Tuesday 29 September 2015

நயினார் குளம்.




நயினார்  குளத்தின் மகிமை!

பேராற்றும் வள நயினார் குளக்கட் கோவில்
பெரிதுவந்த ஆரியரே ஆடீரூன்சல்.
-ஐயனார் திரு ஊஞ்சல்

கானமரு திருவணலைப் பதியில் மேவும்
கதியுதவு நயினார் நற்குளமே மேலா
-ஐயனார் திரு ஊஞ்சல்

நந்துசேர் புனற்றுறை சூழ் பண்ணை நயினார்
குளப்பதி சேர் சுந்தரத் திருமந்திரத்தவர் சுவாமி எச்சரிக்கை.
- எச்சரிக்கை

ஆலயங்களை புனரமைத்து பொழிவுற  மகிழ்வு கொள்ளும் நாம்
நயினாகுளத்தானே!  கூழாவடியானே! என மெய் உருகி அழைப்பதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.

நயினார் குளத்தின் இன்றைய தோற்றம் அதனை தூர்வாரி கரை கட்டிப் பேணவேண்டிய தேவையை நமக்கு உணர்த்துகிறது. ஐயனார்மீதும், ஊர்மீதும் பற்றுள்ளோர் முன்வந்து முயற்சிசெய்து இத்திருப்பணியைச் செய்வது ஊரின் நிலத்தடி நீரின் அவசியத்தையும்,  பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி வேளாண்மைக்கும், நன்னீர் தேவைக்கும் உறுதுணையாக அமையும்.
ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் வெளிநாட்டிலுள்ள அதன் பிரதிநிதிகள் இப்பணி பற்றி ஆவன செய்யவேண்டுவது ஊரவர்களாகிய நம்மனவைரினதும் கடமையாகும்.

அடியேனின் ஆதங்கம்.
த -நாராயணன்.









Wednesday 16 September 2015

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இலங்கைக்கு ஏன் பொருத்தமற்றது?
                         -      பொறியியலாளர்:  எம்.சூரியசேகரம்
     இலங்கையில் நீர் வளங்கள் நிறைய உண்டு. உண்மையில் எமது குடிநீர்த் தேவை, வீட்டுப்பாவனைத் தேவை, விவசாய மற்றும் கைத்தொழில் பாவனையின் தேவை போன்றவற்றிற்கும் மேலதிகமான அளவில் நீர் உண்டு.
        எமக்கு போதுமான அளவு மழை வீழ்ச்சி உண்டு. எம்மிடம் வற்றாத நதிகள், நீரோடைகள், வாவிகள், குளங்கள் மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பாக நீர் வில்லைகள் உண்டு. தவறான நீர் நிர்வாகத்தால் மிக அதிக அளவிலான நன்னீர் வீணே கடலில் செல்ல விடப்படுகிறது. இதனால் தான் “சொர்க்கத்திலிருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும் மனிதனால் பயன்படுத்தப்படாமல் கடலுக்கு செல்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.” என மன்னன் பராக்கிரமபாகு பிரகடனம் செய்தான்.
         நீர் நிலைகளை எண்ணை, கிறீஸ், இரசாயன உரம் போன்றவற்றால் மாசடையா வண்ணம் பாதுகாத்து ஏனைய உலக நாடுகளில் செய்வது போன்று மீள் விநியோகம் செய்தால் மிகவும் தட்டுப்படியான விலையின் தேவையான அளவு தரமான நீரை ஒவ்வொருவருக்கும் வழங்க முடியும்.
         இலங்கையில் போதுமான அளவு நன்னீர் வளம் மட்டுமல்ல அதனைக் கையாளத் தேவையான நிபுணத்துவம் உடைய குடிசார் பொறியியலாளர்கள், இயந்திர பொறியியலாளர்கள், மின் பொறியியலாளர்கள், புவியியலாளர்கள் போன்றோரும் உள்ளனர். இவர்க@டாக இயற்கையாய் அமைந்த நீர் வளத்தை ஒழுங்குபடுத்தி ஒவ்வொரு இலங்கையர்களதும் நீர்த் தேவைகளை திருப்தி செய்ய முடியும். எமது நாட்டின் நீர்ப்பாசன நாகரிகம் உலகம் புகழ் வாய்ந்தது.
         துரதிஷ்டவசமாக எமது அரசியல் வாதிகள் இதுபற்றி அறியாமை உடையவர்களாகவும் அத்துடன் அறிய மறுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் தான் கடல் நீரை சுத்திகரித்து குடி நீராக்கும் அமெரிக்க கம்பெனிகளின் வர்த்தக அழுத்தத்திற்கு உள்ளாகி அவர்களால் வழங்கப்படும் தரகுப்பண எதிர்பார்ப்புடன் செயல்;படுகிறார்கள். அதாவது எஸ்கிமோவர்களுக்கு குளிர்சாதனப் பெட்டி விற்க வந்துள்ளார்கள்.
1.   கடல் நீரை குடிநீராக்கும் செயற்பாடு செலவு கூடியது. இங்கு இரு வகையான வழிமுறைகள் கடல் நீர் உப்பை நீக்க பயன்படுத்தப்படுகிறன. ஒன்று சவ்வூடு பரவல் முறை,  மற்றையது வடித்தல் முறை. இரு முறைகளிற்கும் மூலதனச் செலவும் இயங்க வைக்கும் செலவும் மிக அதிகம். ஒருமித்தபடி பார்க்கப் போனால் இம் முறைகள் 5 மடங்கு மேலதிகமான செலவை வேண்டி நிற்பவை. இந்த ஒரு காரணத்தினால் தான் உலகின் செல்வந்த நாடான அமெரிக்கா கூட இத் தொழில் நுட்பத்தை நிராகரித்துள்ளது. ஏன் இந்த தந்திரத்தில் ஈடுபடுகிறீர்கள்? என்று எமது அரசியல் வாதிகளைப்பார்த்து நாம் கேட்க வேண்டும். இலங்கை அரசாங்கம் இதற்கான செலவை செலுத்தத் தயாரானால் நாம் ஏன் செலவைப்பற்றி கவலைப்பட வேண்டும்? என  TNA  அரசியல் வாதி கேட்டார். சிறு பிள்ளைத் தனமாக, பொறுப்பற்ற விதத்தில் கேள்வி கேட்கும் இத்தகையோர் உணர்ந்து கொள்ள வேண்டிய  உண்மை என்னவெனில் இத்திட்டத்திற்கு செய்யப்படும் செலவு நேரடியாகவோ,     மறைமுகமாகவோ மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டவை மட்டுமேயாகும்.
 இதற்கும் மேலாக மக்களுக்கு தேவையான பூர்த்தி செய்யப்படாத பல தேவைகள் இருக்கும் போது ஏன் இத்தகைய வளங்களை வீண் விரயஞ் செய்ய வேண்டும்? கடல் நீரிலிருந்து உப்பு நீக்கம் செய்யும் செயற்பாடு அதிக சக்தியில் தங்கி நிற்கிறது. இந்த சக்தி தேவைக்கு அதிக அளவில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் தங்கி நிற்க வேண்டும். இது நீண்ட காலத்திற்கு நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய செயற்பாடு அல்ல. உப்பு நீரை நன்னீராக்க தேவையான சக்தியை பெற பெற்றோலிய எரிபொருளை பிரத்தியேகமாக பாவிக்க வேண்டும். ஏற்கெனவே நாங்கள் சூழலை மாசடையச் செய்து மேலும் ஓசோன் மண்டலத்தை வெறுமையாக்கி பச்சை வீட்டு விளைவால் வளிமண்டலம் வெப்பமடைந்து கடல் நீர் மட்டம் உயர்ந்து மனிதன் வாழும் கரையோர வாழிடங்களை நீண்ட காலமாக இழந்து வருகிறோம். கடல் நீரிலிருந்து உப்பு நீக்கம் செய்யப்படும் முறையானது நீடித்து நிலைத்து நின்று எமது நீர்த் தேவையை பாதுகாக்கும் ஒரு முறையல்ல. செலவு கூடியதும், குறுகிய கால நலன் சார்ந்ததுமான இத் திட்டத்தால் நீண்ட கால பேரிடரை உருவாக்கவுள்ளோம். இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்பத்திலும், சக்தியிலும் என்றைக்குமே தங்கியிருக்கும் நிலையை அடைவோம். குடிக்கும் நீருக்கு கூட மற்றவர்களின் தயவை நாடியிருக்கும் நிலையை அடைவோம்.
2.   நீடித்து நிலைத்து நிற்றல்-இது தண்ணீர்த்தேவைக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு விடயத்திற்கும் அதாவது, வேலை, வாழ்வாதாரம், அபிவிருத்தி, பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரம், பொருளாதாரம், கலாசாரம், கல்வி போன்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும் இத்தகைய விடயங்களில் குறுகிய கால நேரத்தை மட்டும் பார்க்கக் கூடாது. நீண்ட கால நோக்கும், கொள்கையும் தேவை. நாம் எப்போதும் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய தீர்வை ஒரு கொள்கையாக, ஒரு தேவையாக கருத வேண்டும். கடல் நீரை நன்னீராக்கும் செயல் நிச்சயமாக நீடித்து நிலைத்து நிற்கக் கூடியதல்ல.
3.   மாகாணங்களை ஆட்சி செய்யும் போது (இலங்கையை ஆட்சி செய்யும் போது கூட) சூழலியல் விடயங்களில் அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டும். இது நீர் விநியோகம், மின் பிறப்பாக்கம், அபிவிருத்தி திண்மக் கழிவுகள் அகற்றல், கழிவு நீர் அகற்றல், விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து முதலிய எல்லாத் துறைகளிலும் பிரயோகிக்கப்பட வேண்டும். இதிலுள்ள ஒவ்வொரு துறைகளையும் பிழையாக நிர்வகித்தால் மிகப் பாரிய அளவில் சூழலியல் பாதிப்பு ஏற்பட்டுவிடும். நான் இங்கு TNA ஜக் கூறவில்லை. ஆனால்  TNA க்கு இத் தவறுகளை திருத்தும் அதிகாரம் உண்டு.
அத்துடன் மதி நுட்பமாக தமது அதிகாரத்தை விருத்தியடையச் செய்து நிலைமைகளை மாற்ற வேண்டும். இது வரைக்கும், எனது கருத்துப்படி TNAஇத் தவறுகளை மாற்றவில்லை. அத்துடன் மிக மோசமான கொள்கைத் தீர்மானங்களை எடுத்துள்ளது. இதற்கு எடுத்துக் காட்டாக இரணைமடுத் திட்டம், சுண்ணாகம் எண்ணை மாசு விடயம், மற்றும் மீன்பிடி வளங்களை பாதுகாத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
4.   நிறைந்த மழைவீழ்ச்சியாலும், வற்றாத ஆறுகளாலும், நீரோடைகளாலும் வடக்கில் நிலத்தடி நீர் வில்லைகளாலும் தேவைக்கு பொருத்தமான நல்ல நீரை, நல்ல சூழலை எந்தவித செலவும் இன்றி இயற்கை, இலங்கைக்கு அள்ளிக் கொடுத்துள்ள போது ஏன் நாம் செலவு கூடிய சுற்றாடலை பாதிக்கும், தங்கிநிற்கும், நீடித்து நிலைத்து நிற்காத, வெளிநாட்டு முதலீட்டுடன் கூடிய தொழில் நுட்பத்திற்கு செல்ல வேண்டும்? இயற்கை எமக்கு அளித்த கொடையை நிராகரித்;து ஏன் செலவு கூடியதும், பராமரிக்க கடினமானதுமான செயற்கையான தீர்வுகளை முன்னெடுத்து வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கும், அவர்களுடைய உள்@ர் ஊக்குவிப்பாளர்களிற்கும் பணத்தை வாரி இறைக்க வேண்டும்? நீருக்கு அதிக விலையை செலுத்துவதைத் தவிர வேறென்ன பயனை எமது மக்கள் பெற்றுவிடப் போகிறார்கள்? இதில் எந்த தர்க்கமும் ஒழுங்கும் இருப்பதாக தெரியவில்லை.
       எமக்கு உப்பு நீக்கும் தொழில் நுட்பத்தை விற்பதற்காக மற்றுமொரு பொய்யை அல்லது கட்டுக் கதையை ஆர்பரிப்புடன் பிரசாரம் செய்கிறார்கள். அதாவது நாம் தற்போது கொண்டு செல்லும் நீரிலும் பார்க்க உப்பு நீக்கம் செய்யப்பட்ட நீர் தூய்மையானது என்பதே அதுவாகும். உண்மையில்  H2O குடிப்பதற்கு உகந்தது அல்ல. இது மோட்டார் வண்டி மின்கலத்திற்குதான் (பழைய வகை) உகந்தது. புதிய வகை மின்கலங்கள் பராமரிப்பற்று சேவையாற்றுபவை. ‘விஸ்கி’ க்கு பதிலாக துய மதுசாரத்தை யாரும் குடிக்க மாட்டார்கள். தூய உப்பு (சோடியம் குளோரைட்) உடலுக்கு நல்லதல்ல. அதனால்தான் உப்புடன் அயடினையும் சேர்க்கிறோம்..
       தூய்மை, கன்னித் தன்மை போன்ற பழைய கருதுகோள்கள் 21ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தாதவை. குடிநீரில் நுண் கிருமிகள், பீடை கொல்லிகள், நைத்திரேற்றுக்கள், தொங்கும் அசுத்தங்கள், நாற்றம், நிறம் என்பவை இல்லாது இருக்க வேண்டும். ஆனால் தூய்மையாக இருக்கக் கூடாது. சில உப்புக்கள் விரும்பப்படுகின்றன. பற்கள் சிதைவடைவதை தடுக்க சில நாடுகள் நீரில் புளோரினை சேர்க்கின்றன.
       நாங்கள் முகங்கொடுக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக எந்த வித தீர்மானங்களும் எடுக்காதவர்களாகவே எமது அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களது தீர்மானங்களில் விஞ்ஞானத்திலும் பார்க்க அறியாமையே ஆட்சி செலுத்துகிறது. மோசடிகளால் தங்களை வளப்படுத்திக் கொண்டு அதிகாரத்தில் இருக்கிறார்கள். பொறுப்பற்ற வகையில் செலவு செய்தல், வறுமையுடன் கூடிய பொருளாதார சார்பு நிலையை பேணல், கடன்களை உருவாக்குதல் போன்ற அபாயங்களுக்கு எதிராக எமது மக்களை காக்க தொடர்சியாக அறைகூவல் விடுவிக்க வேண்டும்.
       மழைவீழ்ச்சி,  ஆறுகள்,  நீரோடைகள்,  நிலத்தடி நீர் போன்ற  இயற்கை  நீர் வளங்கள் அற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு தூய நீர் வழங்க அமெரிக்க கம்பெனிகளால் உருவாக்கப்பட்டதே இந்த உப்பு நீக்கும் தொழில்நுட்பம்.
       அமெரிக்க, ஐரோப்பிய கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தும் நாடுகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. பெருந்தொகையான இலாபத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பெறும் இக் கம்பெனிகள், தற்போது எங்களை மயக்கி, தந்திரமாக எங்களுக்கு பொருத்தமற்ற இத் தொழில்நுட்பத்தை வாங்கும்படி செய்து பெரும் இலாபத்தை சம்பாதிக்க முயல்வதோடு எமது மக்களை வறுமையில் தள்ளி என்றுமே குடிநீருக்காக அவர்களில் தங்கி நிற்பவர்களாக மாற்ற முயல்கிறார்கள். நாம் முட்டாள்களாக இருந்தால் மட்டுமே எப்போதுமே உயிர் வாழ்தலில் அவர்களில் தங்கியிருக்கும் இப் பொறியில் சிக்குவோம். எமது மடமையை பயன்படுத்தி தங்களது வங்கிகள் நிரப்பப்படுவதை எண்ணி அவர்கள் தனிப்பட்ட ரீதியில் நகைத்துக் கொள்வார்கள்.
       சவுதி அரேபியாவிலும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலுமுள்ள உரிமம் பெற்ற அமெரிக்க கம்பெனிகள் தாம் கட்டுப்படுத்தும் எண்ணைக் கிணறுகளிலிருந்து பெருந்தொகையான இலாபத்தை பெற்று வருகின்றன. அது மட்டுமல்லாது மத்திய கிழக்கிலும், குறிப்பாக சவுதி அரேபியாவிலும் உள்ள எல்லா வகையான கட்டிடத் தொழில்கள், இராணுவ ஆயுத விநியோகங்கள், விவசாய நுண்நீர்ப்பாசனம், எனப் பல்வேறு துறைகளையும் இக் கம்பெனிகள் கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்கா உண்மையிலேயே ஒரு பொலிஸ்காரனைப் போல சவுதி அரேபியாவிலுள்ள உப்பு நீக்கும் தொழில்நுட்பத்தை ஆட்சி செய்கிறது. சவுதி அரேபியா இப்போது அமெரிக்காவின் ஒரு பொம்மை அரசு. எமக்கு வரப்போகும் பல தீமைகளுக்கு மைல் கல்லாக அமையப்போவது இந்த உப்பு நீக்கும் செயற்பாடே.
        நாம் எமது பிரதிநிதிகளை தெரிவு செய்தது,  எமது மக்களிற்கு மட்டும் சேவை செய்யவே ஒழிய அமெரிக்க கம்பெனிகள், ஐக்கிய அமெரிக்க குடியரசிடம் இருந்து எந்த வகையான சுய இலாபங்களை பெறுவதற்கல்ல என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக் கூடாது.
ஆங்கிலம் வழியாக தமிழில்

இ.கிருஷ்ணகுமார்;

 சிந்தனைக் கூடம்
ஆர். சிவச்சந்திரன்
 http://www.thenee.com

Saturday 5 September 2015

கொகா கோலா சம்பவம்: அடுத்த ‘பிளச்சிமட’ நாங்களா?
- அரிஷா விக்கிரமநாயக்க
ஆகஸ்ட் 17, 2015 அன்று, இலங்கையிலுள்ள கொகா கோலா தொழிற்சாலை டீசல் எணcoca_cola_coke_india்ணெயை களனி ஆற்றினுள் கசியவிட்டு, கொழும்பு புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பல இலட்சக் கணக்கானவர்களின் நீர் விநியோகத்தை மாசுபடுத்தியது. கொகா கோலா, மென்பானக் கைத்தொழில் துறையில் உலக முன்னோடியான ஓர் அமெரிக்க பல்தேசிய நிறுவனமாகும். உலக ரீதியாக ஓர் அடையாளச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக இருந்த போதிலும், குறிப்பாக நிலையற்ற நீர்ப் பாவனை நடைமுறைகள் தொடர்பாக, அது நேர்மையற்ற சுற்றாடல் பிரச்சினைகள் பலவற்றில் சம்பந்தப்பட்டிருந்தது. இந்தப் பிரச்சினைகளில் சுற்றாடலைக் கடுமையான வகையில் பாதித்து அதன் மூலமாக கொகா கோலா அதன் உற்பத்திகளைத் தயார் செய்வதற்காக வீடு என அழைக்கப்படும் பல பகுதிகளிலுள்ள பல மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளது.

தற்போது நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பதற்கு முற்பட்டமைக்காக இலங்கை ஒரு மன்னிப்பைக் கோருகிறது. எவ்வாறாயினும், கொகா கோலா ஏற்படுத்தக் கூடிய மோசமான பாதிப்புகளை உண்மையில், ஏனைய பல சமூகங்களில் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் பற்றி பலரும் அறிந்திருக்காது காணப்படுகின்றனர். அத்தகையதொரு சமூகமே பிளச்சிமடவிலுள்ள ஒரு சமூகமாகும். பிளச்சிமட, இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய மீன்பிடி மற்றும் விவசாயக் கிராமமாகும். 1999இல் கேரளா அரசு இந்தியாவிலுள்ள கொகா கோலா நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனத்தை பிளச்சிமடக் கிராமத்தில் ஒரு தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு அழைப்பு விடுத்தது. இரண்டு வருடத்தினுள் பிளச்சிமடக் கிராமத்தவர்கள் தொழிற்சாலையின் பாதிப்புகளை உணரத் தொடங்கினர். அவை கடுமையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் தண்ணீர் மாசாகுதல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அங்கு நடந்த கதை இன்று இலங்கையில் நடந்ததற்கு ஒத்ததாகும்.

கொகா கோலா பிளச்சிமடக் கிராமத்து நிலங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் கட்மியம் மற்றும் ஈயம் என்பவற்றை மிக அபாயகரமான உயர்ந்த மட்டங்களில் வெளியிட்டது. அது பயிர் வேளாண்மை பொய்த்துப் போவதற்கும் மற்றும் கிராமத்தின் பெறுமதியான நிலத்தடி நீரை மாசுபடுத்தவும் செய்தது. இதற்குப் பதில் நடவடிக்கையாக, பிரதேசத்தின் இயற்கை வளங்களை மேலும் சுரண்டுதல் மற்றும் மாசுபடுத்தல் என்பவற்றிலிருந்து கொகா கோலா நிறுவனத்தை நிறுத்துவதற்கு மக்கள் பரந்தளவில் கீழ் மட்ட நிலையிலான இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். இறுதியாக ஆகஸ்ட் 2006 இல், கேரளா அரசு மற்றும் மத்திய அரசின் உணவு அதிகாரசபை என்பன மேலதிக புலன்விசாரணைகள் நடத்தி, பீடைநாசினிகள் மற்றும் அபாயகரமான இரசாயனங்கள் என்பன உற்பத்தியில் காணப்பட்டதாகக் குற்றம் சாட்டி, கொகா கோலா உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்தன. இதைப் போன்ற சம்பவங்கள் மகாராஷ்டிர மாநிலத்தின் வடா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேகடிங்கனி போன்ற நாட்டின் ஏனைய பல இடங்களிலும் நிகழ்ந்ததுடன், ஏனைய பல சமூகங்களும் இதனைப் போன்ற காரணங்களுக்காக கொகா கோலா வசதிகளை எதிர்த்து பிரேரித்தனர்.

பிளச்சிமடவில் ஏற்பட்ட சம்பவங்கள் அண்மையில் களனி ஆற்றுப் பகுதியில் நடைபெற்றதை விட கூடுதல் பாதிப்புக் கொண்டதாக நிரூபிக்கப்படலாம். எவ்வாறாயினும், விசேடமாக கட்டுப்பாடுகள் இல்லாது விடப்படும் போது அநேகமான சந்தர்ப்பங்களில் மேலும் மீறல்களுக்குள்ளாக ஒரு முன்னறிகுறியாக அமைவது தண்ணீர் மாசுபடுதல்களுடன் மாத்திரம் ஆரம்பிக்கும் பிரச்சினைகள் அல்ல. வசதிகள் திட்டமான முறையில் புலன்விசாரணை செய்யப்பட்ட பின்னர் மாத்திரமே அநேகமான சந்தர்ப்பங்களில் மேலதிக பிரச்சினைகள் மற்றும் ஆபத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

coca_cola_coke_india

இலங்கை அரசு கேரளாவை ஒரு உதாரணமாகக் கொண்டு அதற்கு எதிராக இப்போழுதே ஒரு வkeral cola protestலுவான நிலைப்பாட்டை கொகா கோலா நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்தல் வேண்டும். பிளச்சிமட நெருக்கடிகளின் பின் கேரளா அரசு நிலத்தடி நீர் வளங்களுக்கான கேரள நிலத்தடி – கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்ட மூலம் 2002ஐ வரைவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இயற்கை வளங்கள் மற்றும் அதன் பிரஜைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும். தற்போது நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட அபராதத்தைக் குறைப்பதற்கும் மற்றும் வழக்கை கொகா கோலா நிறுவனத்திற்கு சாதகமான ஒரு வகையில் தீர்ப்பதற்கும் அரசு அழுத்தங்களுக்கு உள்ளாகிறது. எவ்வாயாயினும், பிளச்சிமடவின் கிராமத்தவர்கள் துன்பப்பட்டது போலானதிலிருந்து இலங்கையர்களைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக நிற்பதும் முக்கியமானதாகும். விசேடமாக, சுற்றாடலுக்கு ஆதரவான ஒரு நிறுவனம் என்ற பிம்பத்தை நிறுவனம் அடிக்கடி ஏற்படுத்த முயற்சிப்பதாலும் மற்றும் காலநிலை மாற்றத்தை முகப்பாகப் பயன்படுத்தி அதன் உற்பத்திகள் “இயற்கை சார்ந்தவை” என விளம்பரப்படுத்துவதாலும் கொகா கோலா நிறுவனம் தனது தவறுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதும் அவசியமாகும். இதனாலேயே எதிர்காலத்தில் இதைப் போன்ற பொறுப்பற்ற நடத்தைகளை தடுப்பதற்கு ஒரு நன்கு தகுந்ததும் மற்றும் கணிசமானதுமான ஒரு அபராதத்தை கொகா கோலா நிறுவனத்திற்கு அரசு விதித்தல் வேண்டும் என்பதோடு, எங்கள் நாட்டின் வளங்களின் அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டும் மற்றும் அவற்றை மாசுபடுத்துவதிலிருந்து நிறுவனங்களைத் தடுப்பதற்கு சுற்றாடல் கொள்கைக் கட்டுப்பாடுகளை உருவாக்குதல் வேண்டும்.

சம்பவத்தின் உண்மை நிலைகளை மக்களுக்கு அறியப்படுத்தி இந்த நாட்டின் பிரஜைகளைப் பாதுகாப்பதலில் தனது ஆர்வத்தை வெளிக்காட்டுவதும் இலங்கை அரசுக்கு அதேயளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வசிப்போர்களுக்கு இந்த சம்பவத்தின் உடல் ஆரோக்கியம் தொடர்பிலான பாதிப்புகள் பற்றி முழுமையாகத் தெரியாது.

கொகா கோலா நிறுவனம் ஒரு அபராதத் தொகைக்கு மேலதிகமாக நீர் விநியோக சுத்தப்படுத்தல் முறைமையில் ஏற்பட்டுள்ள சேதப்படுத்தலின் முழுமையான செலவுகளைச் செலுத்துதல் வேண்டும் என்பதோடு சுற்றாடல் அதிகாரிகள் அவர்களது முறைகளைக் கிரமமான முறையில் பரிசோதிப்பதற்கு அனுமதித்தலும் வேண்டும். கொகா கோலா நிறுவனம் இவற்றுக்கு இணங்கவில்லையாயின், கேரளா போன்ற பாதிப்புகளில் துன்பப்படுவதிலிருந்து எங்களது நாட்டைத் தடுப்பதற்கு இலங்கையில் கொகா கோலா நிறுவனத்தின் உற்பத்திகளைத் தடைசெய்யும் ஒரு தெரிவைக் கவனத்தில் கொள்வது கூடுதல் பெறுமதி கொண்டதாக இருக்கும்.

ஒரு மன்னிப்பு போதுமானதன்று. ஏனெனில், அதற்கு நாங்களே முகங் கொடுக்கிறோம் – கொகா கோலா நிறுவனம் “கோக் வாழ்க்கையை அதிகரிக்கிறது” (1976) என எண்ணலாம். ஆனால், சிறந்ததை நாங்கள் அறிவோம்!

அரிஷா விக்கிரமநாயக்க

அரிஷா விக்கிரமநாயக்க புளோரிடா, கோரல் கபெலஸ், மியாமி பல்கலைக் கழகத்தில் ஒரு இறுதியாண்டு கல்வி கற்கும் பட்டாதாரி மாணவி. அவர் உயிரியல் மற்றும் சூழலியல் முறை விஞ்ஞானம் மற்றும் கொள்கை ஆகிய இரு துறைகளில் தனது பட்டப் பின்படிப்பைத் தொடர்கிறார்.
தமிழில் மாற்றம் இணையம்
http://www.thenee.com/html/060915-2.html

Thursday 3 September 2015


ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்.

 அனலைதீவு  ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய கல்யாணத் திருவிழாவும்  கலை நிகழ்ச்சிகளும். படங்கள்: திரு.தனேஸ்.Sep 03.2015.










Tuesday 1 September 2015

NANAIYUM KADAL..

NANAIYUM KADAL..







Maunaguru Sinniah


அருமையான lyric.ஒவ்வொரு வரிகளும் அர்த்தபூர்வமானவை.நல்ல இசை.இடையிற் காட்டப்படும் ஆளுமைகள் பாடலுக்கு மேலும் வலுத்தருகின்றன.இவர்களுட் சிலர் நான் நேரடியாகப் பழகியவர்கள்,சிலர் நெருக்கமான நண்பர்கள் அதனால் பாடல் என்னை அதிகமாக கவர்ந்திருக்கலாம்.பாடியவரின் குரலில் கம்பீரமும்,அழுத்தமும் இருந்திருந்தால் பாடல் மேலும் சோபித்திருக்கும்.சமூகப் பொறுப்புமிக்க மெல்லிசைப் பாடல் உருவாக்குவோர் மிக அருமை.பக்தி,காதல்,விரக்தி(இதற்கு அவர்கள் கொடுக்கும் பெயர் த்த்துவப் பாடல்) இவை பற்றிய பாடல்களே மிக அதிகம்.இப் பின்னணியில் இந்தப் பாடல் பாலை வனத்தில் நிழல் தரு ஒரு ஒற்றை மரம் போல எனக்குத் தெரிகிறது.உங்களுக்கும்உங்கள் குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Chat Conversation End




அண்மையில் வெளியிடப்பட்ட "நனையும் கடல்" என்ற தலைப்பிலான "அலையாத்திக் காடு" பாடல் பற்றி பெருமதிப்புக்குரிய பேராசிரியர் திரு.சி.மௌனகுரு அவர்களின் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் இங்கு பதிவுசெய்கிறோம். பேராசிரியரின் கருத்துக்கள் எமது படைப்பின் கனதியை எமக்குத் தெளிவுபடுத்தியதோடு ஆரோக்கியமான மன உந்துதலைத் தந்துள்ளது.பேராசிரியர் திரு.சி.மௌனகுரு அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.இப்படைப்பை அழகுபடுத்திய இசையமைப்பாளர் திரு.பிரியன் பாடகி.செல்வி.பானு.படத்தொகுப்பாளர்.திரு.துஷிகரன் ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றியுடன் சிவம்.