Thursday 30 June 2016

கருவாடு பதனிடல்.



கருவாடு பதனிடல். (உற்பத்தி)


கருவாடு பதனிடல் (உற்பத்தி) தொடர்பான வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள பயனாளிகளுக்கான பயிற்சிச் செயலமர்வு இன்று 30.06.2016 அன்று காலை 10.30 மணிக்கு அனலைதீவு ஸ்ரீவேணி கல்வித் திண்ணையில் இடம்பெற்றது. இதில் இலங்கை தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் வடக்குக் கிழக்கு மாகாண இணைப்பாளர் கே.ரவிக்குமார் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார். மேற்படி திட்டத்தில் அனலைதீவைச் சேர்ந்த 18 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர்இ கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்இ கிராமிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்இ துஃ38 கிராம அலுவலர்இ கிராம துஃ38 அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். எதிர்காலத்தில் மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டு தொழில் உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தகவல் மற்றும் படங்கள். திரு.வை.தனேஸ்.

















Sunday 19 June 2016

பாரம்பரிய கலைகள்.


அருனேதயா சனசமூக நிலையமும். அருனேதயா இயல் இசை நாடக மன்றமும் இணைந்து நடாத்தும் "காத்தவராஜன்" கூத்தின் அழைப்பிதழ் வெழியீட்டு நிகழ்வு June 18.2016ம் திகதி அனலைதீவு அருணோதயா சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
பாரம்பரிய கலைகள் மீண்டும் புதுப்பொலிவுற இம்முயற்சியில் பங்குகொள்ளும் அனைத்து கலைஞர்கள்,
நெறியாளர்: திரு.சி.கணபதிப்பிள்ளை அவர்கள்
மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நாடகம் சிறப்புற அமைய மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.












Friday 17 June 2016


மாகாண மட்டத்திற்கு தெரிவாகியும் தீவக கல்வி வலயத்தால் புறக்கணிக்கப்பட்ட யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய பெண்கள் துடுப்பாட்ட அணி
தீவகம் வலயக்கல்வி (வேலனை) விளையாட்டு போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான துடுப்பாட்டபோட்டியில் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய பெண்கள் துடுப்பாட்ட அணி வெற்றி பெற்று (முதலாம் இடம்) மாகாண மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்தது.
ஆனாலும் மாகாண மட்ட போட்டிகளுக்கு இந்த பாடசாலை அணி அழைக்கப்படவில்லை பாடசாலை நிர்வாகத்தால் இது தொடர்பாக வலய மட்டத்தில் வினவியவேளை இது வரை தீவக-வலயக்கல்வி பணிமனை தகுந்த பதிலளிக்கவில்லை.
தீவக வலய மட்டத்தில் முதலிடம் பெற்ற யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியால அணியை தவிர்த்து இரண்டாம் இடம்பிடித்த மண்டைதீவு மகா வித்தியாலயமும் மூன்றாமிடம் பெற்ற புங்குடுதீவு ஸ்ரீ சுப்ரமணிய மகளீர் மகா வித்தியாலமும் மாகாண மட்ட போட்டிகளில் பங்கு பற்றியுள்ளனர்.
இது தீவக வலய கல்வி பணிமனையால் திட்டமிடப்பட்ட நிராகரிப்பா? இல்லை வேறு எந்த காரணத்திற்காக மாணவர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன.
தேசிய அணியில் திறமை இருந்தும் இடம் கிடைக்காமல் பேரினவாதிகளால் நம்மில் பலர் புறக்கணிக்கப்படுகின்றோம் அது அவ்வாறு இருக்க நம்மவர்களால் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம் இப்போதெல்லாம்.
போதிய வசதிகள் இல்லாத போதும் பாடசாலை ஆசியர்கள் பெற்றோர்களால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு பயிற்சிகளை மேற்கொண்டு மாகாண மட்ட போட்டியில் விளையாடும் கனவுடன் காத்திருந்த மாணவர்களின் நிலை கலைக்கபட்ட கனவாகிவிட்டது.
சந்தர்ப்பம் என்பது எப்பொழும் வருவது கிடையாது திறமையை வெளிக்காட்டி பெற்ற சந்தர்பத்தை திட்டமிட்ட செயலாக தட்டிக்கழிக்கும் கல்வி அதிகாரிகளை நாம் என்ன செய்வது. அதிகாரிகள் மட்டத்தில் போட்டி பொறாமைகளால் நம் மாணவர்களை நீங்கள் பகடக்காய்களாக்காதீர்கள்.
இது தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் தீவக வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் விளையாட்டு பொறுப்பதிகாரி பதில் கூறவேண்டும்......திறமை இருந்தும் நாம் புறக்கணிக்கப்படக்கூடாது........
Pulendran Sulaksan

Thursday 16 June 2016

மழைநீர் சேகரிப்பு.

 இன்று June 16.2016ம் திகதி அனலைதீவில் மனித நேயக் கூட்டமைப்பு நிறுவனமும் ஊர்காவற்துறை பிரதேச செயலகமும் இணைந்து மழை நீரினைச் சேமித்தல் தொடர்பாக ஒரு பயிற்சிப்பட்டறையை நடாத்தினர். இதில் இருபது மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் பங்குபற்றி பயன்பெற்றனர். அனைவருக்கும் திரையில் படங்கள்மூலம் விளக்கமளிக்கப்பட்டது. மக்கள் பயன்பெற்றனர். மழைநீரினை எவ்வாறு சேமித்தல்?. நிலத்தடி நீர் எவ்வாறு மாசுபடுகின்றது? மழை நீரினை எதிர்காலத்தில் எவ்வாறு சேமிப்பது தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதற்கான வழிமுறைகள். என்பவற்றை தெளிவாக விளக்கிக்கூறினர். இம்முயற்சிகளை முன்நின்று செயற்படுத்தும் அனலைதீவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. திரு .இ.ரனேசன் அவர்களுக்கும் கிரா அலுவலர்
திரு. சி.வினேஸ் அவர்களுக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்
இத்தனை முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி ஒத்துழைக்கும் திரு.வை.தனேஸ் அவர்களுக்கும் நமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
 இந்நிகழ்வு கணணி நிலையத்தில்  நடைபெற்றது.

படங்கள். திரு.வை. தனேஸ்.