Saturday 1 March 2014

நன்றி.



                அனலைதீவு வயல்களில் மீண்டும் நெல் விதைத்து விளையவைத்து அறுவடை செய்ய உதவியாக வயல்வெளிகளைச் சுற்றி வேலியடைத்து பாதுகாப்பாக கமம் செய்ய உதவிய ஊரின்  இனிய இதயத்திற்கு ஊர்மக்களனைவரினதும் சார்பாக நமதினிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
                எதிர்பாரப்புகளெதுவுமின்றி தேவையான பயனுள்ள உதவிகளை நேர்தியாக  பயனாளிக்கான உச்சபட்ச பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து  பன்முக நோக்கோடு உதவி செய்துவரும் இனியவர்களிடம் உரிமையோடு ஒரு வேண்டுகோளை  ஊரவர்களனைவரினதும் சார்பாக முன்வைக்கின்றோம்.
                அடுத்தவருட விதைப்பிற்கு முன்னதாக ஊரில் வயல்வெளிகளில் முழுமையான நெல் விதைப்பிற்கு ஏற்றவாறு மிகுதியுள்ள வயல்வெளிகளையும் வேலியடைத்து ஊர்மக்கள் கமம் செய்யக்கூடிய வகையில் உதவுமாறு பணிவோடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.
                விளைச்சலின் ஒரு பகுதியை ஊர்மக்கள் தாமாக முன்வந்து வன்னி நிலப்பரப்பில் கொடுஞ்சுமை தாங்கி வாழும் இல்லங்களின் சிறார்களுக்கு கொடுக்கவேண்டுமென்ற எமது தாழ்மையான எண்ணத்தையும் இங்கு பணிவோடு பதிவுசெய்கிறோம்.

அனலை சமூகநல மன்றம்.
Mar 01.2014.
















No comments:

Post a Comment