Sunday 25 July 2021

நன்றி.

சிறப்பாக நடைபெற்ற அனலைதீவு ஐயனார் ஆலய திருவிழாவை சகல வழிகளிலும் முழுமைப்படுத்த உதவிய, ஒத்துழைப்பு வழங்கிய அரச அதிகாரிகள், சுகாதார உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், ஊர்மக்கள், குறிப்பாக ஊர் இளைஞர்கள், குருமார்கள், கலைஞர்கள் அனைவருக்கும் அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எல்லாவகையிலும் முன்னின்று உழைத்த அனலைதீவு ஐயனார் ஆலய நிர்வாகத்தினருக்கு இதயபூர்வமான பாராட்டுக்கள்.

காணொளியிலும் புகைப்படங்களிலும் திருவிழாவை உலகெங்கும் எடுத்துச்சென்றுதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

அனலை இளைஞர்களின் அர்ப்பணிப்பான எல்லாப் பணிகளும் தொடர வாழ்த்துகள்.



 

Wednesday 14 July 2021

அடிக்கல் நாட்டு விழா.


அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய ஆசிரியர் விடுதி அமைப்பத்ற்கான அடிக்கல் நாட்டு விழா 13.07.2021 அன்று இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திரு.நா.இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.மு.சத்தியசீலன் , அயற்பாடசாலை அதிபர், பாடசாலை ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் என கலந்து சிறப்பித்தனர்.
இந்த விடுதி அமைப்பதற்கான காணியை அனலைதீவை சேர்ந்த கனடாவில் வசிக்கும் திரு.திருமதி. சிவசோதி அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது என்பதை நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.




















 

காணி.


ஆசிரியர் விடுதி கட்டுவதற்கான காணியை சரியான தருணத்தில் பெற்றுக்கொள்ள உதவிய அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த நன்றி.
திருமதி கல்யாணி சிவசோதி அவர்களின் தாய் வழி தந்தைவழிப் பேரர்களான திரு. ச.பொன்னம்பலம் அவர்கள்(முகாமையாளர்) திரு.ஐயம்பிள்ளை ஆறுமுகம் அவர்கள்( ஆதரவாளர்)ஆகியோர் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய ஆரம்பகால கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவுகொள்கிறோம்.
திருமதி கல்யாணி சிவசோதி அவர்களுக்கு சொந்தமான விடுதி கட்டுவதற்கான காணியின் சட்டரீதியாக பாடசாலையின் பெயருக்கு மாற்றப்பட்ட ஆவணங்களை அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் சார்பாக அனலைதீவு செயற்பாட்டுக் குழுவினர் திரு.ப.நடராசா மற்றும் திரு.கு.குமாரதேவன் ஆகியோர் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய அதிபரிடம் வழங்கினார்கள்.


 

Sunday 11 July 2021

திருவிழா.


 அனலைதீவு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் கோவில் திருவிழா  அனலைதீவு மக்களின் ஒற்றுமையான ஒத்துழைப்புடனும், ஆலய நிர்வாகத்தினரின் நல்முயற்சியாலும், சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு July. 14.2021ம் திகதி
ஆரம்பமாகிறது என்பதை உலகெங்கும் பரந்து வாழும் அனலை மக்களனைவருடனும் இறைமனதோடு பகிர்ந்துகொள்கிறோம்.
 

இடர்க்காலச் சூழலில் இந்த வருடத் திருவிழா நடைபெற உழைத்த இளைஞர்கள், பொதுமக்கள்,
ஆலய நிர்வாகத்தினர், அரச அதிகாரிகள் அனைவருக்கும் அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக பணிவான நன்றி.