Friday 31 October 2014

கணணி.




அனலை சமூகநல மன்றத்தினால் நடாத்தப்படும் அறிமுக கணணி வகுப்புகளில் மாணவர்கள்.
இவ்வகுப்புகளை பல சிரமங்களுக்கும் மிகுந்த பொருட்செலவுகளுக்கும் மத்தியில் தொடர்ந்து நடாத்துவதினால் மாணவர்கள் அடையும் பயனை எண்ணி நாம் மகிழ்வோம். இப்பணியில் எம்மோடு அக்கறையோடு பணியாற்றும் திரு.க.உதயப்பிரகாஷ், திரு. தனேஸ் ஆகியோருக்கும் மற்றும் மேற்பார்வையாற்றும் கிராம அலுவலர் திரு.நா.தர்சன் அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
அனலை சமூகநல மன்றம்.
October 31.2014.























Saturday 25 October 2014

சனசமூக நிலையம்.



அனலைதீவு வடக்கு சனசமூக நிலையம் மீண்டும் புத்துயிர்பெற்று அறிவு வளர்க்கும் பணியில் இணையவேண்டும். இச்சனசமூக நிலையத்தில்  பத்திரிகை வாசித்த ஞாபகமுள்ளவர்களில் பலபேருக்கு இக்கட்டிடத்தின் தோற்றம் வேதனையைத்தரும். இனியேனும் இக்கட்டிடம் உயிர்கொண்டு அறிவிக்கூடமாக மாற  உதவுமாறு ஊர்மக்களனைவரினதும் சார்பாக  மனம் படைத்தவர்களனைவரிடமும் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். 
                                                                                                                         அனலை சமூகநல மன்றம்.













திருக்குளம்.



அனலைதீவிலுள்ள குளங்களில் ஊர்மக்களின் மனங்களில் ஆழமாக நிறைந்திருப்பது நயினாகுளம் என்ற திருக்குளமாகும். தற்போது இக்குளம் தண்ணி தேங்கிநிற்கும் குண்டு நிலமாக தூர் நிறைந்து அழகிழந்துள்ளது. இக்குளமானது தூர்வாரப்பட்டு அணைகட்டி நீர்தேக்கி ஊரின் நிலத்தடி நீரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நன்னீர் தேவைகளை மேன்மைப்படுத்துவதோடு ஐயனாரின் திருக்குளத்தின் மேன்மையும் புகழும் நிலைத்தோங்க மனம்படைத்தவர்கள் முன்வந்து மேற்குறிப்பிட்ட திருப்பணிகளை நிறைவேற்றித்தருமாறு பணிவோடு வேண்டுகிறோம்.


                                                அனலை சமூகநல மன்றம்.



.