Saturday 31 December 2016

இயற்கை.

 2017ம் ஆண்டு இயற்கையைப்போல் விளையட்டும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
படங்கள் திரு.த.கோகுலராஜ்.





























நன்றி.



 பெருமதிப்பிற்குரியவர்கள் அனைவருக்கும்!
2000 நட்புகளுடன் இணைந்துள்ள இந்நாள்வரை நட்பில் இணைந்து கொண்டவர்கள் இணைத்துக் கொண்டவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 2016ம் ஆண்டுப் பதிவுகளில் விருப்பழுத்தியும், வாழ்த்துச்சொல்லியும், கருத்துச்சொல்லியும், பகிர்ந்தும் இணைந்திருந்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.






அனலைதீவு அறநெறியில் பதிவேற்றப்பட்ட அனலைதீவின் அழகையும், நிகழ்வுகளையும் மற்றும் சமூக முன்னேற்றப் பாதையின் முகங்களையும் படங்களாக எடுத்தனுப்பி உதவிய திரு.வை.தனேஸ், திரு.த.கோகுலராஜ் ஆகியோருக்கு
ஊர்மக்களனைவரினதும் சார்பாக நமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்வோம்.


Wednesday 7 December 2016

பெருங்கமக்காரன்.

                                                          2016ம் ஆண்டிற்கான யாழ் மாவட்டத்தின்  வர்த்தக ரீதியாக சிறந்த விவசாயிகளுக்கான தெரிவில் அனலைதீவைச் சேர்ந்த திரு.குமரேசன் குமாரதேவன் முதலாம் இடத்தினை பெற்று சிறந்த வர்த்தக ரீதியான விவசாயியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆண்டு தோறும் நடைபெறுகின்ற விவசாயிகளின் தேர்வில் இம்முறை இவர் வெற்றி பெற்றுள்ளார். பெருங்கமக்காரன் திரு.குமரேசன் குமாரதேவன் அவர்களை நெஞ்சார அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாகப் பாராட்டுவோம்.
அனலைதீவு மக்களின் தேவைகளையும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பயன்களையும் மதிப்பீடுகளையும் பெற்றுக்கொடுக்க  ஒத்துழைப்பு வழங்கும் ஊர்காவற்துறை பிரதேச செயலர், அனலைதீவு கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்வோம்.