Sunday 25 October 2020




 

Saturday 24 October 2020

நினைவு.







இன்று யாழ் அனலைதீவு சமூக ஆர்வலர் செல்வா வீரகத்தி அவர்களின் நினைவாக மூன்று பாடசாலையை சேர்ந்த ஒன்பது மாணவர்களிற்கு கற்றல் உதவி வழங்கப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் எழுது பொருட்களும் அதே பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இவ் மாணவர்களில் தாய் மற்றும் தந்தையை இழந்தவர்.
வறுமைக்கோட்டுக்குள் வாழும் சிறந்த புலமையை காட்டும் இரட்டையர்கள் போன்றவர்களும் அடங்குவர்.
இவ் செயல்திட்டத்தை ஏற்பாடு செய்த எனது நண்பருக்கு நன்றிகள்.





 

இரும்பு மனிதன்.


 

திரு.நாகன் ஐயன்!(முணைச்சான்)

இந்த இரும்பு மனிதன் 2010 ஆண்டு தனது 63 வது வயதில் இறைபதமடைந்துள்ளார்.

இந்த இரும்பு மனிதனைப்பற்றி  நினைவுகொண்டேயாவேண்டும்.

ஊரிலுள்ள வீதிகளனைத்தும் இவன் இரும்புக் கரங்களின் பங்கில்லாமல் நீண்டவைகளல்ல.

ஊரிலுள்ள கிணறுகளில் பெரும்பாலானவை இவன் இரும்புக் கரங்களின் பங்கில்லாமல் ஆழ்ந்தவைகளல்ல.

மிகக் குறிப்பாக இலங்கையின் பெருமைமிக்க சித்திரத்தேரான அனலைதீவு ஐயனார் கோவில் சித்திரத் திருத்தேருக்கான  மரங்களின் காடுகளிலிருந்து ஊரின் கரை வரைக்கான பயணத்தை தமது பிரமிப்பான சரிர பலத்துடன் மட்டுமே வாகனங்களில் ஏற்றி கொண்டுவந்துசேர்த்த உழைப்பாளிகளில் முணைச்சான் ஐயன் அவர்கள் மிக முக்கியமானவர் என்பதை நாமெல்லோரும் அவரின் மனைவியாரின் துயர்பகிர்வின்போது நினைவுகொள்வோம்.

புகைப்ட நன்றி: குடும்பத்தினர்

காலங்கள் எல்லாவற்றையும் கடந்து போகும். நாம் நமது ஊருக்காகச் செய்கின்ற சின்னச் சின்ன பயன்பாடான அர்ப்பணிப்புகள் காலத்தின் மடியை எப்போதும் கனக்கவைத்தபடியே நகரும்.

Tuesday 20 October 2020

திரு. செல்வராசா (செல்வா)

திரு. செல்வராசா (செல்வா): மரண அறிவித்தல் காலஞ்சென்ற வீரகத்தி வள்ளியம்மை அவர்களின் புதல்வன் செல்வராசா (செல்வா) 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.   இவர் அனலைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கன�

Monday 19 October 2020


 செல்வா வீரகத்தி
இருள் குவிந்த பொழுதுகளில் வெளிச்சமாகவும்
வெளிச்சங்களின் தீரத்தின்போது நிழலைப்போலவும்
என் துணிவின் பாதியாய் இருந்தவன்.
அவன் செய்து சேர்த்துவைத்தவை
அவன் இடைவெளியை நிரப்புமளவானவை.
உன் மனவெளிக்காற்றிடை
ஊர் நினைவே சுழன்றிருக்கும்.
உன் நினைவுகளால்........

Sunday 18 October 2020

பனை விதை விதைப்பு.


 

பனை விதை விதைப்பு.
நமது ஊருக்கு வளத்தையும், வனப்பையும் கொடுக்கும் பனைகள் வயதோய்ந்துவிட்டன. வயதெல்லையை இட்டுநிரப்புவதற்கான கால எல்லையின் இடைவெளி தொலைத்துப்போய்விட்டது. 20 வருடங்களின் பின் மிகக்குறைவான அல்லது பனைகளற்ற ஊர்மாதிரியான தோற்றப்பாட்டை நம்மால் இப்போதே உணரமுடிகிறது.
ஊரிலுள்ளவர்கள் அனைவரும் ஒருமித்தபடி தமது வளவுகளிலெல்லாம் வேலியின் நான்கு கரைகளிலும் பத்து அடிக்கொரு பனம் விதையை விதைத்து நமது அடுத்த சந்ததிக்கு நமது முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற பனைவளத்தை நன்றியோடும் பொறுப்புணர்வோடும் கொடுத்துச் செல்ல முயற்ச்சிப்போம்.
இந்த முயற்சியில் ஊரிலுள்ள அனைத்து ஆலய நிர்வாகங்களும் மனமுவந்து செயற்படவேண்டுமென்பது நம்மனைவரினதும் பணிவான வேண்டுகோளாகும். ஊருக்கான அனைத்து பொது அமைப்புகளும் தமது வலுவுக்கேற்ப இந்த நற்பணியில் பங்குகொள்ள வேண்டும் என்பதும் நம்மனைவரினதும் பணிவான வேண்டுகோளாகும்.
வெளிநாடுகளிலுள்ள ஊரவர்கள் தமது காணிகளில் சாத்தியமான அளவு பனை விதைகளை விதைத்து பனைவளம் பெருக்க பேராதரவு தந்துதவுமாறு பணிவோடு வேண்டுகிறோம்.

Saturday 17 October 2020

அலைமுதிர்சோலை: கடல்.

அலைமுதிர்சோலை: கடல்.:  அறுபத்தியாறு உயிர்க்கூடு கடலோடுதான். அணையாத தீக்காடு மனதோடுதான். கால் நூற்றாண்டுகளைக் கடந்தும் 06.10.1990ம் திகதி நடைபெற்ற படகு விபத்த...

Saturday 10 October 2020

1990 நினைவலைகள்


Oct.06.2020

உயிர் நனைந்த  கடல்வழியே இருள் போர்த்தினோம்.
நினைவலைகள் மெழுகிய வெண் கரை பார்க்கிறோம்
கரைவந்து இந்நாளில் உயிர்த்திவலை காத்திருக்காதோ?
ஊர் எங்கே உறவெங்கே அலை ஓங்கிக் கேட்டிருக்காதோ?



நன்றி: ACOC
 

 
 
 
 
 
 
 
 
 
 

அனலைதீவின் இடர்ப்பாடுகளின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உறுதுணையாகும் பிரதேச செயலகம், காவற்துறை, கடற்படை, கிராம அலுவலர்கள், சுகாதாரத்றையினர் மற்றும் ஊரில் பொதுப்பணியாற்றும் அத்தனை நல்லுள்ளங்கள்

அனைவருக்கும் அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக மனம்நிறைந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.