Friday 30 March 2018

பனை வளம்.




அனலைதீவு மனோன்மணி அம்பாள் ஆலய மண்டபத்தில்   Mar 29.2018ம் திகதி நடைபெற்ற அனலைதீவு தெற்கு சமுர்த்தி உற்பத்தி மாதிரிக் கிராம பனையோலை அலங்காரப் பொருட்களின் கண்காட்சி  நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மதிற்பிற்குரிய
திருமதி.மஞசுளாதேவி சதீசன், ஊர்காற்றுறை சமுர்த்தி உத்தியோகத்தர் மதிற்பிற்குரிய திரு.கருணாகரன், அனலைதீவு J/38 கிராம அலுவலர் மதிற்பிற்குரிய திரு.சி.வினேஸ் மற்றும் மதிற்பிற்குரிய பிரதேச செயலக  அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அனலைதீவு மாதர் கிராம அபிவிருத்திச்சபை நிர்வாகிகள் திருமதி.சி.சிவகலா, திருமதி.ச.சண்முகரூபி, திருமதி.சி.விக்னேஸ்வரி மற்றும் அங்கத்தவர்களின் முழுமையான பங்களிப்போடும், ஒத்துழைப்போடும் அனலைதீவு மக்களின் கைவினைத்திறனை பனைவளத்தின் உதவியோடு அழகாக காட்சிப்படுத்தியமை வாழ்த்தி வரவேற்கவேண்டிய நல் நிகழ்வாகும்.
அனலைதீவின் வளங்களை பெருமைப்படுத்தி வினைத்திறனை அடையாளம்கண்டு வெளிக்கொண்டுவரும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மதிற்பிற்குரிய
திருமதி.மஞசுளாதேவி சதீசன் அவர்களை நாம் நன்றியுடன் பாராட்டுகிறோம்.

இந்த சிறப்பான வளர்முகப் பாதைக்கு வித்திட்ட முன்னாள் பிரதேச செயலர் திருமதி திருமதி. எழிலரசி அன்ரன் வேதநாயகம் அவர்களையும் நாம் நன்றியுடன் பாராட்டுகிறோம்
அனலைதீவு 38 கிராம அலுவலர் திரு.சி.வினேஸ் அவர்களின் அக்கறையான செயற்பாடுகளையும் பாராட்டுகிறோம்
பனை வளங்களின் முக்கியத்துவத்தையும் நமது மக்களின் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கும் இந்த நிகழ்வை சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய ஊர் மக்கள் அனைவருக்கும் நெஞசார்ந்த நன்றிகள்.
வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.
"பனை வளத்தைப்  பாதுகாப்போம்.
படங்கள்:திரு.க.உதயப்பிரகாஷ்
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.