Tuesday 27 August 2019


Thursday 15 August 2019

நன்றி.




மாண்புமிகு சுகாதார அமைச்சர் திரு. இராஜித சேனரத்ன அவர்கள் அனலைதீவுக்கான (Ambulance Boat) அவசர சேவைகள் கடற்போக்குவரத்துக்கான செயற்திட்டத்திற்காக 7.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.சி.சிறிதரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தீவகங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் சுகாதார அமைச்சர் மாண்புமிகு திரு. இராஜித சேனரத்ன அவர்கள்.
Aug 15, 2019 ஆம் திகதி அனலைதீவு பிரதேச வைத்தியசாலையின் தேவைகளைக் கேட்டறிய வருகை மேற்கொண்டிருந்த அமைச்சருடன் வடமாகாணச் சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு. . கேதீஸ்வரன் அவர்கள், வட பிராந்திய பிரதிச் சுகாதாரப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி தேவநேசன் அவர்கள், யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி . சத்தியமூர்த்தி அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.சி. சிறிதரன் அவர்கள், வட பிராந்திய சுகாதாரத் திணைக்கள ஒழுங்கமைப்பாளர் மதிப்பிற்குரிய திருமதி.அகிலன் அவர்கள், வட பிராந்திய சுகாதாரத் திணைக்கள கணக்காளர் திரு. இரகுநாதன் அவர்கள், அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றிய மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி கி. குருபரன் அவர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.
நிரந்தரமான வைத்தியர் ஒருவருக்கான நியமனம், தேவையான மருந்துகள், அவசர சேவைகள் படகு மற்றும் தேவையான கட்டிடத் திருத்தவேலைகள் என்பன மக்களின் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன.
அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதந்த சுகாதார அமைச்சர் மாண்புமிகு திரு. இராஜித சேனரத்ன அவர்கள், வடமாகாணப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு.கேதீஸ்வரன் அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி .சத்தியமூர்த்தி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.சி.சிறிதரன் அவர்கள் வட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி .தேவநேசன் அவர்கள் வட பிராந்திய சுகாதாரத் திணைக்கள ஒழுங்கமைப்பாளர் மதிப்பிற்குரிய திருமதி.அகிலன் அவர்கள் வட பிராந்திய சுகாதாரத் திணைக்கள கணக்காளர் திரு.இரகுநாதன் அவர்கள்,
அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றிய மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி கி. குருபரன் அவர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக மனம் நெகிழ்வான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வடமாகாண வைத்திய கலாநிதிகள் குழுமப் (northern doctors forum) பிரதிநிதி மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி அச்சுதன் அவர்கள், மாண்புமிகு சுகாதார அமைச்சர் திரு. இராஜித சேனரத்ன அவர்களின் வருகையை ஏற்பாடு செய்திருந்தார்.
மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி அச்சுதன் அவர்களுக்கு ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக மனம் நெகிழ்வான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்
உபசரிப்பின்போது அரச விதிகளுக்கமைவாக செயற்கைப் பானங்கள் தவிர்க்கப்பட்டு இளநீர் வழங்கப்பட்டதும், நமது பாரம்பரியக் கூழ் பனை ஓலையிலான பிளாவில் வழங்கப்பட்டதும் முன்னுதாரணமான சிறப்பம்சங்களாகும்.
தீவக மக்களின் அடிப்படையான மருத்துவ சுகாதாரத் தேவைகளின் இடர்ப்பாடுகளை கண்டறிந்து தீர்த்துவைக்க அக்கறையோடு அயராது உழைக்கின்ற மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி .சத்தியமூர்த்தி அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள் வெற்றியடைய ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக வாழ்த்துகிறோம்.
அனைவரையும் வரவேற்று உபசரித்து ஒத்துழைப்பு வழங்குவதோடு அனலைதீவு மக்களின் தேவைகளுக்காக உழைக்கும் அனலைதீவு நோயாளர் நலன்புரிச்சங்கத்தினருக்கு ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல் உதவி நன்றி: Dr. கி. குருபரன்
படங்கள்: திரு. .கோகுலராஜ்
Dr. கி. குருபரன்
அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
analaiacoc@gmail.com
படங்களுடன் தகவல் நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.



























திருவிழா.

 Aug.15.2019 ஆம் திகதி நடைபெற்ற அனலைதீவு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் கோவில்   கொடியிறக்கத்  திருவிழா.
படங்கள்: திரு.த கோகுலராஜ்
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
படங்களுடன் தகவல் நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.