Sunday 30 September 2012

ஆக்கங்கள்.


அனலைதீவு அறநெறிப் பாடசாலையின் புதிய நிர்வாகத் தெரிவுக்கான பொதுமக்கள் கூட்டத்தில் 26.09.2012 அன்று வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில் இடம்பெற்ற நமது மாணவச் செல்வங்களின் ஆக்கங்கள்.

Saturday 29 September 2012

பதிவு.


அறநெறிப் பாடசாலையின் புதிய நிர்வாகத் தெரிவின்போது வெளியிடப்பட்ட(2012) ஆண்டறிக்கையில் இடம்பெற்ற அனலைதீவு கிராமசேவகரின் பதிவு.

Friday 28 September 2012

நம்பிக்கை.


26.09.2012 ம் திகதி அனலைதீவு அறநெறிப் பாடசாலையின் புதிய நிர்வாகத் தெரிவுக்கான பொதுமக்கள் கூட்டத்தில் மாணவர்களின் கல்வி பற்றிய அக்கறையோடும், அறநெறிப் பாடசாலையின் செயற்பாடுகளின்மீதான நம்பிக்கையோடும் பங்குகொண்ட பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ,மாணவர்.
அறநெறிப் பாடசாலை.
திரு.த.நாராயணன்.
September 28.2012.

Thursday 27 September 2012

ஆக்கங்கள்.

ஆக்கம்.

அனலைதீவு அறநெறிப் பாடசாலையின் வருடாந்த ஆண்டறிக்கையில் (2012)பிரசுரிக்கப்பட்ட செல்வன்.கனகேஸ்வரன் யபீசன் அவர்களின் ஆக்கம்.

Tuesday 25 September 2012

தடம்.

அனலைதீவில்,
இலங்கைக் கல்வித் திணைக்களத்தின்
தரம் ஐந்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று மாணவர்கள்     தேர்ச்சிபெற்றுள்ளனர்.

அனலைதீவு வடலூர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் :

செல்வன்.ஆதித்தமூர்த்தி நிரோசன் 169 /200 மதிப்பெண்களுடனும்
செல்வன்.கனகேஸ்வரன் யபீசன் 155 /200 மதிப்பெண்களுடனும்                    

அனலைதீவு தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி

செல்வி..பரம்சோதி பவித்திரா 154 /200 மதிப்பெண்களுடனும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இவர்களின் கல்விப் பாதையில் இன்னும் பல மெச்சுதலுக்குரிய சிறப்பான தடங்கள் பதிக்க பூகோளத்தின் பரப்பெல்லாம் பரந்து வாழும் அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
இம்மாணவர்களின் பெருமிதமான வளர்ச்சிக்குத் துணை நின்ற பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊரவர்கள் அனைவருக்கும் இதயம் நெகிழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.
அறநெறிப் பாடசாலை. திரு   .நாராயணன். September 25.2012



Monday 24 September 2012

மணல்வெளி.

வைரமுத்துவின் அரிச்சந்திரா நாடகத்தின் விடியலில்
 செல்லையரின் வேர்க்கடலை வாங்கப் பொறுக்கிய சில்லறைகள் ,
மீசை வைத்து மிஞ்சிய கரித்துண்டுகள்,
 இளனிக்கோம்பை தோண்டியபோது முறிந்த இளமையின் நகத்துண்டுகள்,
 எதிர்ப்பால் நோக்கிக்   கல்லெறிந்த காதல்களின்  அடையாளங்கள், சாதிவெறியின் மிச்சசொச்சச்  செருமல்கள்
எல்லாம்
சுமந்தபடி  இந்த மணல்வெளி.

பசுமையான புல்வெளியிருந்தும்
வெறும்
மணல்வெளி மேயும்
மாடுகளாய் நாம்.
. சிவம்.


கல்வி.


அறநெறிப்பாடசாலை, சமூகத்தின் மிக முக்கிய அடிப்படைத் தேவையான, முப்பது ஆணடுகளுக்கு மேலாகப் பாதிப்புக்குட்பட்ட, நமது வருங்காலச் செல்வங்களின் கல்வியின் மேம்பாட்டிற்கு உதவிபுரியும் நற்பணியின் தொடராக உயர்கல்வி பயிலும் செல்வி.கேமமாலினி சௌந்தரராசன் அவர்களின் கல்விக்கான மாதாந்த செலவின் சிறுதொகையான 3000.00 ரூபாவை திருமதி.சிறிவேணி தயாளன் அவர்களின் மாதாந்த உதவியினூடாக பெறுப்பேற்றுக்கொள்கிறது என்ற அகமகிழ்வான செய்தியை உங்களனைவருடனும் பகிர்வதில் மகிழ்கிது. 
அறநெறிப் பாடசாலை.
திரு..நாராயணன்.
September 24.2012.