Tuesday 24 January 2012

எழில்.



ஒற்றையடிப் பாதையின்
மணல் படிந்த
நினைவுகளின் மேலாய்ச்
 சின்னதாய் ஒரு
செல்ல நடை.

எழுந்து எழுந்து
நரை நுரைந்த
அலைகள் வந்து கரையோடு
 அழகழகாய் மோதும்.

ஆணலையா
பெண்ணலையா - து
 கூடத்தெரியாமல்
 கரை கொஞ்சும்.
மணல் உதிர்த்துப் பாறை
 நீர் சுரந்து நாணும்.

அந்தி வானம் பார்த்துவிட்டு
முகம் பொன்னிறத்தில் மாறும்.  

 ஆழ்கடலில் 
கண் குளித்த முத்துக்களில்
 கோர்த்து விட்ட
மாலையொன்று
மாலையிலே தோன்றும்.

 அந்த ஒற்றை   முத்தை    
  அகழ்ந்தெடுத்து
 வானம்  மடியில்
ஓரிரவு முடிந்து வைத்து
மறுபடியும் கீழ்வானில்
உருட்டிவிடும் விந்தையினை
அடிமனது
அள்ளியள்ளி ஏந்தும்.
பிஞ்சுக் கள்ளி வேர் நனைக்க
 பாறையிலே சுரந்து வரும்
 நீர்த்துளிக்குள்
 உயிர் நனையும் இந்த
கொஞ்சும் எழில் நெஞ்சமதில்
குடியிருந்து வாழும்.

 உயிரிருக்கும்
நாள் வரைக்கும் - அந்த
ஒருநினைவுபோதும்.
                                                 மு.கு.சிவம்.

No comments:

Post a Comment