Friday 21 February 2020

அனலைதீவு ஐயனார் கோவில்!




அனலைதீவு ஐயனார் கோவில்!
புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகத்தினர் கடந்த நிர்வாகத்தினரிடமிருந்து எல்லாவிதமான பொறுப்புக்களையும்
முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்னர்.

புதிய நிர்வாப் பொறுப்பேற்பினூடாக எதிர்கால நம்பிக்கை  வெளிச்சப்பாடானதாக நம்பும் அனைவரும் இதுவரை கால
ஆலய பரிபாலனத்தை நடாத்திய கடந்த நிர்வாகத்தினருக்கு நன்றிகலந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்வோம்.
பல ஆண்டுகளாக முறையான நிர்வாக மாற்றத்திற்காக  உழைத்த பொதுமக்கள்,  கிராம அலுவலர்கள், மதிப்பிற்குரிய பிரதேச செயலர், காவல்துறையினர்  அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றி கூறிக்கொள்வோம்.
இனிவரும் காலம் ஆலயத்திற்கும் பொதுமக்களுக்குமான தொடர்பையும் பொறுப்பையும் வலுப்படுத்துவதாகவும்
பொதுப்பணிகளில்  பங்குகொள்வதாகவும் அமைய வாழ்த்துக்கள்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
-மகாகவி பாரதியார்.





Monday 17 February 2020

ஸ்ரீமகாவிஷ்ணு ஆலயம் அனலைதீவு!




பேரன்புக்கும் பக்திக்குமுரிய மெய்யடியார்களே!
ஸ்ரீமகாவிஷ்ணு ஆலயம் அனலைதீவு!
இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றான். அதனை இறையன்பு உடையவர்கள் உணர்ந்து கொள்கின்றார்கள். நாங்களும் மெய்யன்போடு இறைவனை நோக்கி ஓரடி வைக்கும்போது அவன் எம்மை நோக்கி நூறடிவைக்கின்றான் என்பது ஆன்றோர்களின் அனுபவங்களாகும். ஏங்கே எப்போது எது தேவையோ அங்கே நான் வந்து நிற்பேன் என்பது கலியுகப் பெருமாளாம் கண்ணனின் திருவாக்கு. கடந்த பல காலங்களாக எமது பேரன்புக்கும் மதிப்புக்குமுரிய குருக்கள் ஐயா இவ்வாலயத்திற்கு சென்று அங்கு நடைபெறும் அபிடேக ஆராதனைப் பூசைகளிலே கலந்து கொண்டு வருகின்றார். அத்தனை பக்தியும் இறைப்பற்றும் அவருக்குள் இருந்து அவரை இயக்குகின்றது என்றுதான் நாம் நம்புகின்றோம். எங்கேயோ ஒரு தீவின் மூலையில் அமைந்திருக்கும் மஹாவிஷ்ணுவின் திருவருளும் அழைப்பும் இவருடைய இறைப்பணியின்மேல் இருந்து ஆண்டருளுகின்ற அதே வேளை எமது ஆலயத்தின் புனருத்தாரண வேலைகளிலே அவரை ஈடுபடுத்தியும் உள்ளது.இந்த வேளையில் உலகம்வாழ் தமிழ் மக்களும் தங்கள் மனங்களில் ஏற்படும் சலனங்களைத் தீர்க்கும்படி மெய்யன்போடு உருகி ஓர் கல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியவர்களையும் அல்லது ஓரு சிறு திருப்பணிக்கு கரம் நீட்டும் தொண்டர்களை அல்லது ஒரு திருவிழாவுக்குத் தோள்கொடுக்கும் உபயகாரர்களுக்கும் ஓடிவந்து காலம் முழுவதும் நமது வாழ்வுக்குக் கருணை மழை பொழிவான் என்ற நம்பிக்கையோடு அனைவரையும் திருப்பணிகளில் ஒரு சிறுதுளியேனும் பங்காற்றி இறைத்திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் எம்பெருமான் திருவடிகளைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.
ஸ்ரீமத் ஆதிசங்கரபகவத் பாத சுவாமிகளின்மானஸசிஷ்யாள் காமாஷி அம்பாள் ஆலய ஆதின கர்த்தா ஸ்ரீ வித்யா உபாஷக. பிரதிஷ்டா கலாநிதி. ஆச்சாரிய குலத்திலகம். பக்குவத்திருமணி இரேவணசித்த
சிவஸ்ரீ. ஆறுமுகபாஸ்கரக்குருக்கள்(ஹம். ஜேர்மனி) அவர்கள் 15.02.2020ம் திகதி அனலைதீவு சீத்தாச்சல்லி ஸ்ரீ பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்திற்கு வருகை தந்து தரிசனம்கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆலய திருப்பணிகள் சிறப்புற நிறைவேற தன்னாலான உதவியை வழிப்டுத்துவதாக கூறிய அவர் அனலைதீவு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெகு விரைவில் ஆலய திருப்பணிகளை நிறைவுசெய்ய உதவுமாறு வேண்டிக்கொண்டார். குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் அனலைதீவு மக்கள் தாமாக முன்வந்து உதவினால் சிறப்பாகுமெனவும் குறிப்பிட்டார். நீண்டகாலமாக நிறைவுபெறாமலிருக்கும் திருப்பணி இனிதே நிறைவேற அனலைதீவு மக்கள் மனமுவந்து உதவுமாறு பணிவோடு வேண்டுகிறோம்.
தொடர்புகளுக்கான தொடர்பிலக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனி:04915171921591