Tuesday 30 October 2018

மரம்.

 அனலைதீவு இயற்கை வளத்தைப் பேணிப்போற்றுகின்ற முறையில் பல ஆண்டுகளாக மரம் வளர்ப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் வேதனைக்குரிய முறையில் பெருமரங்களாக வளர்ந்து முதிர்ந்த மாமரம் வேப்பமரம் அடியோடு வெட்டியும் பிடுங்கியும் சாய்க்கப்பட்டிருக்கிற செயலானது நமது கவனத்திற்கு முக்கியமான செய்தியைத் தருகிறது. மரங்கள் நடுவது மட்டும் பயன்தராது. அவற்றை பாதுகாக்கும் சட்டரீதியான நடைமுறைகள் கடினப்படுத்தப்படவேண்டும். இதுபோன்ற வன்மையான செயல்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சமூகம் முன்னெடுக்கவேண்டும். வெளிநாடுகளில் வாழும் ஊரவர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் மரங்களுக்கான சட்டதிட்டங்களை நன்கு அறிவர். இருந்தும் ஊருக்குப்போய் அங்குவாழும் மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வை சீர்குலைக்கும் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்கவேண்டும்.காணி நமது என்பதால் பயன்தரும் மரங்களை வெட்டிச்சாய்க்கும் செயல் தவறானது. மரங்களை வெட்டிச் சாய்த்த நபரால் தன்வாழ்நாளுக்குள்  இதுபோன்ற மரத்தை வளர்த்துப் பார்க்க முடியாது.அனலைதீவு மண்ணில்இதுபோன்ற செயல் இனிமேல் நடக்காமல் இருக்க வழிவகுப்போம்.










No comments:

Post a Comment