Tuesday 26 June 2018

தொடரும் சாதனைகள்.

 தொடரும் சாதனைகள்.
June 26.2018ம் திகதி அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய  பெண்களுக்கான துடுப்பாட்ட அணி மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று விளையாட்டுத் துறையில் சாதனை படைத்துள்ளது.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான துடுப்பாட்ட போட்டியில் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தின் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆனி 25- 26 திகதிகளில் வடமகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான துடுப்பாட்ட போட்டியில் அரையிறுதியில் சுழிபுரம் விக்ரோறியா கல்லுரியினை வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிபோட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியினை எதிர்த்து ஆடி  இரண்டாம் இடத்தினை பெற்று கொண்டது.
பெருமைமிகும் இச்சாதனையை  ஆர்வத்தோடும், முயற்சியோடும், தன்னம்பிக்கையோடும்   சாத்தியப்படுத்திய மாணவச் செல்வங்கள் அனைவரையும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக பாராட்டி வாழ்த்தி இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து சாதனைபடைக்க ஊக்கமளித்து நம்மாலான அனைத்து உதவிகளையும் செய்வோம்.
மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு இப்பெரும் சாதைனைளை நிலைநாட்டிய பயிற்றுவிப்பாளர் மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.து.புஸ்பகாந்தன் அவர்களுக்கும், மகாவித்தியாலய அதிபர் மதிப்பிற்குரிய திரு.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் மற்றும் மாணவியரின் திறமைக்கு மதிப்பளித்து உத்வேகப்படுத்திய சக ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் அனைவருக்கும் நமது பாராட்டும் நன்றியும் உரித்தாகட்டும்.
அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய  பெண்களுக்கான துடுப்பாட்ட அணியின் தேவைகளில்  பங்குகொண்டு உதவியதில் அனலைதீவு கலாசார ஒன்றியம் ஊர்மக்களோடு இணைந்து பெருமைகொள்கிறது.
-அனலைதீவு கலாசார ஒன்றியம்.




Monday 25 June 2018

வாழ்த்துக்கள்.

June 25.2018ம் திகதி  நடைபெற்ற மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான துடுப்பாட்டப்போட்டியில் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
வாழ்த்துக்கள்.
நாளையும்  நமதேயாகட்டும்.

Sunday 24 June 2018

மனோன்மணி அம்பாள்.

 June 24.2018ம் திகதி அனலைதீவு அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன
நிகழ்வுகளின் பதிவுகள். படங்கள்:திரு.த.கோகுலராஜ்.