Monday 24 September 2012

மணல்வெளி.

வைரமுத்துவின் அரிச்சந்திரா நாடகத்தின் விடியலில்
 செல்லையரின் வேர்க்கடலை வாங்கப் பொறுக்கிய சில்லறைகள் ,
மீசை வைத்து மிஞ்சிய கரித்துண்டுகள்,
 இளனிக்கோம்பை தோண்டியபோது முறிந்த இளமையின் நகத்துண்டுகள்,
 எதிர்ப்பால் நோக்கிக்   கல்லெறிந்த காதல்களின்  அடையாளங்கள், சாதிவெறியின் மிச்சசொச்சச்  செருமல்கள்
எல்லாம்
சுமந்தபடி  இந்த மணல்வெளி.

பசுமையான புல்வெளியிருந்தும்
வெறும்
மணல்வெளி மேயும்
மாடுகளாய் நாம்.
. சிவம்.


No comments:

Post a Comment