Tuesday 26 September 2017

பனை.

 அனலைதீவு மக்களினால் புளியந்தீவு கடற்கரை பகுதியில் பனம் விதைகள் விதைக்கப்பட்ட போது.
மட்டற்ற மகிழ்ச்சி.
மக்களின் மனதில் மரங்களை நடவேண்டுமென்ற எண்ணத்தை தொடர்ச்சியாக விதைத்துவருவதன் பயன் இப்போது முழைக்கத்தொடங்கியிருக்கிறது. இந்த நற்பணியை முன்னின்று செயற்படுத்திய ஊர்மக்கனைவருக்கும் நமது சிரம்தாழ்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம் தொடர்ந்து பனம் விதைகளை எல்லா இடங்களிலும் நடுங்கள் இளைஞர்களே.
படங்கள்: திரு.த.கோகுலராஜ்.









Sunday 24 September 2017

தென்னை.

 அனலைதீவு புளியந்தீவில் 1975ம் ஆண்டளவில் மதிப்பிற்குரிய திரு.சண்முகம் முத்துக்குமாரு அவர்களால் புளியந்தீவு நாகதம்பிரான் ஆலய நிர்வாகத்தினரின் உறுதுணையோடு நமக்காகவும் நமக்கு அடுத்துவரும் சந்ததிகளுக்காகவும்
நட்டு வளர்க்கப்பட்ட தென்னைமரங்கள் அழகாக வளர்ந்து நிற்கின்றன. மதிப்பிற்குரிய திரு.சண்முகம் முத்துக்குமாரு
அவர்களின் முன்மாதிரியை நினைவில் கொண்டு  மரியாதை கலந்த நன்றியோடு பாராட்டி நினைவுகூருவோம்.
அண்மைக்கால கோவில் நிர்வாகத்தினரும் தொடர்ந்து தென்னை மரங்கள் நட்டு வளர்ப்பதையும் பாராட்டுவோம்.
அனலைதீவில் இன்று  அதிகமான தென்னங்கன்றுகளை நட்டும், நடவைத்தும் இயற்கைக்கு மிகப்பெரும் தொண்டாற்றும் திரு.நா.பரஞ்சோதி அவர்களையும் இத்தருணத்தில் மனதாரப் பாராட்டி அவரது சேவை தொடர வாழ்த்துவோம்.
படங்கள்:திரு.த.கோகுலராஜ்.









Monday 11 September 2017

கூழா மரம்.

 அனலைதீவு ஐயனார் கோவில் தெற்கு வீதியோரமாய் 2012ம் ஆண்டு திரு.த.திருநீலகண்டன் அவர்களால் நடப்பட்ட  கூழா மரம்.




Saturday 9 September 2017

மழை நாள்.








 அனலைதீவில் ஒரு மழை நாள்.


 படங்கள்: திரு.த.கோகுலராஜ்.



Thursday 7 September 2017

புளியந்தீவு.

 Sept .07.2017ம் திகதி அனலைதீவு புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருக்கோவில்
திருவிழா.
படங்கள்: திரு.த.கோகுலராஜ்.