Saturday 30 July 2016








Monday 25 July 2016

கண்ணீர்.




என் தீவில்
தாகம் கொள்ளுது தண்ணீர்.
எதிர்காலம் அள்ளுது  கண்ணீர்.
வெந்நீர்  ஊற்றும் சோம்பல்
வேர்மேல் என்று அறியாது
விக்கல் வந்தால் கடலில்
குடிநீர் துளியும் கிடையாது.
கருவறைக் குடமும் நீர்தானே
கிணற்றில் உப்பை இடலாமா?
இருப்பதை இறைத்து வதம் செய்து
என் தீவின் அடிமடி தொடலாமா?

கோடி முனிவர் தவத்திற்கும் என்
வயல்வெளித் தண்ணீர் கிடைக்காது.
பேரலை பொங்கிப் புடைத்தாலும் என்
தீவின்  கரைகளை உடைக்காது.
சுண்ணப் பாறைகள் உடையும் முன்னே
மனிதா துளியிலும் கடவுளைப்பார்.
எண்ணத் தவறுகள் அரித்த பின்னே
உன்னைத் தவிர்த்து பிற  உயிரே வாழும்.
-சிவம்.


அனலைதீவில் வயல்வெளியிலுள்ள பொருக்குக்கிணறும் அருகில் ஒரே நீருற்றுவாயில்  மக்களின் குடிநீர் வசதிக்காக தோண்டப்பட்ட கிணற்றுத் தண்ணீரும் பவுசரில் நீர் உறிஞ்சும் நடைமுறையால் இருநீர்த்தன்மையை  எட்டிவிட்ட நிலையிலேயே நாம் இந்த நடைமுறையை அதே மக்களின் நன்மை கருதி நிறுத்துமாறு கோருகிறோம். இக்கருத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரும் உணர்கின்றனர்.அவர்களின் அனலைதீவு மக்கள் மீதான அக்கறையையும் அவர்களின் சேவைகளையும் மதித்து நன்றியுள்ளவர்களாகவேயுள்ள நாம் தயவுசெய்து இந்தத்  தீவிலுள்ள குடிநீர் வளத்தை பாதுகாத்துத் தருமாறு பணிவோடு வேண்டுகிறோம். 

இக்கருத்துடனும் வேண்டுகோளுடனும்  உடன்படுபவர்களும் முரண்படுபவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துமாறு வேண்டுகிறோம்.
இப்பதிவுக்கான முழுப்பொறுப்புடனும் 
பணிவுள்ள
-சிவம்.








Thursday 21 July 2016

ryu8வேண்டுகிறோம்.




ஆழக்கடலால் சூழப்பட்ட அனலைதீவு பொருக்குத் தண்ணியும் நாமும்.
வயல்வெளியிலுள்ள கிணறுகளிலிருந்து பவுசர்மூலம் தண்ணி அள்ளி குடிநீரை ஊப்பு நீராக்கும் முறையை வருங்கால சந்ததியினரின் வாழ்வு கருதி நிறுத்துமாறு பணிவோடு வேண்டுகிறோம்.

Tuesday 19 July 2016

தீர்த்தத் திருவிழா.

 அனலைதீவு ஐயனார் கோவில் தீர்த்தத் திருவிழா. July 19.2016.



 படங்கள்:திரு.வை.தனேஸ்.













Monday 18 July 2016

மீட்டுத் தா.



 மீட்டுத் தா.

கூழாவடியானே நல்ல குடிநீரைத் திருப்பித்தா.
ஆழச் சுழியோடும் கடல் வளத்தைக்  கரைக்குத்தா.
ஏழாற்றுத் திடலுக்குள் ஏர் கிளறும் வெளிச்சம் தா.
கீழாற்றுப் பாறையிலே நன்னீரின் முடிச்சைத் தா.
நாளைக் குழந்தைக்கு உயிர்க்குமிழை அவிழ்த்துத்தா.
வாடைக்காற்றும் நனைந்திருக்க பறி முழுதும் நெய்தல் தா.
வாடிப்போகும் சோளகத்தில் ஊர்முழுதும் மருதம் தா.
கோபுரத்து உச்சிதொட  ஒரு நூலகத்தைக் கட்டித்தா.
மாம்பூவும் தேன்பலாவும் மண் இனிக்க நட்டுத்தா.
காவோலையாய்ப்  பழுக்கும் முன்பே கைவினையைக் கற்றுத்தா.
ஆ வளர்த்து  சேதனத்தில் அறுவடையைப் பெற்றுத்தா.
ஆண்டவனே இயற்கைமீதும் மனிதனுக்குப் பற்றுத்தா.
-சிவம்.

தேர்த்திருவிழா.

 அனலைதீவு ஐயனார் கோவில் தேர்த்திருவிழா. July 18.2016.
படங்கள்:திரு.வை.தனேஸ்.