Sunday 31 December 2017

நம்பிக்கை.


அனலைதீவு மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
இனிதாய், புதிதாய் மலரும் புத்தாண்டில் அனலைதீவு மக்களின் வளர்ச்சிப் பாதையில் ஆரோக்கியமானதும் அவசியமானுதுமான பணிகளில் அனலைதீவு சலாசார ஒன்றியம் கனடா நம்பிக்கையுடன் செயற்பட அனலைதீவு மக்கள் அனைவரினதும் பேராதரவை வேண்டி நிற்கும் நாம் அனைவரும் இனிய புத்தாண்டை நம்பிக்கையுடன் வரவேற்போம்.
அனலைதீவு மாணவர்களினதும், கல்விச் சமூகத்தினரினதும் அடிப்படையான கல்விசார் தேவைகளில் முக்கியமானவற்றை அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா பொறுப்பேற்றுக்கொண்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என்பதை இந்த ஆண்டின் நற்செற்தியாக பணிவோடு அறியத்தருகிறோம்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
படங்கள்:திரு.த.கோகுலராஜ்.















Wednesday 27 December 2017

வாசிப்பு.

 Dec 27.2017ம் திகதி ஊர்காவற்றுறை பிரதேச சபை அனலைதீவு பொதுநூலகத்தில் நடைபெற்ற தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவின்போதான படங்கள். படங்கள்:திரு;த.கோகுலராஜ்.
"வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்".

மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இதுபோன்ற பயனுள்ள நிகழ்வுகளை பாராட்டி ஊக்குவிக்கவேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

-விழாவுக்கான பரிசில்கள் அனுசரணை: அனலைதீவு கலாசார ஒன்றியம். கனடா.