Saturday 29 June 2019

 படங்கள், பதிவு நன்றி:
- அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா

Friday 28 June 2019

முதலிடம்.



மாணவிகளுக்கான எல்லே விளையாட்டில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்தில் தேர்வாகியுள்ள அனலை சதாசிவ மகா வித்தியாலயத்துக்கு வாழ்த்துக்கள்!
இன்று மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது சதாசிவ மகாவித்தியாலயம்!
மாகாணமட்டப் பாடசாலைகளுக்கிடையில் இரண்டு நாட்கள் (Jun27,28, 2019) நடைபெற்ற மகளிருக்கான எல்லே விளையாட்டுப் போட்டிகளில் அனலை சதாசிவ மகா வித்தியாலயம் 33 பாடசாலைகளைப் பின்தள்ளி முதலாவது இடத்தைப்பெற்று, வெற்றி வாகை சூடி, தனக்கான ஒரு தனித்துவத்தை நிலைநாட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய அதிபர் மதிப்பிற்குரிய திரு.நா.இராதாகிருஸ்ணன் அவர்களின் அக்கறையுடனான விடாமுயற்சியும், ஊக்குவிப்பும் இந்த அளப்பரிய வெற்றிக்கு வித்திட்டது என்ற வகையில் மனநெகிழ்வோடு அவரைப் பாராட்டிக் கௌரவப்படுத்துகின்றோம்.
இடர்ப்பாடுகள் நிறைந்த ஒரு சமூக வெளியிலிருந்து தமது திறமைகளை ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் வளர்த்துக்கொண்டு கடுமையாக உழைத்து விளையாட்டுத்துறையில் மாகாண மட்டத்தில் முதல் நிலையில் வெற்றிபெற்றுள்ள நமது பேரன்பிற்குரிய வீராங்களைகள் அனைவருக்கும் உலகெங்கும் பரந்து வாழும் ஊர்மக்களனைவரினதும் சார்பாக மனம் நெகிழ்ந்த பாராட்டைத் தெரிவித்து ,
கெளரவப்படுத்துகிறோம்.
விளையாட்டுப் பொறுப்பாசிரியரும் பயிற்றுவிப்பாளருமான ஆசிரியர் திரு.சௌ.விஜயதாஸ், பயிற்றுவிப்பாளர்
க. உதயப்பிரகாஷ மற்றும் எல்லே விளையாட்டின் பொறுப்பாசிரியர்களான திரு.பா. யசோதரன் , திரு.அ. அருண்ராஜ் அவர்களுக்கும், மாணவர்களுக்கும் அணியை பொறுப்பாக அழைத்துச் சென்ற நமது பாடசாலையின் உப அதிபர் திருமதி. ஜெயந்தினி சிவபாலன் அவர்களுக்கும், ஆசிரியை செல்வி.ர. சுவேதிகா அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் உதவி செய்த நல் உள்ளங்களுக்கும், அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக
நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இது போன்ற சாதனைகள் தொடர இந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கான அடிப்படை வசதிகளை நாமாக முன்வந்து உரிய நேரத்தில் நிவர்த்தி செய்து உதவுவதே அவர்களுக்கான உண்மையான பாராட்டாக அமையுமென்பதை நாமனைவரும் உணர்ந்து இனிவருங்காலங்கள் அனலை சதாசிவ மகா வித்தியாலய விளையாட்டுத்துறையின் சாதனைக்காலங்களாகவும் அமைய ஒன்றிணைந்து உழைப்போம்!
நன்றிகள்:
அனலை சதாசிவ மகா வித்தியாலயம்
அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா.
படங்கள், பதிவு நன்றி:
- அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா


Wednesday 26 June 2019

கல்வி உதவித்தொகை.



அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தில் (Analaitivu Sathasiva MV ) மீண்டும் உயர்தர வகுப்பு நடைபெற அனைத்துப் பங்களிப்புகளையும் வழங்கிய அதிபர் மதிப்பிற்குரிய திரு.நா. இராதாக்கிருஷ்ணன் அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அனலை கலாச்சார ஒன்றியத்தினருக்கும்,ஊழியர்களுக்கும், பெற்றோருக்கும்,மாணவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பல வருடங்களாக பழைய மாணவர்களினாலும், ஆசிரியர்களின் குடும்பத்தினராலும் வரவேற்கப்பட்ட, அனலை ஆசிரியர்களின் நினைவாக உதவித்தொகை வழங்கலின் முதற்கட்டமாக, இந்தவருடம் சதாசிவ மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு (மாதாந்தம் ஒருவருக்கு ரூபா மூவாயிரம்) வழங்குதல்.
நம்மையும் நமது முன்னோரையும் அறிவுமயப்படுத்த உழைத்த ஆசான்களுக்கான கௌரவமாக அவர்களது நினைவாக அதிதேவையான உதவியை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு "கல்வி உதவித்தொகை வழங்கல்" (scholarship) என்ற திட்டத்தினூடாக நமது கிராமத்தின் முன்னோடிகளை கௌரவப்படுத்தும் முதற்கட்டக் கொடுப்பனவு வைகாசி, 2019 ஆம் ஆண்டிலிருந்து, அனலை மக்களின் ஆதரவோடு, அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பினால் மனப்பூர்வமாக தொடங்கிவைக்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை (scholarship) வழங்கல் மூலம் நினைவுகூரப்பட்டு கெளரவிக்கப்படும் ஆசிரியர்கள்.
திரு.அ.சின்னப்பா
திரு.சி. வேலுப்பிள்ளை
திரு.வே. ஐயம்பிள்ளை
திரு.ச. கணபதிப்பிள்ளை
திருமதி. சியாமளவல்லி கணபதிப்பிள்ளை
திரு.சி. தில்லையம்பலம்
திரு.சு. சிவபாதசுந்தரம் B.A
திரு.க. இளையதம்பி
திரு. வித்துவான் ப. கணபதிப்பிள்ளை B.A. (Hons)
திரு.வே. குமாரசாமி
திரு.ஐ. வைத்திலிங்கம்
நா.ப. இராசையா
திரு.நா. செல்லத்துரை
திரு.வி. நடராசா
திரு.க. சங்கரன்(சிவனடியான்)
திரு.மு. சீவரெத்ததினம்
திரு.இ. பொன்னம்பலம் B.A
திரு.ச. பொன்னம்பலம்
செல்வி. நாகமுத்து பசுபதிப்பிள்ளை
செல்வி. மனோன்மணி சுப்பையா
திரு.ச. பாலசிங்கம்
திரு.சி. நல்லையா
திரு.க. கோபாலபிள்ளை
திரு.வை. குணானந்தன்
திரு.கு. கணேசமூர்த்தி
கல்வி உதவித்தொகை பெற்றுக்கொள்ளும் மாணவ, மாணவிகள்.
இ. நிதர்சினி
றொ. அபிசா
அ. கபிலா
சி. டிசாளினி
ஜெ. றஜீவன்
த. டிலைக்சன்
பி. தர்மினி



 படங்கள்: திரு.த.கோகுலராஜ்.
 படங்கள், பதிவு நன்றி:
- அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா
















Thursday 20 June 2019


 அனலைதீவு கலாச்சார ஒன்றியத்தினால் நடாத்தப்படுகின்ற ஒன்றுகூடல், இவ்வருடம் Jun 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் போட்டிகளில் பங்குபெற்று்பவர்களை பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம்


பதிவு நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.

Saturday 15 June 2019

மாகாணத்தில் முதலிடம்.




அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய பெண்கள் துடுப்பாட்ட அணியினர் இன்று நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் வட மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்கள். அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய அதிபர் மதிப்பிற்குரிய திரு.நா.இராதாகிருஸ்ணன் அவர்களின் அக்கறையுடனான விடாமுயற்சியும் ஊக்குவிப்பும் இந்த அளப்பரிய வெற்றிக்கு வித்திட்டது என்ற வகையில் மனநெகிழ்வோடு அவரைப் பாராட்டிக் கௌரவப்படுத்துகிறோம்.
இந்த மகத்தான வெற்றியை தமதாக்கிக்கொள்ள உழைத்த மாணவச் செல்வங்கள், பொறுப்பாசிரியர் திரு.பா.யசோதரன், அணியை பயிற்றுவித்த ஆசிரியர்கள் திரு.சௌ.விஜயதாஸ், திரு..அருண்ராஜ், திரு..உதயபிரகாஷ் ஆகியோரை மனதாரப் பாராட்டுகிறோம்.
ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள், ஊக்குவித்த பெற்றோர் அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும்  சார்பாக மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்து அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறோம்.
இடர்ப்பாடுகள் நிறைந்த ஒரு சமூக வெளியிலிருந்து தமது திறமைகளை அடையாளங்காட்ட கடுமையாக உழைத்து விளையாட்டுத்துறையில் மாகாண மட்டத்தில் முதன்மையாகி வெற்றிபெறுவது மிகப்பெரிய சாதனைதான்.
இதுபோன்ற சாதனைகள் தொடர இந்த விiளாயட்டுவீரர்களுக்கான அடிப்படை வசதிகள் தேவைகள் பண உதவிகள் என்பவற்றை நாமாக முன்வந்து உரிய நேரத்தில் நிவர்த்திசெய்து உதவுவதே அவர்களுக்கான உண்மையான பாராட்டாக அமையுமென்பதை நாமனைவரும் உணர்ந்து இனிவருங்காலங்கள் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய விளையாட்டுத்துறையின் சாதனைக்காலங்களாக அமைய ஒன்றிணைந்து உழைப்போம்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம்-கனடா.

 பதிவு நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.


Sunday 9 June 2019


Thursday 6 June 2019