Wednesday 31 July 2019

மதிய உணவு.




2019ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் இருந்து எமது பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு
எமது பாடசாலையினுடைய மதிப்பிற்குரிய அதிபர் திரு.ந.இராதாகிருஷ்ணன் அவர்களின் ஒத்துழைப்போடும் Arivoli Ahavam Foundation உதவியோடும் அனலைதீவு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகத்தினர் வழங்கி வருகின்றனர்.
ஆனி மாத உணவிற்கான நிதியை திரு.த.#நாராயணன் குடும்பத்தினர் Arivoli Ahavam Foundation ஊடாக வழங்கியுள்ளனர்..
இவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

-  Analaitivu Sathasiva MV Analaitivu
 
 தகவல் பதிவு நன்றி:FB:  Analaitivu Sathasiva MV Analaitivu

Saturday 6 July 2019


Monday 1 July 2019

மனசு!


மனசு!
ஒரு மனிதர் துணுக்காய் என்ற இடத்திலிருந்து 30 சாக்கு நிறைய பச்சைப் புல்லை தானே கொண்டுவந்து தானே அனலைதீவு வெய்யிலில் வாடும் ஜீவன்களுக்கு அவை நிற்கும் வெவ்வெறு இடங்களில் போட்டு பசியாற்றியுள்ளார்.
ஐந்தறிவு வளர்ப்பு ஜீவன்களை அண்மைக்காலமாக கொன்று அழிக்கும் செயலை செய்பவர்களுக்கும், அறிந்தும் பேசா மடந்தைகளாக இருக்கும் நமக்கும் இவரது நற்செயல் நமது தவறுக்கான ஒருவித தண்டனையாகவே உணரப்படவேண்டும்.
இந்த மனிதரை மனதார வாழ்த்துகிறோம்.

 படங்கள், பதிவு நன்றி:
- அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா