Wednesday 20 August 2014

உப்புத் தண்ணி.





இளைக்கவும் பின்னவும் தெரியாத கைகளுக்கு மத்தியில்
காவோலைகளைத் தொங்கவிட்டபடி பனைகள்.

நடந்து போகும் மனிதனின் சுவடுகளுக்காய் ஏங்கும்
இன்னமும் அகலப்படாத
ஒற்றையடிப் பாதைகள்.

நடந்து பார்க்கவும் போதாத தூரத்தைக்கடக்க
மனிதரின் காலடியில் சுற்றும்
அதிகப்படியான சக்கரங்கள்.

எப்போதும்
என் மனதோடு அலைமோதும் மேற்குக்கடற்கரை.

 
தன் நிழலை கடலுக்குள் நீந்தவிட்டு
விளக்கு இல்லாமல் நிமிர்ந்து நிற்கும்
வெளிச்சக்கூட்டின் அடிமடியில் கேட்கும்
காலனித்துவ  அடையாளத்தின் அழுகுரல் அறியாமலும்
அதன் உயரத்திற்குள் அடங்கிக்கிடக்கும்
உயிர்களையும் உழைப்பையும் நினையாமலும்
பூரித்த
பளைய நினைவுகளில் குத்திய 
பக்கத்துக் காரமுள்ளு.

உயிர் ஊற்றி ஊறவைத்துப்
பூத்திருந்த சில கட்டுமரங்களையும்
தொலைத்துவிட்டு
அழுது இரையும் கடற்கரைகள்.

வேரின் அளவினதாய் விழுதுகள் கொண்ட முப்பாட்டனுக்கும் மூத்து வளர்ந்திருந்த அந்த ஆலமரமில்லாத
பிள்ளையார் கோவிலடிச் சந்தி.
 
வயல் வெளியில்
வெய்யில் காலத்தில்
காகம் அலம்பிய
வேலங்குளத்துத் தண்ணியாய்
நினைவுகள்.

என்
எல்லா நினைவுகளையும் நசித்துக் கடந்தன
பொருக்குக் கிணற்றுக்குள்
உப்புத்தண்ணியை  இறைத்துவிட்டு
நம் பேரப்பிள்ளைகளுக்கான
ஈரத்தையே உறிஞ்சி விடும்
தண்ணி லாரிகள்.                                                  
                                                                  ---சிவம்.   Aug 04.2014.

உப்புத் தண்ணி.



உப்புத் தண்ணி.
இளைக்கவும் பின்னவும் தெரியாத கைகளுக்கு மத்தியில்
காவோலைகளைத் தொங்கவிட்டபடி பனைகள்.

நடந்து போகும் மனிதனின் சுவடுகளுக்காய் ஏங்கும்
இன்னமும் அகலப்படாத
ஒற்றையடிப் பாதைகள்.

நடந்து பார்க்கவும் போதாத தூரத்தைக்கடக்க
மனிதரின் காலடியில் சுற்றும்
அதிகப்படியான சக்கரங்கள்.

எப்போதும்
என் மனதோடு அலைமோதும் மேற்குக்கடற்கரை.

தன் நிழலை கடலுக்குள் நீந்தவிட்டு
விளக்கு இல்லாமல் நிமிர்ந்து நிற்கும்
வெளிச்சக்கூட்டின் அடிமடியில் கேட்கும்
காலனித்துவ  அடையாளத்தின் அழுகுரல் அறியாமலும்
அதன் உயரத்திற்குள் அடங்கிக்கிடக்கும்
உயிர்களையும் உளைப்பையும் நினையாமலும்
பூரித்த
பளைய நினைவுகளில் குத்திய 
பக்கத்துக் காரமுள்ளு.

உயிர் ஊற்றி ஊறவைத்துப்
பூத்திருந்த சில கட்டுமரங்களையும்
தொலைத்துவிட்டு
அழுது இரையும் கடற்கரைகள்.

வேரின் அளவினதாய் விழுதுகள் கொண்ட முப்பாட்டனுக்கும் மூத்து வளர்ந்திருந்த அந்த ஆலமரமில்லாத
பிள்ளையார் கோவிலடிச் சந்தி.
 
வயல் வெளியில்
வெய்யில் காலத்தில்
காகம் அலம்பிய
வேலங்குளத்துத் தண்ணியாய்
நினைவுகள்.

என்
எல்லா நினைவுகளையும் நசித்துக் கடந்தன
பொருக்குக் கிணற்றுக்குள்
உப்புத்தண்ணியை  இறைத்துவிட்டு
நம் பேரப்பிள்ளைகளுக்கான
ஈரத்தையே உறிஞ்சி விடும்
தண்ணி லாரிகள்.                                                  
                                                                  ---சிவம்.   Aug 04.2014.



Tuesday 19 August 2014

முன்பள்ளி





August 18.2014ம் திகதியன்று அனலை சமூக நல மன்றத்தின் அனுசரணையுடன் சிறிவேணி கல்வித்திண்ணையின் உதவுதலுடன் அனலைதீவிலுள்ள நான்கு முன்பள்ளிகளுக்குமான பெயர்ப்பலகைகள் அனலைதீவு கிராமசேவகர் திரு.தர்சன் மற்றும் அனலைதீவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சுதாகரன் ஆகியோரால் முன்பள்ளிப் பொறுப்பாசிரியர்களிடம் வழங்கப்பட்டன.
திரு.தர்சன் மற்றும் திரு.சுதாகரன் ஆகியோர்க்கு எமது நன்றிகள்.
இப்பணியைச் செய்ய முன்மொழிந்த அனலைதீவு வடக்கு கிராமசேவகர் திரு.வடிவழகையன் மற்றும் தகவல் தந்துதவிய பிரதேசசபை முன்பள்ளி ஒருங்கிணைப்பாளர் திருமதி.பெனாண்டோ பாரதி  ஆகியோருக்கு எமது நன்றிகள்.
அனலை சமூகநல மன்றம்.
August 19.2014.