Monday 18 July 2016

மீட்டுத் தா.



 மீட்டுத் தா.

கூழாவடியானே நல்ல குடிநீரைத் திருப்பித்தா.
ஆழச் சுழியோடும் கடல் வளத்தைக்  கரைக்குத்தா.
ஏழாற்றுத் திடலுக்குள் ஏர் கிளறும் வெளிச்சம் தா.
கீழாற்றுப் பாறையிலே நன்னீரின் முடிச்சைத் தா.
நாளைக் குழந்தைக்கு உயிர்க்குமிழை அவிழ்த்துத்தா.
வாடைக்காற்றும் நனைந்திருக்க பறி முழுதும் நெய்தல் தா.
வாடிப்போகும் சோளகத்தில் ஊர்முழுதும் மருதம் தா.
கோபுரத்து உச்சிதொட  ஒரு நூலகத்தைக் கட்டித்தா.
மாம்பூவும் தேன்பலாவும் மண் இனிக்க நட்டுத்தா.
காவோலையாய்ப்  பழுக்கும் முன்பே கைவினையைக் கற்றுத்தா.
ஆ வளர்த்து  சேதனத்தில் அறுவடையைப் பெற்றுத்தா.
ஆண்டவனே இயற்கைமீதும் மனிதனுக்குப் பற்றுத்தா.
-சிவம்.

No comments:

Post a Comment