Tuesday 31 January 2012


Saturday 28 January 2012


அனலைதீவுஅறநெறிப் பாடசாலை முகத்தொகுப்பில் இணைந்திருக்கின்ற ஊரவர்கள் அனைவரும் தத்தமது முகத்தொகுப்பினூடாக தம்மாலியன்ற புதிய நண்பர்களை அறிமுகப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இச்சிறிய உதவியானது நமதூரினது வளர்ச்சியில் மிகையான பங்காற்றும் என்பதை நினைவுகொள்வீர்களாக.
அனலைதீவுஅறநெறிப் பாடசாலை சார்பாக
 மு.கு.சிவசோதி

Wednesday 25 January 2012


Tuesday 24 January 2012

எழில்.



ஒற்றையடிப் பாதையின்
மணல் படிந்த
நினைவுகளின் மேலாய்ச்
 சின்னதாய் ஒரு
செல்ல நடை.

எழுந்து எழுந்து
நரை நுரைந்த
அலைகள் வந்து கரையோடு
 அழகழகாய் மோதும்.

ஆணலையா
பெண்ணலையா - து
 கூடத்தெரியாமல்
 கரை கொஞ்சும்.
மணல் உதிர்த்துப் பாறை
 நீர் சுரந்து நாணும்.

அந்தி வானம் பார்த்துவிட்டு
முகம் பொன்னிறத்தில் மாறும்.  

 ஆழ்கடலில் 
கண் குளித்த முத்துக்களில்
 கோர்த்து விட்ட
மாலையொன்று
மாலையிலே தோன்றும்.

 அந்த ஒற்றை   முத்தை    
  அகழ்ந்தெடுத்து
 வானம்  மடியில்
ஓரிரவு முடிந்து வைத்து
மறுபடியும் கீழ்வானில்
உருட்டிவிடும் விந்தையினை
அடிமனது
அள்ளியள்ளி ஏந்தும்.
பிஞ்சுக் கள்ளி வேர் நனைக்க
 பாறையிலே சுரந்து வரும்
 நீர்த்துளிக்குள்
 உயிர் நனையும் இந்த
கொஞ்சும் எழில் நெஞ்சமதில்
குடியிருந்து வாழும்.

 உயிரிருக்கும்
நாள் வரைக்கும் - அந்த
ஒருநினைவுபோதும்.
                                                 மு.கு.சிவம்.

Saturday 21 January 2012

அன்பளிப்பு.

ஜேர்மனியிலிருந்து திரு.ஐ.நடராசா அவர்களினூடாக அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒரு இலட்சத்தியறுபதினாயிரம்  ரூபா பெறுமதியான கற்கை உபகரணங்கள் மனோன்மணி அம்பாள் ஆலயத்தில் வைத்து
முன்னைநாள்
அதிபர் திரு .சி .காராளபிள்ளை அவர்களின் தலைமையில் January 9,2012 ம் திகதியன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.


Friday 20 January 2012

தாகம்.



 பொன்வண்டு மெல்லத் தூங்க
அரளிப் பூ சிறிதாய் வேண்டும்.
 பொன்மாலைக் காற்று வாங்க
தென்மேற்கில் பாறை வேண்டும்.
மண்கொண்ட வாசம் கொஞ்சம்
 மழைநாளில் எனக்கு வேண்டும்.
பொன்வண்ணத் தேவ தீவு
போய்ச்சேரும் யோகம் வேண்டும்.
பொக்கை வாய்க்கிழவர் வாயில்
புழுதியோடு வார்த்தை வேண்டும்.
பொருக்கு வயல் தண்ணி கொஞ்சம்
 உயிர்மீது  ஊற்ற வேண்டும்.
 உழைக்கின்ற வியர்வை  பட்டு
உச்சிவெய்யில் நனைய வேண்டும்.
ஒற்றையடிப் பாதையொன்றில்
ஓரமாக நடக்க  வேண்டும்.


காலைநேரம் கரையில் நிற்கும்
வேலரோடு பேச வேண்டும்.
அலைகள் வந்துகரையைக் கொஞ்சும்
அந்திக் காற்றின்வாசம் வேண்டும்.
கடலளந்து கட்டுமரங்கள்  
கரைசேரும் காட்சி வேண்டும்.
 நிழலளந்து நேரம் சொல்லும்
ஆழமான மனிதர் வேண்டும்.
உசசாணிக் கொம்பின் மேலே-கிளி
உட்காரப் பார்க்க வேண்டும்.
 உழவாரக்குருவியோடு -மனம்
 உயரத்தில் பறக்கவேண்டும்.
ஆலோடு அரச மரத்தின்
அடி நிழலில் குளிக்க வேண்டும்.
 அதிகாலைச்  சேவல் கூவி
அயர்ந்த கண்கள் விழிக்க வேண்டும்.


வாகன சாலைத் தூக்கத்தோடு
வாசன் வைத்த மீசை வேண்டும்.
வைரமுத்து  நடித்த மேடை
நாடகங்கள் மீண்டும் வேண்டும்.
தேரோடும் இராஜ வீதி
சிறுபாதம் பார்க்க வேண்டும்.
வேரோடி வாழ்வதென்றால்
ஊரோடிச் சேர  வேண்டும்.
இத்தனையும் இல்லையென்றால்
 நம் வாழ்வில் இன்பம் இல்லை.
ஒன்றேனும் இல்லையென்றால்
நம் ஜென்மம்
ஜென்மம் இல்லை.
                  மு.கு.சிவசோதி.December 1999.

பகிர்தல்.

Monday 16 January 2012

அறநெறி.


அறநெறிப்பாடசாலையில் மாணவர்கள்.

அறநெறி.


கடவுளுக்குச் செய்வது மனிதனையடையுமென்று உறுதியாகச் சொல்ல முடியாது.
மனிதனுக்குச் செய்வது கடவுளைச் சென்றடையுமென்று நிச்சயமாக நம்பலாம்.

அறநெறி.


அறநெறிப்பாடசாலையில் மாணவர்கள் மேசை கதிரைகளில்லாத நிலையில் தரையிலிருந்து படிக்கிறார்கள்.