Wednesday 31 October 2018


Tuesday 30 October 2018

மரம்.

 அனலைதீவு இயற்கை வளத்தைப் பேணிப்போற்றுகின்ற முறையில் பல ஆண்டுகளாக மரம் வளர்ப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் வேதனைக்குரிய முறையில் பெருமரங்களாக வளர்ந்து முதிர்ந்த மாமரம் வேப்பமரம் அடியோடு வெட்டியும் பிடுங்கியும் சாய்க்கப்பட்டிருக்கிற செயலானது நமது கவனத்திற்கு முக்கியமான செய்தியைத் தருகிறது. மரங்கள் நடுவது மட்டும் பயன்தராது. அவற்றை பாதுகாக்கும் சட்டரீதியான நடைமுறைகள் கடினப்படுத்தப்படவேண்டும். இதுபோன்ற வன்மையான செயல்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சமூகம் முன்னெடுக்கவேண்டும். வெளிநாடுகளில் வாழும் ஊரவர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் மரங்களுக்கான சட்டதிட்டங்களை நன்கு அறிவர். இருந்தும் ஊருக்குப்போய் அங்குவாழும் மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வை சீர்குலைக்கும் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்கவேண்டும்.காணி நமது என்பதால் பயன்தரும் மரங்களை வெட்டிச்சாய்க்கும் செயல் தவறானது. மரங்களை வெட்டிச் சாய்த்த நபரால் தன்வாழ்நாளுக்குள்  இதுபோன்ற மரத்தை வளர்த்துப் பார்க்க முடியாது.அனலைதீவு மண்ணில்இதுபோன்ற செயல் இனிமேல் நடக்காமல் இருக்க வழிவகுப்போம்.










Thursday 25 October 2018

பாராட்டுகிறோம்.

2018 ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் தேர்வில் தோன்றிய 13 மாணவர்களில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவர்களின் விபரம்.

செல்வி.கஜிமரன் கிசாஜினி 153
செல்வன்.அமுதலிங்கம் சனுஜன் 149
செல்வி. ரதீஸ்வரன் மதுசியா 140
செல்வி .சிவராசா ஜீவமதுஷா 129
செல்வி யோகராசா யாளினி 120
செல்வன்.உருத்திரன் திசாஸ் 116
தரம் 5 மாணவர்கள் அனைவரையும் கல்வியில் சிறக்க வாழ்த்தி பாராட்டுகிறோம்.

Tuesday 23 October 2018

வாணி விழா.










அனலைதீவு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினரால் அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் உதவியுடன் நடாத்தப்படும் மாலைநேர வகுப்பு மாணவர்களுக்கான வாணி விழா  Oct 23.2018ம் திகதி அனலைதீவு பொது மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாணவர்களின் மகிழ்வான தருணங்களின் பதிவுகள். பனை ஓலை குட்டான் பயன்பாட்டை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி  பனை வளத்தின் சிறப்பை அவர்கள் மனதில்பதியவைக்கும்  நல்ல முயற்சியை வெகுவாகப் பாராட்டுகிறோம். நிகழ்வை சிறப்பாக நடாத்திய  அனலைதீவு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்து  இதுபோன்ற முயற்சிகள் தொடர வாழ்த்துகிறோம்.
-அனலைதீவு கலாசார ஒ;னறியம் கனடா














































Saturday 20 October 2018

மானம் பூ.

 Oct.19.2018ம் திகதி அனலைதீவு சீத்தாசல்லி ஸ்ரீமகாவிஷ்ணு ஆலய மானம் பூ திருவிழா.
படங்கள்:திரு.த.கோகுலராஜ்