Wednesday 29 April 2015

சிந்தனை செய்வோம்.



சிந்தனை செய்வோம்.
----------------------------------------
அறிவின் துணைகொண்டு எதனையும்
சாதிக்க முடியும் என்பது அறியாமை.
அன்பு மணம் கொண்டு பாரினில் சாதனை
படைத்தோர் பலருண்டு.
வதந்திகளால் கலவரத்தை உருவாக்க முடியும்.
தாதிகளால் காயப்பட்டோரை நலமாக்க முடியும்.
கொடைகளில் சதமாயினும் கோடியானாலும் ஒன்றே.
கோடி கொடுத்தவர் பெரிதன்றோ சதமளித்டவர் தாழ்ந்தவர்
என்றோ கணிப்பது நன்றன்று.

கோடியினை நிறைவு செய் வது சதமாகும்.

உண்மைக்கும் பொய்மைக்கும் -அன்புக்கும் கொடுமைக்கும்
நடக்கும் போராட்டத்தில் வாய்மையே வெல்லும.
மனதிற்கும் வயிற்றுக்கும் நடக்கும் போராட்டத்தில்
வயிறு தான் யெயிக்கும்.
இயற்கையின் உயிரினங்களில் தற்பெருமையும் நான் என்ற
மமதையும் அகங்காரவடிவமும் அமைந்த பகுத்தறிவு
சீவன்கள் மனிதர்கள் என்பதில் ஐயமில்லை.
பகுத்தறிவின் சீவன்களின் ஏதோ ஒருவகையில் இயற்கையின்
சதியோ நல் மனித சீவன்களும் இருப்பதினால் நிலமகள்
அனுசரித்து அவ்வப்போது ரூபவடிவங்களை உணர்த்தி
செயல் வடிவம்செய்கின்றாள் இயற்க்கை தாய்.
தாய்மை எனும் கடலில் சேய் எனும் முத்தே அன்பானது.
ஆழத்தில் முத்தெடுத்தாலும் அன்பெனும் முத்தே ஆழமானது.
கூரிய வாள் கொண்டு வாழையை வீழ்தலாம்.
கூரிய அறிவிண கொண்டு நல் வாழ்வை அமைக்கலாம்.
 
வெளி இருளை அகற்றிட ஒளி உதவும்.
மனஇருளை அகற்றிட அறிவு உதவிடும்.
நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதில் அனுபவம் தெரிகின்றது.
நடக்கபோகும் பாதையினை செம்மையிட்டு தொடர்வதே நன்று.
 
வாடினேன் தேடினேன் நாடினேன் அறிவு எனும்
கல்வியை அடைவதற்கு ஆசானை.
பெண்மையை போற்றி வாழ்தல் போற்றத்திற்குரியது.
பெண்மையை இழிவு படுத்தல் நன்றி மறத்தலாகும்.
மனிதன் வெற்றியை தலைக்கு கொண்டு போகக் கூடாது.
தனது தோல்வியை மனதிற்குக் கொண்டு போகக்கூடாது.
இல்லாதவன் பணத்திற்காக மூடை சுமக்கின்றான்.
இருப்பவன் பணத்தையே மூடையாக சுமக்கின்றான்.
மழலை மொழியில் உங்களோடு உறவாடி மகிழ உங்கள்
மேல் ஏறிப்புரண்டு விளையாட துடிக்கின்றன. உங்கள்
அன்புக்காக ஏங்குகின்ற பிஞ்சு உள்ளங்களை அரவணைப்போம்.
                                                                                                          -  த.நாராயணன்.
Bottom of Form

Tuesday 28 April 2015

திறவுகோல்.







மனம் பழுது ஆகிப்போனா
ஒரு பொழுது கடலைப்பார்.
மாலை நேர வானம் மேலே
மனசை வைச்சு ஆழம் பார்.
சோகமாகித் துவண்டு போனா
ஓயாத அலையைப் பார்.
நோயாகி விழுந்துபோனா
கரையோர மணலைப் பார்.
வாயாலே வாழ்வு போனா
திறக்காத முத்தைப் பார்.
மரியாதை அற்றபோதும்
மரணத்தை உற்றுப் பார்.
வேதனைகள் ஓடிவந்தா
வேப்பமர நிழலைப் பார்.
வேகாத வெய்யில் வாங்கி
ஓங்கி வளரும் அழகைப் பார்.
குறைகள் சொன்னால் நிலவைப் பார்.
கூனில் தெரியும் அழகைப் பார்.
தடைகள் சொன்னால் நதியைப் பார்.
தாண்டிச் செல்லும் வழியைப்பார்.
ஒற்றுமையில்லா ஊரைக் கண்டால்
கூடியிழுக்கும் தேரைப் பார்.

வேற்றுமை பேசும் மனிதர் கண்டால்
காற்றில் உண்டா கேட்டுப் பார்.
வெற்றி வந்தால் நிலத்தைப் பார்.
கால்கள் ஊன்றும் பலத்தைப் பார்.
தோல்வி வந்தால் விண்ணைப் பார்.
உனக்குள் மீண்டும் உன்னைப் பார்.
முகத்தின் முன்னால் ஒளியைக் கேள்.
முதுகின் பின்னால் ஒலியைப்  பார்.
இனவெறியில்லா மொழியைப் பார்.
மொழிவெறியில்லா இனத்தைப் பார்.
மதவெறியில்லா இறையைப் பார்.
இறைவெறியில்லா மதத்தைப் பார்.
சம நிலையில்லா சமூகம் கண்டால்
சமவெளி தோன்ற உழைத்துப் பார்.
அதிசயமறிந்து திகைக்கத் தோன்றின்
தமிழ் மொழி தினமும் சுகித்துப் பார்.