Thursday 26 April 2012

திண்ணையில் ஒரு விண்வெளி.




     அறநெறிப்பாடசாலையின் வருடத்திற்குட்பட்ட கால முன்னேற்றப் பாதையில் இன்று மாணவர்களுக்குத் தேவையான இன்றியமையாத அரிய வாய்ப்பினை  அறநெறிப்பாடசாலை   மகிழ்வோடும் பெருமிதத்தோடும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது  என்பதையிட்டு நமதூரைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனுடனும் எமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம்.
     நமது மாணவர்களின் அத்தியாவசிய தேவைகளிலொன்றான Internet இணைப்பு இன்று  அறநெறிப்பாடசாலை   மாணவர்களுக்கு      ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
                நமது மாணவர்களின் கல்விப் பாதையில் இன்றைய நாள் மகிழ்வான நம்பிக்கையூட்டுகின்ற நாளாகும். 
பலமாதங்களாகப் பிரயத்தனப்பட்டு இவ்வசதியினை ஏற்படுத்த எல்லா வழிகளிலும் முன்னின்று உழைத்த
ஆசிரியர் திரு.இ.இராஜகோபால்அவர்களுக்கு நமது ஊரவர்கள் சார்பிலும் அறநெறிப்பாடசாலை சார்பிலும் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அறநெறிப்பாடசாலைசார்பாக
திருமதி.சிறிவேணி தயாளன்.
April ,26.2012


          Thanks to the efforts of all that donated, the Araneri school has managed to gain access to the internet, creating a valuable source of information and education for the students. Special appreciation goes to Mr. R Rajagopal, who spent the previous months helping set up the internet for the school. Without his help, this would not have been possible.
On behalf of the Araneri school,
 Mrs. Sriveny Thayalan
April ,26.2012




Sunday 22 April 2012

7G


     அனலைதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த
 திருமதி.கோகிலாம்பாள் பாலசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர்    முப்பத்தையாயிரம்(Rs 35 000) ரூபா பெறுமதியான கணணி ஒன்றினை அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்காக அன்பளிப்புச் செய்துள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளும்  நாம் எமது இதயபூர்வமான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அறநெறிப்பாடசாலை சார்பாக
திரு.இ.அருட்சோதி.
April 22.2012.
 
This computer was donated to the Araneri school by the family Mrs. Gokilampal Balasingam in her memory. The family, who used to live in Analaitivu Ward No.1, donated Rs35000 to help pay for the computer.
On behalf of the Araneri school,
Mr.R.Arudsothy
April 22 2012.

Friday 20 April 2012

நேசிப்புக்குரியவர்களே!



நேசிப்புக்குரியவர்களே!   வணக்கம்!        
                                நீண்ட கால யுத்தம் சப்பித்துப்பிய பிரதேசங்கள் எல்லாவற்றைப் போலவும் நமது கிராத்தின் கல்வியும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன,மத,மொழி அடிப்படையிலான வாதப்பிரதிவாதங்களுக்கப்பால் கல்விவளர்ச்சியின் முக்கியத்துவத்தையும், அதன்பாலுள்ள சமூக அடிப்படை முன்னேற்றத்திற்கான திண்மையையும் புரிந்து கொள்வது ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு வழியமைக்கும்.      இன்றைய   எமது முக்கியமான குறிக்கோளாக நாம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முயற்சிப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றகரமான மாற்றத்தை அவர்களுக்குத் தேவையான இன்றைய தருணத்தில் ஏற்படுத்துவதாகும்
                                      வழமையான நிர்வாக முறைமையிலிருந்து மாறுபட்டு அறநெறிப்பாடசாலை நிர்வாகத்தில்   இணையும் அனைவரும் சமமான பொறுப்புகளும், அக்கறையும் உள்ளவர்களாகவே கருதப்படுவதும், செயலாற்றுவதும் அதிகமான பயன்பாட்டை சமூகத்திற்குத்தருமென நாம் திடமாக நம்புகிறோம். சமூக அக்கறையுள்ள கல்விஆர்வலர்கள் அனைவரும் ஆத்மார்த்தமாக எமது பணியில் இணைவதன்மூலம் நமது மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதோடு நமது நேசத்திற்குரிய பிறந்த மண்ணையும்  கெளரவப்படுத்துவோம்.
பலஆண்டுகள் கல்வியில் பின்தங்கியுள்ள நமது கிராமத்து மாணவர்களின் கல்விவளர்ச்சியில் நம்மாலான பங்களிப்பைச் செய்வதற்கானமுன்முயற்சியாக 2011ம்ஆண்டு June மாதத்திலிருந்து மாலைநேர பிரித்தியேக வகுப்புகளும் 2011ம்ஆண்டு November மாதத்திலிருந்து கணணி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.      

            ஆசிரியர்களின் பிரயாண அசெளகரியங்களினால் ஏற்படுகின்ற நேர இழப்புகளை நிவர்த்திப்பதற்கான இச்சிறியமுயற்சியினை இப்போது ஆரம்பித்தமைக்கு அசாதாரண சூழலற்ற கனிவான காலத்தின்பிரசன்னம் முக்கிய காரணமாகும்.  
            எல்லாச் சமூகத்திற்கும் பொதுவேயான நிதி கையாழுகையில் ஏற்படுகின்ற நிர்வாகச் சீர்கேடுகளே நல்ல முயற்சிகளுக்கான மக்களின் பங்களிப்பை அந்நியப்படுத்துகின்றன அல்லது  நிராகரிக்கின்றன என்ற கருத்தின் சரியான புரிதலினூடாக எமது நிதி நிர்வாகத்தைப்  பலமான  வடிவில்  அமைத்துக் கொண்டும்,தவறுகள் இடம்பெறாமல்  தவிர்த்துக்கொண்டும், நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொண்டும் முன்னேற முயற்சிக்கிறோம்
இதுவரையான எமது செயல்வடிவங்களை
www.mass7.lk.blogspot.com
Facebook: Analaitivu araneri  ஆகிய தளங்களில் பார்வையிடலாம்..
கேட்டுக் கொடுப்பது திருப்தி!
தேடிக் கொடுப்பது மட்டுமே தர்மம்!
அறநெறிப்பாடசாலை சார்பாக
திருமதி.ஜெயசக்தி சிவபதி.
திரு.த.நாராயணன்
April 20.2012

Tuesday 17 April 2012

Analai.




Sunday 15 April 2012

மரியாதை!


       நமதூரில் நீண்டகாலம் ஆசிரியையாகக் கடமையாற்றிய  மதிப்புக்குரிய ஆசிரியை செல்வி.சுப்பையா மனோன்மணி அவர்களின் நினைவு நிதியமாக அறநெறிப்பாடசாலையின் முதலாம் ஆண்டுக்கான ஆசிரியரின் மாதாந்தச் சம்பளத்தை ஆசிரியை  செல்வி. சுப்பையா மனோன்மணி அவர்களது குடும்பத்தார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர் என்ற மகிழ்வான செய்தியை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் நாம் எமது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 நமதூரின் கல்விவளர்ச்சியில் பங்காற்றி அமரர்களாகிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கான  உண்மையான, நிலையான நினைவுகூரலாக அமையக்கூடியது இவ்வாறான பங்களிப்புத்தான் என்ற கருத்தில் நாம் முழுமையாக ஒன்றுபடுவோ ம் .
அறநெறிப்பாடசாலை சார்பாக
திரு.பாலன் நடராசா.
April 15.2012
 
          Our deepest gratitude goes to the family of the late
Ms. Supaiah Manomany, who had taught for many years in Analaitivu. The family of Ms. Manomany has offered to pay the monthly salary of the grade one teacher, as a tribute to her memory. We feel this gesture truly illustrates the value of teachers and how important their contributions are.
On behalf of the Araneri school,
Mr.N.Balan
Apri 15.2012

மரியாதை!

Add caption     நன்றி: சதாசிவன்.




கல்வியும் விளையாட்டும்.




             அனலைதீவு அருணோதயா விளையாட்டுக்கழகம் நடாத்திய விளையாட்டுப்போட்டியின் நிதித்தேவையை முன்னிட்டு அவ்வமைப்பிற்கு அறநெறிப்பாடசாலையால் இருபதினாயிரம் ரூபா வழங்கப்பட்டது.இதுபோன்ற விளையாட்டுப்போட்டிகளில் ஊர்மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் அவர்களாக ஊருக்குள் திரட்டிய நிதியின் அதேயளவு ஒத்த தொகையை நாமும் பொறுப்பேற்றுக்கொண்டோம் என்பதைமகிழ்வோடு பகிர்ந்துகொள்கிறோம்.
அறநெறிப்பாடசாலை சார்பாக
திரு.குகதாசன் குமாரசாமி.
 April 15.2012.
 
The Arunothaya sports club in Analaitivu conducted a sports competition recently. The club reached out to the Aruneri school for a donation and we agreed to match whatever they collected from local donations. We are happy to share that the Arunothaya sports club received Rs20000 in donations which the Aruneri school matched.
On behalf of the Araneri school,
Mr.K.Kugathasan
April  15 2012.