Wednesday 30 March 2016










Tuesday 29 March 2016

துளி.





கடற்காற்றில்
தனது  முட்களால் துளையிட்டபடி
காலத்தைத் தைத்துக்கொண்டு
ஒரு சப்பாத்திக்கள்ளி
வெய்யிலைக் குடித்து
தரையில் நிழல் சிந்தியது.

கடலில் விழுந்து
கசங்கிய வெய்யில்
பொன்னிறச் சேலைக்குள்
செம்மீன் பிடித்த அழகை
கண்மீன்  விழுங்கியது.

செருப்பே அணிந்தறியாத
பூட்டனின் தடம் கிடந்து காயும்
இன்னும் வெய்யில் மேயும்
மேற்குக்கரை வீதிதான்
அந்திப்பொழுது தேரேறியோடும்
இராஜவீதி.


கடலுக்குள் விழுந்த
இருட்டும் வெளிச்சமும்
பிசைந்த
குண்டுமணிப் பொழுதுகள்
மனதுக்குள் இன்னும் உருளுகின்றன.


மனதில்
பாறைகள் அமர்ந்து கொல்லும்
வாழ்வின் ஒருநொடியையேனும்
மேற்குக்கரைப் பாறையில் மோதவிடு
உப்புக்கரிக்காத தண்ணீர் ஊறும்.
                                                                                 -சிவம்.

Sunday 27 March 2016


அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய மாணவர்களின் 2015ம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதரப் பத்திர(சாதாரண)பரீட்சைக்கான பெறுபேறுகள் நம்பிக்கையைத் தருகின்றன. இப்பெறுபேறுகளை அடைய முன்னின்று உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் ஊர்மக்களளைவரினதும் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.சித்தியடைந்த மாணவர்கள், சிறப்பான பெறுபேறுபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் ஊர்மக்களனைவரினதும் பாராட்டுக்கள். குறிப்பாக அதிபர் திரு.நா. இராதாகிருஸ்ணன் அவர்களின் கல்விசார்பான அக்கறையான செயற்பாடுகள் அனைவற்றிற்கும் ஊர்மக்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.

Sunday 20 March 2016


Rathee Event Management to ۩~ RATHEE AWARDS 2016 ~۩
1 hr ·
ரதி விருது 2016 நிகழ்வில் உங்களுக்கு பிடித்த படைப்பு எது? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.... இந்த பதில் உங்கள் அனைவராலும் வழங்கப்பட்ட வாக்குகள் மூலம் தீர்மானிக்கப்பட்டது ஆகும்.
இன்னும் நாம் தெரிவித்து நீங்கள் தெரிந்துகொள்ள தேவை இல்லை.... இதோ உங்கள் வெற்றியாளர்கள்
UNTITLE - Short Film
UYIRCHCHOORAI - Music Video
Nanaiyum Kadal - Audio
‪#‎OnlineVoting‬ ‪#‎RatheeAwards2016‬

Monday 7 March 2016







Saturday 5 March 2016

கீற்று.



ஒரு புல் நுனி  
ஏந்திக் காத்திருக்கும்
பனித்துளிக்குள்  
அடகு வைத்த
எத்தனை காலைப்பொழுதுகள்
இன்னமும் மீட்கப்படாமல்
காலம் லத்தில் விட்டாயிற்று.

பூவரசங்குழலில் மடித்துவைத்த
நமது பிஞ்சுக்குரல்கள்
அவிழ்ந்து விழுந்த காற்றுவெளி
நம் இறுதி மூச்சையாவது  ஏந்துமா?

கோவில் முகப்பில்
தோரணம் கட்டிய கயிற்றில் தொங்கப்போட்ட
நமது சின்னச்சின்னச்சேட்டைகள்
எந்த வயதானவர்
பொக்கைவாயில் மடிப்போடு சிக்குண்டிருக்கும்?


 
அரிச்சந்திர மயான காண்டம்,
சங்கிலியன்,
வெடியரசன்
நாடகஙகள் பார்த்த ஞாபகங்கள்
எத்தனைமுறை தேர் ஓடியபின்னும்
தெற்கு வீதிப் புழுதிக்குள்
அரிதாரம் கலையாமல்
கிடுகுவேலியின் நீச்சல்களுகூடாக
கூனல் விழுந்த பார்வையோடு.

வாகனசாலைக் குதிரைக்கு
கொம்பு முளைத்த
ஒரு இரவுபோல்
வாழ்க்கை.

தீவட்டிக் கரியெடுத்து
இழுத்துவைத்த
மீசையோடு பேசும்
வீரம்.

 
கோபுர நிழலில்
இளனிக்கோம்பை கிராந்தும் 
பசுமாட்டைக் கலைத்து  
சுற்றி மதில்கட்டும் ஜீவகாருண்யம்.

எல்லாம் கடந்து
பாலத்தடிவரை
என்னோடு நடந்துவந்த  மேகத்துள்ளிருந்து
ஒரு கீற்று
புத்தர் வருவாரென எண்ணி வெட்டிச்சாய்த்த
அரசமர விருட்சத்தில் வாழ்ந்த அணில் ஒன்றுக்கு
பாதை காட்டுகிறது.
 -சிவம்.