Friday 28 June 2019

முதலிடம்.



மாணவிகளுக்கான எல்லே விளையாட்டில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்தில் தேர்வாகியுள்ள அனலை சதாசிவ மகா வித்தியாலயத்துக்கு வாழ்த்துக்கள்!
இன்று மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது சதாசிவ மகாவித்தியாலயம்!
மாகாணமட்டப் பாடசாலைகளுக்கிடையில் இரண்டு நாட்கள் (Jun27,28, 2019) நடைபெற்ற மகளிருக்கான எல்லே விளையாட்டுப் போட்டிகளில் அனலை சதாசிவ மகா வித்தியாலயம் 33 பாடசாலைகளைப் பின்தள்ளி முதலாவது இடத்தைப்பெற்று, வெற்றி வாகை சூடி, தனக்கான ஒரு தனித்துவத்தை நிலைநாட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய அதிபர் மதிப்பிற்குரிய திரு.நா.இராதாகிருஸ்ணன் அவர்களின் அக்கறையுடனான விடாமுயற்சியும், ஊக்குவிப்பும் இந்த அளப்பரிய வெற்றிக்கு வித்திட்டது என்ற வகையில் மனநெகிழ்வோடு அவரைப் பாராட்டிக் கௌரவப்படுத்துகின்றோம்.
இடர்ப்பாடுகள் நிறைந்த ஒரு சமூக வெளியிலிருந்து தமது திறமைகளை ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் வளர்த்துக்கொண்டு கடுமையாக உழைத்து விளையாட்டுத்துறையில் மாகாண மட்டத்தில் முதல் நிலையில் வெற்றிபெற்றுள்ள நமது பேரன்பிற்குரிய வீராங்களைகள் அனைவருக்கும் உலகெங்கும் பரந்து வாழும் ஊர்மக்களனைவரினதும் சார்பாக மனம் நெகிழ்ந்த பாராட்டைத் தெரிவித்து ,
கெளரவப்படுத்துகிறோம்.
விளையாட்டுப் பொறுப்பாசிரியரும் பயிற்றுவிப்பாளருமான ஆசிரியர் திரு.சௌ.விஜயதாஸ், பயிற்றுவிப்பாளர்
க. உதயப்பிரகாஷ மற்றும் எல்லே விளையாட்டின் பொறுப்பாசிரியர்களான திரு.பா. யசோதரன் , திரு.அ. அருண்ராஜ் அவர்களுக்கும், மாணவர்களுக்கும் அணியை பொறுப்பாக அழைத்துச் சென்ற நமது பாடசாலையின் உப அதிபர் திருமதி. ஜெயந்தினி சிவபாலன் அவர்களுக்கும், ஆசிரியை செல்வி.ர. சுவேதிகா அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் உதவி செய்த நல் உள்ளங்களுக்கும், அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக
நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இது போன்ற சாதனைகள் தொடர இந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கான அடிப்படை வசதிகளை நாமாக முன்வந்து உரிய நேரத்தில் நிவர்த்தி செய்து உதவுவதே அவர்களுக்கான உண்மையான பாராட்டாக அமையுமென்பதை நாமனைவரும் உணர்ந்து இனிவருங்காலங்கள் அனலை சதாசிவ மகா வித்தியாலய விளையாட்டுத்துறையின் சாதனைக்காலங்களாகவும் அமைய ஒன்றிணைந்து உழைப்போம்!
நன்றிகள்:
அனலை சதாசிவ மகா வித்தியாலயம்
அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா.
படங்கள், பதிவு நன்றி:
- அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா


No comments:

Post a Comment