நேசிக்கும் கூழாவடியுறை ஐயனே போற்றி
பூக்களெல்லாம் மலர்வதற்கு மழை பொழிய வைப்போனே போற்றி
மிழிரும் கண்களிலே ஒளிப்பிளம்பாய் வந்தோனே போற்றி
முரசின் எதிரொலி செவிகளில்முழங்கிட வைப்போனே போற்றி
காண்டா மணியோசை திக்கொட்டும் ஒலிரச்செய்பவனே போற்றி
குடிமக்கள் செல்வம் செழிக்க அருள் சரப்பவனே போற்றி
மேகங்கள் திரண்டு வான் மழை பொழிந்து சிறப்பிப்போனே போற்றி
 களனிகள் விளைந்திட அருளாசி புரிபவனே போற்றி



பசுவினங்கள் பால்சுரக்க பசுமை தருபவனே போற்றி
விக்கினங்கள் அளித்திடும் அனலையம்பெருமானே போற்றி
கடைக்கண் வீசியே அடியார்க்கருளும் வேந்தனே போற்றி.
விம்மி விம்மி வருவோரை ஆதரிப்பவனே போற்றி.
பக்தர் இதயங்களில் குடிகொள்ளும் சுவாமி ஐயனே போற்றி.
கலை நெறிகள் பாங்குடனே ஓங்கிட அருள் சரப்பவனே போற்றி.
வேங்கை மீதமர்ந்து விரைந்துவரும் ஐயனே போற்றி.
கரங்களில் செண்டாயுதம் தரித்து வருவோனே போற்றி.
கரத்தில் கிளி அமர வரமளித்த அரிகரன் குமரனே போற்றி.
 கஜமுக வாகனப்பிரியனே எங்கள் ஐயனே போற்றி.
 நெய் அபிஷேகப்பிரியனே எங்கள் ஐயனே போற்றி.
 சந்தனக் காப்பால் அழகுறும் மேனியனே போற்றி.
நீறணிந்த நெற்றியில் தலகம் ஒளிரும் ஐயனே போற்றி.
அலங்கார ரூபனாய் காட்சி தரம் எங்கள் ஐயனே போற்றி.
மிளிரும் தீபங்கள் ஒளிர்ந்திட திருமேனி காட்சியானவனே போற்றி
அந்தணர்கள் வேதங்கள் முழங்கிட செவியுற்றோனே போற்றி.
ஓதுவார் பதிகங்கள் பாடிவர பணிந்தருள்வோனே போற்றி.


நீருடன் மலரும் இணைந்து சொரிய தர்ப்பணமாய் கொண்டவனே போற்றி.
கலங்கரை வளக்கைப்போல எத்திசையும் ஆழ்பவனே போற்றி.
ஆனந்தக் களிப்புறும் அடியார்களை காக்கும் மெய்யனே போற்றி.
துன்பம் சூழ்ந்தபோதும் உன்னடி தஞ்சமென வருவோரை காப்பவனே போற்றி.
மனம் புழுங்கி நீர்மல்க உன்னடி சேர்ந்தோரை காப்பவனே போற்றி.
பக்தருக்கெல்லாம் மூலமாய் நின்றே காத்தருளும் வேந்தனே போற்றி.
அடியார் இதயக் கமலத்தில் வீற்று அரள் புரிபவனே போற்றி.
ஆழியிலே முத்திருக்கும் அடியார் கமலத்தில் முத்தாய் வீற்று இருப்பவனே போற்றி
புரியாத தத்துவத்தை பொருளுணர்ந்து உணர்த்தும் ஐயனே போற்றி.
எரிகின்ற தீயிலே பாவங்களை போக்கிட வைத்தோனெ போற்றி.
சுழிக்காற்றாய் சுழன்றபடி துன்பங்கள் வந்தாலும் காத்தருள்பவனே போற்றி.
சஞ்சலத்தை நீக்கியே அன்புடன்அரவணைப்பவனே போற்றி.
வானம் கலைவதில்லை உன்னருள் பொய்ப்பதில்லை இறைவனே போற்றி
நாவிலுன் நாமகீதங்கள் எழும்போதுசெவி சாய்ப்பவனே போற்றி.
கன்னியர்கள் சதுராட்டம் கண்டு மகிழ்ந்தே இரட்சிப்பவனே போற்றி.
பூசை மணி சங்கொலிகளும் ரீங்காரம் இசைத்திடுமே ஐயனே போற்றி.


விண்ணை நோக்கும் கோபுர தரிசனம் அருளிய தேவனே போற்றி.
சொந்த மண்ணோடு வாழ்பவரை உன் கண்ணோடு காப்பவனே போற்றி.
திரைகடல் தாண்டிச் செல்வோரை வளமுடன் காப்பவனே போற்றி.
காலம் கடந்தாலும் உன் நினைவு கொண்டோரை வாழ்விப்பவனே போற்றி.
உன்பாதம் காண்பதற்கு விழித்தெழுந்து விரைவோரை காப்பவனே போற்றி.
முப்புரி நூல் துலங்கிட தரித்த எங்கள் ஐயனே போற்றி.
கல்வியும் சீரும் கீர்த்தியும் பெருமையும் தந்தருள்பவனே போற்றி
கடல் குமுறி ஊருக்குள் புகுந்திட காராளரை காத்தருளிய பெருமானே போற்றி.
ஞானத் தீ தந்தருள்வாயே கூழாவடியுறை ஐயனே போற்றி.
நயினா வயல் மண் கொண்டு விழா சாந்தி செய்விப்பவனே போற்றி.
எண் திசைகளில் அரணாக பூதப்படை ஏவிய ஐயனே போற்றி.
யானை மீதமர்ந்து கொடியேற்றும் எங்கள் ஐயனாரே போற்றி.
ஆயிரத்தெட்டு சங்பாபிஷேகத்தில் உன் திருமேனி குளிர்ந்திடுமே ஐயனே போற்றி
கைலாச வாகனம் தரித்து ஈசனுடன் வலம்வரும் நாயகனே போற்றி.
ஆதிசேடனில் அமர்ந்து வீதியுலா வரும் எங்கள் ஐயனே போற்றி.

                                          

பூரணை புட்கலை சமேதராய் காமதேனுவை அலங்கரிப்பவனே போற்றி.
குதிரைமேல் தாவி வில்கொண்டு புளியந்தீவு ஏகும் ஐயனாரே போற்றி.
நாகேஸ்வரர் வீதியில் மானுடன் விளையாடம் வேந்தனே போற்றி.
அம்புகள் பாய்ந்தே வானத்தை நோக்க ஆலயம் திரும்பும் ஐயனே போற்றி.
கார்மேகம் படர்ந்தே மழை பொழிய ஆனந்தமாய் வரும் ரூபனே போற்றி.
அடியார்கள் இல்லங்கள் தோறும் தங்கி எழுந்தருளும் கோவே போற்றி.
இரதம் மேல் பவனி வந்தே அடியார் குறை களைபவனே போற்றி.
குவிந்த தேங்காய் நொடிப்பொழுதில் சிதறிட வைத்தோனே போற்றி.
வான் வெளியில் உன் நாமம் அதிர்வதைச் செவியுற்றோனே போற்றி.
வடம்பிடித்திழுப்போரை வழிகாட்டி அரவணைப்பவனே போற்றி.
தவழ்ந்தும் உருண்டும் பின்தொடரும் பக்தரை காப்பவனே போற்றி.
பாற்காவடி பறவைக் காவடி ஆடிவரக் குதூகலிப்பவனே போற்றி.
பசுமை சுமந்தே களி நடனம் புரிந்து வருபவனே போற்றி.
பன்னீர் துளிகள் பொழிந்திட ஆனந்தமாய் வருபவனே போற்றி.
மலர்கள் உன் மேனிமேல்பட்டு சுகந்தம் தந்திடுமே ஐயனே போற்றி
கோபுர வாசலில் பக்தர்கள் பரவசம் பொங்கி கூத்தாட இரசிப்பவனே போற்றி.



சிரசினில் கற்பூர தீயுடன் நடனமாடும் பக்தையைக் காப்பவனே போற்றி.
உன்முன் களிநடனமாடும் அடியார் கூட்டத்தைக் காப்பவனே போற்றி.
விஷேட திரவிய மகா அபிஷேகம் காணும் ஐயனாரே போற்றி.
சேந்தக் கட்டிலில் தீர்த்தம்காணச் செல்லும் எங்கள் ஐயனே போற்றி.
ஆழ்கடலில் தீர்த்தமாடி அடியார் வினை தீர்ப்பவனே போற்றி.
மகா மண்டப அலங்கார பூரணா புட்கலா மணவாளனே போற்றி.
திருமணக்கோலம் பூண்டு எழுந்தருளும் மணவாளப் பெருமானே போற்றி.
யாக மண்டபத்தில் பசுமைத் தளிர்கள் சூடிய வேந்தனே போற்றி.
அடியார்கள் பசி தணிக்க அன்னம் கொடையளித்த பெருமானே போற்றி.
பொங்கலிட்டு பரவசம் காணும் அடியவர்களை மகிழ்விப்பவனே போற்றி.
போற்றி போற்றி அனலையுறை ஐயனாரே போற்றி போற்றி. போற்றி.
                                                                                                                       திரு.த.நாராயணன்.