Tuesday 30 January 2018

செயற்பாட்டுக் குழு.




அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா தலைவர் திரு..திருநீலகண்டன் அவர்கள் அண்மையில் அனலைதீவிற்கு சென்று அனலைதீவு மக்களின் தேவைகளையும், மக்களின்மனநிலையையும் கவனத்திற்கொண்டபின்னர் எதிர்காலத்திற்கான நடைமுறைச் சாத்தியமான தெரிவுகளின் அடிப்படையில் செயற்பாட்டுக் குழு ஒன்றை அமைக்கும் பொறுப்பான முயற்சியினால்
 அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா  தனது செயற்பாட்டுக் குழு ஒன்றை
 Jan 21.2018ம் திகதிஅனலைதீவு மக்களின் ஆதரவோடு வயதிற்கும், அனுபவத்திற்கும் மதிப்பளித்து, இளைய தலைமுறையினருக்கும் வாய்ப்பளித்து ஆற்றலும், உறுதியும் மிக்க உறுப்பினர்களின் அங்கத்துவத்தோடு தெரிவுசெய்துள்ளது.
ஒன்றியச் செயற்பாட்டுக்குழு தெரிவு நிகழ்வின்போது அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா செயலாளர் திரு.குமரகுரு இராமசாமி உபதலைவர் திரு.கேசவன் சிவஞானம் ஆகியோரும் கலந்துகொண்டு பொறுப்புமிக்க குழுவொன்றைத் தெரிவு செய்வதில் பங்கேற்றுக்கொண்டனர்.
தெரிவுசெய்யப்பட்ட அனலைதீவு கலாசார ஒன்றிய செயற்பாட்டுக் குழு நிர்வாகிகள்  மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம். இனிவரும் எதிர்காலம்  இனியதாக அமைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

விபரங்கள் கீழ்வருமாறு:

தலைவர் :திரு.பழனி நடராசா
உபதலைவர்: திருமதி.தவநாயகி கிருஸ்ணராசா
செயலாளர்: தில்லையம்பலம் நடனசிகாமணி
உப செயலாளர்: செல்வி.மதுமதி பரத்துவாசன்
பொருளாளர்: திரு.குமாரதேவன் குமரேசன்
உப பொருளாளர்: திருமதி.தர்மிளா செந்தூரன்

போஷகர்கள்:
திரு.நாராயணக் குருக்கள் வெங்கடேஸ்வர குருக்கள்
திரு.   இன்பசுந்தரம் பொன்னுத்துரை

நிர்வாக உறுப்பினர்கள்:
திருமதி.அரியமலர் கமலநாதன்.
திருமதி. சிவமலர் இராஜலிங்கம் .
திருமதி.சிவகலா ஜெயபாலன்.
 திருமதி.சண்முகரூபி சாந்தகுமார்.
 திரு.சிவபாலன் சந்திரசேகரம்.
திரு.லோகேஸ்வரன் கனகு.
திரு.பிரதீபன் கணேஸ்வரன்.
திரு.குணேசன் நடனசிகாமணி
திரு.வின்சன் வேதநாயகம்.
 திரு.கோகுலராஜ் தங்கேஸ்வரன்.
 திரு. ஸ்ரீகாந்தரூபன் வைரவன்.
திரு.வசந்தன் நாகேஸ்வரன்.
 திரு.நிரோஜன் சற்குணம்.
  திரு. சயந்தன் மகாலிங்கம்.
 திரு.சிவகரன் சிவபாலன்.
திரு.அரிசுதன் கிருஸ்ணராசா

படங்கள்.திரு.த.கோகுலராஜ்.

-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
Jan 30.2018.
 


நயினாகுளம்.



Jan 29.2018 அன்று  அனலைதீவு நயினாகுளம் புனரமைப்பு தொடர்பாக ஊர்மக்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது

கமநல தினைக்களகத்தின்  இந்த ஆண்டின் குளங்கள் புனரமைப்பு நிதி ஒதுக்கீட்டின் கீழ் அனலைதீவு நயினாகுளம் புனரமைப்பதற்கு உள்வாங்கப்பட்டுள்ளது..அந்தவகையில் ஆரம்பகட்டமாக ஊர் மக்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதில் கமநல தொழிநுட்ப உத்தியோகத்தர்,  கமநல உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனலைதீவு நயினாகுளம் கமநல திணைக்களத்தினால் குளங்கள் புனரமைப்புத் திட்டத்தின் புனரமைக்க உள்வாங்கப்படுவதற்கு முன்முயற்சிகளை மேற்கொண்ட ஊர் மக்கள் மற்றும் கமநல திணைக்கள அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் அனைவருக்கம் ஊர் மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.
படங்களுடன் தகவல்:திரு.த.கோகுலராஜ்.


-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.