Saturday 29 November 2014

வெள்ளச் சிரிப்பு.











வேலங்குளத்து வடக்குக் கரையில
வெள்ளம் மேயுது வெள்ளக் கொக்கு.
காலங்கொடுத்த பச்சைப் புடவையை
கட்டிச் சிரிக்குது வயலும் வரப்பும்.

நீரால் நிரம்பிய குளங்கள்.
நெல்லால் நிரம்பிய வயல்கள்.
வெள்ளம் நிரப்பிய பள்ளம்.
மதவுகள் மேவிய வெள்ளம்.

இயற்கைக்கு
துளிகளுக்குள் வெள்ளத்தை மறைக்கும்
இரகசியம் தெரியும்.

மனிதன்
வரட்சிக்குள் இயற்கைகைப் புதைக்கிறான்.
பூமியை
அதிகமாக ஆழமாகக் கிழறுகிறான்.
இனியேனும்
இயற்கையை நேசிக்காமலும் மதிக்காமலும்
தொடர்ந்து கிழறினால்
அவன் கைகளில்
அடுத்த தலைமுறையின் எலும்புகளே அகப்படும்.
                                             -சிவம்.









படகு.

Saturday 22 November 2014

இவ்வுலக வாழ்வில் நாம்.



இவ்வுலக வாழ்வில் நாம்.

தாய்மையின் உருவிலே புவியை அடைந்தோம்.
நாம் மனிதநேயத்துடன் அன்பு கருணை என வாழ்ந்தோமா?
தாய் தந்தை இல்லறம் சமுதாயம் என மகிழ்வுடன் வாழ்ந்தோமா?
புவியில் வாழ்வினை வாழும்போது துயர் இன்றி வாழ்ந்தோமா?
பொன் மண் காமம் எனும் அபிலாசைகளை விட்டகன்றோமா?
ஆசையெனும் வட்டத்தில் வீழ்ந்ததை எண்ணி வருந்தினோமா?
வாழ்வு நிலையென எண்ணியதை நினைந்து துவண்டோமா?
ஏழ்மையின் வறுமை நிலைகண்டு அரவணைத்துச்சென்றோமா?
அறிவு அவசிமென உணர்ந்தபோது பகிர்ந்தளிக்க முயன்றோமா?
மனதுக்கு வேண்டியது பகுத்தறிவு. கற்றும் ஆய்ந்தும் பெற்றோமா?
சாதி மதமென தூண்டினோம். யாதும் ஒன்றென உணரவைத்தோமா?
கோவில் என்றதும் வாரிக்கொடுக்கும்போது பசித்தோரை நினைத்தோமா?
ஆடம்பரத்தை அணிகலனை இறை விரும்பாதபோது கடைப்பிடித்தோமா?
உயிருக்கு வேண்டியது தூய்மையான சுவாசம் என அறிந்து செயற்பட்டோமா?
உடலுக்கு அமைவான உயிர்ச்சத்து உணவு கண்டறிந்து உண்டோமா?
 வாதம் பித்தம் கபம் சூழ்ந்து கவ்வும்போது யாரை அழைப்போமோ?
கடவுள் நாமம் ஜெபிக்கும்போது ஆட்கொள்வதை உணர்ந்தோமா?
இவ்வுலகை விட்டகன்றபின்  நடப்பதைக் காணமுடியுமோ?
தாயவள் இவ்வுலகை நமதாக்கியபோது மகிழ்வுற்றோமே
மகிழ்வு நிலைத்ததா வாழ்வின் கடைக்கோடிவரையும்?
யாவும் பிரபஞ்சத்தின் பரிவின்படி என்பதை அறிவோமா?
கடைநிலையில் மனதில் நிறைவேறா ஆசைகளும், செய்யத்தவறிய கடமைகளும், அறவினைகளும் உயிர்ச்சாவு என்ற ஓய்வுக்காய் புறப்படும்போது மீண்டும் பிறக்கத்தூண்டும் சங்கற்பங்களாக உயிரில் பதிவாகும்.அந்தச் சங்கற்ப அலைகள் அடுத்த பிறப்பிற்குரிய உடற்கூற்றை நிர்ணயிக்கும்.

அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்னுங்கால் பொன்றாத் துணை.

நம் உயிர் உடற்கூட்டை விட்டு கிளம்பும்போது கடைசி நிமிடத்தில் நமது அமைதிக்கு துணைசெய்யும் நாம் செய்த நற்செயல்கள் நீங்காத துணையாகும் என்கிறார் பெருந்தகை.

                                                                                                                                               திரு.த.நாராயணன்.
                                                                                                                                                       November 22.2014.