Sunday 30 March 2014

வெற்றி.

15 வயதிற்குட்பட்ட கபடி விளையாட்டுப் போட்டியில் யா/அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்று மாவட்ட மட்டத்திலான போட்டியில் பங்குபெறத் தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குச் சொந்தக்காரர்களான நமது மாணவச் செல்வங்களனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களை ஊரவர்களனைவரினதும் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வெற்றிக்குத் துணை நின்ற அதிபர் திரு.இராதாகிருஸ்ணன், ஆசிரியர் திரு.அனுராஜ் மற்றும் மாணர்களைப் பயிற்றுவித்தவர்களான பாடசாலையின் பளைய மாணவர்கள் திரு.வை.தனேஸ், திரு.த.கோகுலராஜ்  ஆகியோருக்கும் எமது மனம் கனிந்த பாராட்டுக்களை ஊரவர்களனைவரினதும் சார்பாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலை சமூகநல மன்றம்
March 30.2014.







Thursday 27 March 2014

ஞாபகங்களின் நாற்றுமேடை.


 ஞாபகங்களின் நாற்றுமேடை.

Wednesday 26 March 2014

துளிகள்.




வலிகளுக்குப்பின் தளிர்விடத்துடிக்கும் வன்னி மண்ணின் மீதான இந்தச் சின்ன மேகத்தின் இடமறிந்து பொழியும் துளிகள் பயனுள்ளவை.பாராட்டப்படவேண்டியவையுமாகும்.
அனலை சமூகநல மன்றம்.
Mar 26.2014.



Tuesday 18 March 2014

தமிழில் பேசும் ஜேர்மனியப் பெண்.

தமிழ் பேசுவதற்கு வெட்கப்படத் தேவையில்லை என அழகிய தமிழில் பேசும் ஜேர்மனியப் பெண்.

http://salasalappu.com/?p=78317#more-78317

Wednesday 12 March 2014

கும்பிடத்தான் ஆளில்லை.

கோயிலைக் கட்டுங்கோ கும்பிடத்தான் ஆளில்லை.
 - வடபுலத்தான்
ஊர்கள் தோறும் கோவில்கள் பிரமாண்டமாக கட்டப்படுகின்றன. கோவில்கHindutemple-1ளைக் கட்டுவதற்காக புலம்பெயர்ந்து, வெளிநாடுகளில் இருப்போர் தாராளமாக அள்ளியள்ளிக் கொடுக்கிறார்கள். போதாக்குறைக்கு உள்ளூரிலும் கோடி கோடியாகச் சேருது.

இப்பிடிக் காசு சேர்ந்தால் என்ன நடக்கும்?

ஏட்டிக்கு போட்டியாக ஒவ்வொரு கோவில்களும் வானுயர எழுகின்றன.

ஊரில் பலருடைய வீடுகள் இன்னும் கொட்டிலாகவம் குடிசையாகவும் இருக்கும்போது, பலருக்கு குடியிருப்பதற்கே காணி இல்லாதபோது, பல பள்ளிக்கூடங்களில்வகுப்பறைகளே சீரில்லாமல் இருக்கும்போது, ஆஸ்பத்திரிகளில் கட்டில் இல்லாமல் விறாந்தைகளில் நோயாளிகள் படுத்திருக்கும்போது  இப்படி கோவில்களுக்காக தமிழ்ப்பெருங்குடி மக்கள்  தாராளமாகச் செலவழிக்கிறார்கள்.

தமிழ்ப்பெருங்குடி தன்னுடைய உழைப்பில் அதிகமாகச் செலவழிப்பது கோயில்களுக்காகத்தான். இதில் அவர்களுடைய வரலாற்றுப் பெருமையை எந்த விண்ணனும் மிஞ்ச முடியாது.

இதைவிடப் போரினால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உதவிகள் இல்லாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றன.

இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்கள் உடல் உறுப்புகளை இழந்து அந்தரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பல ஆயிரக்கணக்கான சிறார்கள் பெற்றோரை இழந்த நிலையில் உதவிக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து படிக்க வசதியில்லாமல் இடை விலகிக்கொண்டிருக்கின்றார்கள் பல மாணவர்கள். லட்சக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் தெருவில் நிற்கிறார்கள்.

இதைப்பற்றி மானமுள்ள தமிழர்கள் எழுதிக் கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறார்கள். மனச்சாட்சியும் மனமும் இல்லாத தமிழர்கள் இதையெல்லாம் படித்துக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரி தமிழ்சமூகம் துன்பத்தில் உழன்றுகொண்டு இருக்கும்போது இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கோவில்களுக்கு கொட்டிக்கொண்டே இருக்கின்றார்கள் நம் வரலாற்றுப் பெருமைமிகு தமிழர்கள்.

யுத்தத்திற்குப் பிறகு உருவாகியுள்ள புதிய சூழலிலும் தமிழர் அதிமாகச் செலவழித்திருப்பது கோவில்களுக்குத்தான்.

கோபுரங்களுக்காகவும், திருமண மண்டபங்களுக்காகவும், வர்ணப்பூச்சுகளுக்காகவும், தேர், தீர்த்தக்கேணி. வாகனம் என்றெல்லாம் இந்தச் செலவு நீண்டுகொண்டு போகிறது.

சமூகம் செழிப்பாக இருந்தால் இப்படி மேலதிகமாக செலவழிப்பதில் பிரச்சினை இல்லை.

ஆனால், இங்கோ மக்கள் பிச்சை எடுக்கிறார்கள். கோபுரங்களோ உயர்கின்றன.

இதற்காகத்தான் சொல்வார்கள், 'தாய் பிச்சை எடுக்கும்போது மகன் அன்னதானம் கொடுக்கிறார்' என்று.

சொந்தச் சோதரரை துன்பத்தில் உழல விட்டு விட்டு தெய்வத்தொண்டு செய்வதில் எந்தப் புண்ணியமும் இல்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.

உண்மையாக ஆன்மீக நாட்டம் யாருக்காவது இருந்தால் அவர்கள் துன்பத்திலும், துயரத்திலும் வாடும் சக மனிதரைக் கண்டு அவர்களுக்கு உதவ முன்வருவர். அது மனிதநேய உணர்வு மட்டுமல்ல தெய்வ பக்திக்கு நிகரானதுமாகும். அதுதான் மெய்யான ஆன்மீகமுமாகும்.

பசித்தவனுக்கு ஒருவேளை உணவு கொடுப்பதென்பது தெய்வத்துக்குச் செய்யும் தொண்டுக்குச் சமம் என்பது பெரியோர் வாக்கு.

கோவிலுக்கும், கோபுரங்களுக்குமாக செலவழிக்கும் இந்த கோடிக்கணக்கான காசை ஒவ்வொரு ஊர்களிலும் ஏதாவது தொழிற்துறைகளை உருவாக்குவதற்குச் செலவழிக்கலாம்.

அப்படி தொழில்த்துறைகளுக்குச் செலவழிக்கும் போது அதனால் பலருக்கும் தொழில்வாய்ப்புகள் கிட்டும். தொழிலும், உழைப்பும் பெருகும்போது ஊரும், உறவுகளும் செழிக்கும். ஊரும் உறவும் செழிக்கும்போது நாடும் வாழ்வும் வளம் பெறும்.

இப்படிப் சிந்திப்பது ஒன்றும் ஆன்மீகத்திற்கு எதிரானதோ பக்தி மார்க்கத்திற்கு மாறானதோ அல்ல. ஒரு நாத்திகவாதியின் கண்ணோட்டத்தில் இதைப்பார்க்கவும் இல்லை.

ஒரு மனிதநேயவாதியாக, மக்களோடு மக்களாக வாழ்பவராக, உண்மையான ஆன்மீகவாதியாக சிந்திக்கும் போது இப்படித்தான் சொல்லத்தோன்றுது.

தொழில்த்துறைகளை விருத்தி செய்வதற்காக நாம் செலவு செய்யும்போது அல்லது முதலீடு செய்யும்போது நமது மக்கள் கையேந்தும் நிலையிலிருந்து விடுபடுவர். அது மட்டுமல்ல அடிமை வாழ்விலிருந்தும் மக்கள் மீள்வர்.

அரசாங்கம் கல்வி, மருத்துவம் போன்றவற்றை இலவசமாகச் செய்கிறது.

அதற்காக அது எல்லாவற்றையும் எல்லோருக்கும் தானம் போல வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாதே. ஆனால் எம்மில் பலர் அப்படித்தான் எண்ணுகிறார்கள். எனவேதான் எல்லாவற்றையும் அரசிடமே எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத போது அரசாங்கத்தைத் திட்டுகிறார்கள்.

இந்தப் பணம் படைத்தவர்கள், கோவில்களுக்கு செலவழிப்பதுபோல தங்கள் பிரதேசங்களில் தொழில் மையங்களுக்காகச் செலவழிக்கலாம். கலை வளர்ச்சி, சமூகப்பணி, அறிவு மையங்கள் போன்ற பிற துறைகளுக்கும், மக்கள் வாழ்வுக்கும் செலவழிக்க வேண்டும் என்றே சொல்கிறேன்.

சமூகத்தைப் பிச்சை எடுக்க விட்டுக்கொண்டு வானுயரும் கோபுரங்களை எழுப்புவதால் எந்தப் பயனும் கிட்டாது.

இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இப்படி கட்டப்படும் பென்னாம்பெரிய கோவில்களைக் கும்பிடுவதற்குக் கூட இப்போது பல ஊர்களில் ஆட்களே இல்லை. அது மட்டுமில்லை. உற்சவ காலங்களில் சுவாமி தூக்குவதற்குப் பெடியளும் இல்லை.  இதைப்பற்றி டி.பி.எஸ். ஜெயராஜ் தன்னுடைய இலங்கைப் பயணத்துக்கு (ஊருலாவுக்கு) ப் பிந்திய பேட்டியொன்றிலும் சொல்லியிருந்தார்.

“கோயிலைக் கட்டுங்கோ கும்பிடத்தான் ஆளில்லை“

இதையெல்லாம் சொல்லி இந்தச் சனங்களையும் சமூகத்தையும் வழிப்படுத்துவது யார்? 


நன்றி: தேனி.

Sunday 9 March 2014

பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்.

பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்
- ஞானசக்தி
women north srilankaயுத்தத்தினாலும் ,சுனாமியினாலும் ஆண்களை இழந்த பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் இன்று வரை பிரச்சனைகளாகவே இருக்கின்றன. மாகாண சபைகள் ,எத்தனையோ அரச சார்பற்ற நிறுவனங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இந்த ஆண்தலைவர்களை இழந்த குடும்பங்களின் இருப்பிடம் ,தொழில் ,பிள்ளைகளின் கல்வி பாதுகாப்பான வாழ்வு என்பவற்றுக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை.
இவ்வளவு நிறுவனங்கள் இருந்தும் வடக்கிலும் கிழக்கிலும் 85 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் அடுக்கப்படுகின்றன. இது கையாலாகாத்தனமாகும்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக பலத்த சந்தேகங்கள் கேள்விகள் எழுகின்றன. பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்திற்கென பல கோடிக்கணக்கான ரூபாக்கள் புரள்கின்றன. இவர்கள் என்ன செய்கிறார்கள்.
பெண்கள் விவகார அமைச்சிருக்கிறது. இந்த அமைச்சு என்ன செய்கிறது?
இதேபோல் மாகாண சபைக்கும் இருக்கிறது.
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாகும்
அடுத்து யுத்த படையணிகளில் இயக்கங்களில் இருந்த பெண்கள்.
இவர்கள் தாமும் மனிதர்களாக இந்த சமூகத்தில் வாழ்வதற்கான நிலைமைகைள் ஏற்படுத்தப்படவில்லை.
அவர்கள் தமக்கு ஏதும்  நேருமோ என்ற அச்சத்துடனேயே வாழ்கிறார்கள.; தமது கடந்த காலத்தை ஒளித்து வாழவேண்டிய நிலமை இருக்கிறது. சமூகத்தில் ஒரு தீண்டாமை பாராட்டப்படுகிறது.
அதிகார வர்க்கம்; அளவு கடந்த அதிகார செருக்குடன் செயற்படுவதற்கான நிலைமை நிலவுகிறது.
துஸ்பிரயோகம் ,பாலியல் பற்றிய அறிவின்மை ,கலாச்சாரம் என்பன பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களாக இருக்கின்றன.
சமூகப் பாதுகாப்பென்பது கிடையாது.
கூட அதிகார துஸ்பிரயோகங்கள் சமூகத்தில் நிலவும் வன்முறைகள் மோசமான பாதிப்புக்களை ஏற்படுததியுள்ளன.
இன்று பெண்கள்மீது வன்முறையைப் பிரயோகிக்கும் குழுக்கள் பல்கிப் பெருகியுள்ளது.
சுதந்திரமாக நடமாடுவதற்கான இடைவெளிகளைக் குறைக்கும் விதமாக காரியங்கள் நிகழ்கின்றன.
இந்தப் பெண்களுடைய பிரச்சனைகளை முறையிடுவதற்கு பொலிசில் போதிய அறிவுள்ள மொழி தெரிந்த தனிப்பிரவு தேவைப்படுகிறது.
இன்றும் வீட்டில் ஊதியமில்லாமல் உழைக்கும் பிரிவினராகவே பெண்கள் காணப்படுகிறார்கள்.
இநத் விடயத்தில் ஐரோப்பாவில் வட அமெரிக்காவில் நிலைமைகள் பெருமளவுக்கு மாறிவிட்டன.
வரட்சி இயற்கை அழிவு போன்றனவும் முதலில் பெண்கள் மீதே சுமையாகwomen srilanka இறங்குகின்றன.
இவற்றுடன் காப்பிரேட்டுக்களும் சேர்ந்து கிராமங்களை ஆக்கிரமித்திருப்பது பரவலான ஒன்று.
விலைவாசிகள் மூச்சை திணறடிப்பதாக அமைகின்றன. விரும்பியோ விரும்பாமலோ அடுப்படிகளைப்பார்க்க வேண்டிய நிலையில் பெண்கள் இருப்பதால் வறுமையின் கொடுமை பெண்களையே முதலில் தாக்குகிறது.
மத்திய கிழக்கிற்கு வீட்டு பணிப் பெண்களாகச் செல்பவர்களின் சுயமரியாதை கண்ணியம் காப்பாற்றப்படுவதில்லை. அவர்களுக்கு அந்த அடிப்படைவாத அரபு நாடுகளில் தொழிற்சங்க உரிமைகளோ பாதுகாப்போ கிடையாது.
அவர்கள் சித்திரவதைகளையும் நாளாந்த அவமானங்களையும் சந்திக்கிறார்கள்.
தமது குடுமபங்களின் ஜீவனோபாயத்திற்காக மிக அபாயகரமான வாழ்வொன்றை நடத்துகிறார்கள். அது இந்த நாட்டிற்கு அவமானகரமானது.
இந்த நிலைமைகளில் மாற்றம் வேண்டும் .
இவர்களும் சரி இங்கு ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில்புரிபவர்களும் சரி அடிமட்ட ஊதியத்தைப் பெறுபவர்களாகவே இருக்கிறார்கள்.
எமது கிராமங்களில் தீண்டாமையின் கொடுமைகளை அனுபவித்த படி தான் பெண்கள் வேலை செய்கிறார்கள்.
தொலைக்காட்சித் தொடர்கள் சினிமாக்கள் பெண்கள் மீதான வன்முறைகளை அதிகரிப்பதாக அமைகின்றன.
ஜனநாயக சீர் திருத்தங்கள் மனித உரிமை தொடர்பான விடயங்களில் பெண்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் .
தேசிய இன- தொழிலாளர் பிரச்சனைகள் போல் இதுவும் தனித்துவமானதும் முக்கியமானதும் ஆகும்.
காணாமல் போனவர்கள் பிரச்சனைகள் உள்நாட்டிலேயே பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும்.
சாட்சிகள் ,வழக்குத் தாக்கல் செய்வோரின்  பாதுகாப்பு உறுதிப்படுத்தபடவேண்டும் .
பல குடும்பங்களில் ஆண்கள் பெருமளவுக்கு காணாமல் போயிருக்கிறார்கள்.
உயர் பாதுகாப்பு வலய நிலங்கள் பரவலாக கையளிக்கப்பட்டடிருந்தாலும் இன்னும் பலர் தமது சொந்த வாழ்விடங்களை கனவாக கருதி வாழ்கிறார்கள.; இவை கையளிக்கப்பட வேண்டும்.
பெண்களின் அரசியல் அதிகாரம் மற்றும் வௌ;வேறு நிர்வாக கட்டுமானத் துறைகளில் இருந்தாலும் பெண்கள் பற்றிய சமூக மனோபாவத்தில் மாற்றம் எதுவும் நடந்து விடவில்லை.

இரண்டாம் பட்சமான பார்வையை நாளந்த வாழ்வின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் அவதானிக்க முடியும்.
தீண்டாமையும் ,பெண்களின் மீதான அநீதியும், பிரதேச வேறுபாடுகளும் இந்த சமுதாயத்தில ஆதிக்கம வகிக்கும் பிரதான குணாம்சங்களாக இருக்கின்றன.women demo
பிற்போக்கான சடங்காசாரங்கள் இன்றளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
இந்த வெட்கக் கேட்டை வைத்துக் கொண்டுதான் தமிழர்களின் மானம்- கலாச்சாரம் பற்றி பேசப்படுகிறது.
இங்கு பெண்கள் வெளியில்சென்று சுதந்திரமாகச் சீவிப்பதற்கான நிலைமைகள் உருவாவதை கலாச்சாரச் சீரழிவென்கிறார்கள்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழும் சம்பவங்களை முழுச் சமூகத்திலும் விபச்சாரம் நிகழ்வதாக தமிழ்மக்களின் தலைவர்கள் எனப்படுவோர் ஆரவாரிக்கிறார்கள்.
இவர்கள் மொத்தமாகவே எமது சமுதாயத்தில் பெண்களை இழிவு படுத்துகிறார்கள்.
ஆனால் போதைவஸ்து, மிதமிஞ்சிய மதுபாவனை ,நுகர்வு கலாச்சாரத்தின் சீரழிவுகள் இருக்கின்றன.
ஆனால் மரபு ரீதியாக பெண்களுக்கிடப்பட்ட விலங்குகளையும் தளைகளையும் கலாச்சாரம்  எனப் போற்றிப் புகழ்வது சகிக்கும் படியாக இல்லை.
மத -இன- சாதி பேதங்கள் அப்படியே இருக்கின்றன. இலங்கையில் அவற்றின் அதிதீவிர வடிவங்கள் உருவாகியிருக்கின்றன.
பகட்டான கோயில்கள், சடங்குகளாக மூட நம்பிக்கைகள் உதாரித்தனங்கள் பெருகியுள்ளன. எளிமையான பகட்டில்லாத சமத்துவமான வாழ்வொன்று கட்டியமைக்கப்பட வேண்டியிருக்கிறது.
யுத்தங்கள் வன்முறைகளில் பெண்களே பெருமளவிற்கு இலக்கு வைக்கப்படுகிறார்கள்.
இயற்கைப்பேரழிவுகளும் பெண்களையும் சிறுவர்களையுமே பெருமளவு பாதித்துள்ளன.
எனவே யுத்த எதிர்ப்பு ,இயற்கை பாதுகாப்பு, சமாதானம,; வறுமை ஒழிப்பு சமத்துவமான வாழ்வை உருவாக்குவதில் பெண்கள் பங்களிக்க வேண்டியிருக்கிறது.
மனித உரிமை ஜனநாயகம் சமூக பொருளாதார அபிவிருத்தி ஆகியதுறைகளில் பெண்கள் குறிப்பிடத்தகுந்த பங்ககை ஆற்றமுடியும்.
இயல்பாகவே பெண்கள் இல்லாத உலகை உருவாக்கும் போக்கு கருவிலேயே நிகழ்கிறது.
இதனால் ஆண்பெண்விகிதாசாரத்தில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இனமத அடிப்படைவாதக் கோஸ்டிகள் தமது முதல் தாக்குதலை பெண்கள் மீதே தொடுக்கிறார்கள்.
இலங்கையில் பர்தா அணியும் பெண்கள் மீது அடிப்படைவாதிகள் நிகழ்த்தும் தாக்குதல்கள் சிறந்த எடுத்துக் காட்டு.
வீட்டிலும் ,பகிரங்கமாகவும் வேலைத் தலங்களிலும் போக்குவரத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுத்தப்படவேண்டும்.
இரவு  -தனிமையாக வாழ்தல் இங்கு பெண்களுக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன.
 எமது நாடாளுமன்றம் மாகாண சபைகளில் ஒரு வீதத்திற்கு குறைவான வீதம் என்பது அவமானகரமானது.
காப்பிரேட்டுக்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட உலகிலும் பெண்கள் வியபாரப் பண்டங்களாக மலிவான கூலிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் மேலும் பெண்கள் அடிமைகளாகவும், கையாலாகாத பணியாளர்களாகவும் ,நுகர்வுப் பொருட்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். .
சுதந்திரமான பெண்கள் அமைப்புக்களின் தேவை அதிகப்பட்டிருக்கிறது.
ஞானசக்தி.
 நன்றி: தேனி.

Saturday 1 March 2014

நன்றி.



                அனலைதீவு வயல்களில் மீண்டும் நெல் விதைத்து விளையவைத்து அறுவடை செய்ய உதவியாக வயல்வெளிகளைச் சுற்றி வேலியடைத்து பாதுகாப்பாக கமம் செய்ய உதவிய ஊரின்  இனிய இதயத்திற்கு ஊர்மக்களனைவரினதும் சார்பாக நமதினிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
                எதிர்பாரப்புகளெதுவுமின்றி தேவையான பயனுள்ள உதவிகளை நேர்தியாக  பயனாளிக்கான உச்சபட்ச பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து  பன்முக நோக்கோடு உதவி செய்துவரும் இனியவர்களிடம் உரிமையோடு ஒரு வேண்டுகோளை  ஊரவர்களனைவரினதும் சார்பாக முன்வைக்கின்றோம்.
                அடுத்தவருட விதைப்பிற்கு முன்னதாக ஊரில் வயல்வெளிகளில் முழுமையான நெல் விதைப்பிற்கு ஏற்றவாறு மிகுதியுள்ள வயல்வெளிகளையும் வேலியடைத்து ஊர்மக்கள் கமம் செய்யக்கூடிய வகையில் உதவுமாறு பணிவோடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.
                விளைச்சலின் ஒரு பகுதியை ஊர்மக்கள் தாமாக முன்வந்து வன்னி நிலப்பரப்பில் கொடுஞ்சுமை தாங்கி வாழும் இல்லங்களின் சிறார்களுக்கு கொடுக்கவேண்டுமென்ற எமது தாழ்மையான எண்ணத்தையும் இங்கு பணிவோடு பதிவுசெய்கிறோம்.

அனலை சமூகநல மன்றம்.
Mar 01.2014.