Friday 12 June 2020

எமுதித்தான் ஆகவேண்டும்.
தேடப்படும் குற்றங்கள்.
கல்வி கடைநிலை மாணவரைச் சென்றடைய நாம் திணைக்களங்களோடு இணைந்து உழைக்கவில்லை.
பெற்றோர் பிள்ளைகளின் மரியாதைக்குரியவர்களாக இல்லாத குடும்ப சூழல்.
ஆற்றுப்படுத்தலுக்காக ஏங்கும் பிள்ளைகளின் மனநிலையை புரியாத குடும்ப சூழல்.
போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு.
குற்றவாளிகள் தண்டனை பெறாமை மற்றும் தண்டனையிலிருந்து இலகுவாக மீண்டு வருதல்.
கோவில் மற்றும் பொது அமைப்புகள் சமூகப்பொறுப்புகளில் ஆழமாகக் காலூன்றாமை.

இன்று வளரும் குற்றங்களும் குற்றவாளிகளும் அடுத்த 10 ஆண்டுகளுக்காவது தொடரும்(சமூக விழிப்புணர்வு அடிப்படையில் இவை மாறக்கூடும்) என்பதையும் அடுத்த 10 ஆண்டுகளுக்க்குப்பின் குற்றங்களும் குற்றவாளிகளும் குறைவதற்கும் தொடர்ச்சியாக இல்லாமலாவதற்கும் நாம் இன்றிலிருந்து என்ன செய்யவேண்டுமென்பதை உணர மறுத்து சமூகத்தின்மீது பொதுப்பழி சொல்லல்.
------- இன்னும் நீளும்.

Thursday 4 June 2020

முன்வரலாம்.

எழுத்து வலிமையானது.
நமது சமூகத் தேவைகளை பொதுவெளியில் பேசுபொருளாக உயிர்ப்பிப்பது செயல்வடிவத்திற்கான அத்திவாரமாகும்.
நமது கடமைகளை, நினைவுகளை விதைத்துவிடுவோம். முளைப்பது முளைக்கட்டும்.
1990ம் ஆண்டு அனலைதீவு மேற்குக் கரையிலிருந்து நாட்டின் அசாதாரண சூழல் காரணமாக தமது உயிர் காக்கக் கலமேறி கடலோடு உறையுண்டுபோன 66 நம் உறவுகளின் நினைவாண்டுகள் 30 ஆகிறது.
அவர்களுக்கான நிரந்தரமான நினைவுத்தூபி ஒன்றை நம்மவர்களில் ஆற்றலுள்ள கட்டிடப்பொறியியலாளர், வடிவமைப்பாளர்கள், ஓவியர், சிற்பிகள் தாமாக முன்வந்து நமது உறவுகளின் நினைவையும், நமது ஊரின் பிணைப்பையுப் பிரதிபலிக்கும் இயற்கையான வடிவமைப்போடு வடிவமைத்து உதவுவதற்கான வேண்டுகோளாக
இப்பதிவு அமைகிறது.
ஆற்றலுள்ள அன்புள்ளங்கொண்ட வடிவமைப்பாளர்கள் தங்களாலானதை முயற்சிக்கலாம்.
நிதிவளம் கொண்டோர் தாமாகவே முன்வரலாம்.

வேண்டுகோள்!

உலகெங்கும் பரந்துவாழும் அனலைதீவைச் சேர்ந்த துறைசார் புத்திஜீவிகள் அனைவருக்குமான பணிவான வேண்டுகோள்!
கல்வி.
சுற்றுச் சூழல்.
விசாயம்.
வீதிக்கட்டுமானம், போக்குவரத்து.
கடற்பிரயாணம்.
கடல் வளம்.
வைத்தியத்துறை.
நீர் மேலாண்மை.
புற்றுநோய் நிபுணத்துவம்.
சமூக மனநிலை மாற்றத்திற்கான ஆலோசனை.
உளவியல்.
இந்தத் துறைகளில் அறிவார்ந்த புத்திஜீவிகள் தமது அறிவாற்றலை தமக்கு எழுத்தறிவித்து உலகத்தை அறிமுகம்செய்த
தமது ஊருக்கு இதுவரை எந்த வகையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்?(ஓரிரு உதாரணங்கள் தவிர்த்து)
ஏன் பயன்படுத்த முடியாது?
ஏன் பயன்படுத்தவில்லை?
இனிமேலாவது பயன்படுத்தமுடியாதா?
பணம் காசு வேண்டாம்.
தமக்கு அறிவுதந்த ஊருக்கு தங்களாலான அறவுரையை துறைசார் திணைக்களங்களினூடாக ஏன் நடைமுறைப்படுத்த முயலக்கூடாது?
இனியாவது ஒரு மனநிலை மாற்றம் நிகழுமா?
இனியாவது ஒரு மனநிலை மாற்றம் நிகழுமா?
நாம் படித்தவர்கள் என்பதை நமது ஊரின் முன்னேற்றம் மட்டுமே மதிப்பிடு செய்யும்.

Monday 1 June 2020

நன்றி.

பெருமதிப்பிற்குரியவர்களோடு!
நமது நினைவுகளுக்கெட்டாத முன்னெப்போதுமில்லாத வகையான இடர்க்காலச் சூழலில் அனலைதீவில் எல்லாவிதமான செயற்பாடுகளிலும் நிதிக்கரம் நீட்டிய அனைத்து புலம்பெயர்வாழ் அனலை மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலைதீவுக்கான இடர்க்கால உதவிகள் ஊர்வந்தடைய எல்லாவழிகளிலும் உதவிய ஊற்காற்துறை பிரதேச செயலர் மதிப்பிற்குரிய திருமதி.ச.மஞ்சுளாதேவி மற்றும் கிராம அலுவலர்கள்.திரு.சி.வினேஸ் திரு.அ.ஆரூரன் ஆகியோருக்கு அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலைதீவு மக்களின் இடர்க்காலத் தேவையை தனிப்பட்ட முறையில் தனிநபர்களின் நிதியுதவியை உள்வாங்கி நேர்பட நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இடர்க்கால உதவி செய்த அனலைதீவு கலாசார ஒன்றியம், அனலைதீவு ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், லண்டன் ஒன்றிய ஆதரவாளர்களின் நிதிப்பங்களிப்புடன் இடர்க்கால உதவி வழங்கிய அனலைதீவு மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகத்தினர்,திரு.க.வாமதேவன் மற்றும் தனிப்பட்ட முறையில் உதவிய பெருமனத்தோர் மற்றும் உதவிகளை செற்படுத்திய அனலைதீவு இளையவர்கள் அனைவருக்கும் அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலைதீவு அருணோதயா சனசமூக நிலைய நிர்வாகத்தினர் மேற்கொண்டுவரும் உணர்வுபூர்வமான இடர்க்கால உதவிகளுக்கு அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலைதீவில் இன்றுவரையான அனைத்து சமூக செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து பல நாடுகளிலிருந்தும் வரும் உதவிகளுக்கான அனைத்துவிதமான கொடுப்பனவுகளையும் நேரிய முறையில் செயற்படுத்திய திரு.கு.குமாரதேவன், திரு.ப.நடராசா, திரு.க.உதயப்பிரகாஷ் ஆகியோருக்கு அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலைதீவில் எல்லாவிதமான செயற்பாடுகளிலும் உதவிக்கரம் நீட்டிய அனைத்து அனலைவாழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பலவிதமான சிரமங்களுக்கும் சுமைகளுக்குமிடையில் அனலைதீவு புலம்பெயர் மக்களின் சமூக செயற்பாடுகளை எந்தவிதமான குறைபாடுகளுமின்றி நேரிய முறையில் நேர்மையான நிதி நிர்வாகத்திறமையோடு செயற்படுத்தியுதவும் திரு.கு.குமாரதேவன், திரு.ப.நடராசா, திரு.க.உதயப்பிரகாஷ் ஆகியோருக்கு நமது பாராட்டுதலை வெளிப்படுத்துவது அவசியப்பாடாகிறது.
எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும், எந்த மனநிலையிலும், எவருக்கும் சொல்லக்கூடியது சொல்லவேண்டியது
நன்றி.
-பொதுமக்கள் சார்பாக.