Saturday 18 July 2020


Sunday 12 July 2020


 Green Analai
July 8.2020
ஊடு முருகன் ஆலய கேணி நீண்டநாட்கள் பாவனையில் இல்லாத நிலையில் அதனை திருத்தி அமைக்கும் பணியினை பசுமை அனலைதீவு திட்டம்
பொறுப்பெடுத்து செய்துவருகிறது. இதன் முதற்கட்டமாக கேணியைசுற்றியுள்ள புதர்கள் வெட்டப்பட்டு கேணியும் இறைத்து தூர்வாரப்பட்டுள்ளது.

கால்நடைகள் நீர் அருந்தக்கூடியவாறு தற்காலிக சீமெந்து தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பசுமை நலன்விரும்பிகள் முன்வந்து உதவினால் கேணி பூரணமாக சீமெந்து சுவர் மற்றும் படிகள் கட்டி இன்னும் நீண்டகால பாவனையை உறுதி செய்யலாம்.


 தகவல் நிழற்பட நன்றி:  FB:Green Analai.









புன்னகை.

 ஊர்முடக்கக் காலத்து சுயசார்பு வெண்டியின் புன்னகை.
July.12.2020


Saturday 11 July 2020

பயன்.


 ஊர்முடக்கக்காலத்து சுயசார்பு முயற்சியில் ஒன்று வளர்கிறது.
முருங்கை வெட்டி ஊன்றினால் தன் வாழ்காலம்வரை பயன்தரும்.
வளவுக்கு இரண்டு முருங்கை நடுங்கள்.
முயற்சி: திரு.க.உதயப்பிரகாஷ்


Friday 10 July 2020

முயற்சி.

 May.02.2020
 May .10
 
2020ம் ஆண்டின் உலகளாவிய ஊர்முடக்கக் காலத்தில் சுயசார்பு உற்பத்தி நிலையின் அவசியத்தை மனித சமூகம் தூசிதட்டிப்பார்த்தது.
அனலைதீவில் இயற்கையின் துணையோடு மட்டுமேயான ஒரு வீட்டுத்தோட்டத்தை மே மாதம் 02 ம்திகதி ஆட்டெரு மாட்டெருவுடன் சாம்பல் கலந்த மண்ணில் நாற்றுப்பாத்தி அமைத்து விதைகள் இட்டு ஆரம்பித்தோம்.
அன்றிலிருந்து இன்றுவரையான வீட்டுத்தோட்ட வளர்ச்சியின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மிகச்சிறிய அளவிலான இம்முயற்சி எல்லோருக்கும் சாத்தியமானது என்பதற்கான சாட்சியமாகும். இந்த முயற்சியில் எந்த இரசாயன பசளையோ மருந்தோ உபயோகிக்கவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது.
ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு பூசணி விதைகளை நடுங்கள். நாளாந்தம் அரிசி கழுவும் தண்ணீரை அதற்கு ஊற்றுங்கள். குசினிக்குப் பக்கத்தில் ஒரு சுண்டங்காய்  மரம் நடுங்கள். அதனடியில் கை கழுவுங்கள். குழந்தைகளுக்கு  மரங்களுக்கு தண்ணீர் ஊற்றக் கற்றுக்கொடுங்கள். இயற்கை தானாக அவர்களுக்குள் வளரும்.
பாடசாலை கல்விமுறை  இயற்கையை செயல்முறையோடு இணைத்துக்கொள்ளவேண்டும். இனிவரும் காலங்களில் ஊரிலுள்ள மூன்று பாடசாலைகளிலும் ஒரு வெண்டிக்கன்றையாவது கண்ணுறுவோம்.
ஊரின் பொது அமைப்புகள் இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிக்க முன்வரவேண்டும்.
ஊரில் மண்ணை உயிர்ப்போடு வைத்திருக்க  அடிப்படையான கால்நடைகளின் அவசியத்தையும் பாதுகாப்பையும் இயற்கை வேண்டி நிற்கிறது.
இந்த சிறு முயற்சிக்கான ஒத்துழைப்பு:
நண்பன் வைரவன்
தம்பி உதயப்பிரகாஷ்
தங்கை சாலினி சாள்ஸ்
நந்தினி அக்கா
தங்கை நளாயினி
மகாலிங்கம் அண்ணன்.
அஞ்சலா ரீச்சர்
இது ஒரு கூட்டு முயற்சி.

 May.24

 June .15

 June.19
 July.01.2020

 July.04.2020


 July.04.2020









July.06.2020

Sunday 5 July 2020

பசுமை.

அனலைதீவு இளைஞர்களின் நீர்மேலாண்மை மீதான அக்கறையுடன்கூடிய புதிய முயற்சிகள் வாழ்த்தி வரவேற்கப்படவேண்டியவை. அவர்கள் நம்மால் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கப்படவேண்டியவர்கள்.
அவர்கள் நல்லவற்றை செய்கிறார்கள் என்பதைவிட நமது ஊரின் இயற்கைச்சூழலின் அடிப்படையிலான குடிநீர்த் தேவையின் இருப்பை நிலைகொள்ளச் செய்வதற்கான தேவையின் புரிதலை தாமாக உணர்ந்து இந்தச் செயற்பாடுகளுக்குள் இணைந்துள்ளமையே மிக முக்கியமான விடயமாகப் புரிந்துகொள்ளப்படவேண்டும்.
உலகெங்கும் பரந்து வாழும் நம்மவர்கள் இவர்களின் செயற்பாடுகளுக்கு தங்களாலான உதவியை அவர்களுடன் தொடர்புகொண்டு வழங்குவது நமது பூமியில் பசுமையை மெருகேற்ற உதவும்.
தொடர்புகளுக்கு:greenanalai@protonmail.com