Sunday 14 September 2014

குருவி.



அம்மணமான
வறுமையையும் குழந்தையையும்
பாசத்தால் போர்த்திய
தாயொருத்தியின் கைகளால்
தருமம் சாப்பிடுகிறது.

தட்டிப்பறிக்கும் மனிதர் மத்தியில்
காத்திருக்கத்தெரிந்த குருவியின் அல(ழ)கில்
மனிதமனம் புழுவானது.
                                                                                        --சிவம்.

Saturday 13 September 2014

கணணி.



அனலை சமூக நல மன்றத்தினால் நடாத்தப்படும் கணணி வகுப்புகளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடாத்துவதற்கான அறிவிப்பும் அறிவுரைக்குமான கூட்டம் Sept 13.2014ம் திகதி மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள், அனலை சமூகநல மன்ற நிர்வாகத்தினர் மற்றும் கணணி ஆசிரியர்கள் திரு.உதயப்பிரகாஸ் திரு.தனேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டினையும் அறிவிப்பையும் அமைத்துத்தந்துதவிய கிராமசேவை அலுவலர் திரு.தர்சன் அவர்களுக்கு எமது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்வோம்.
அனலை சமூக நல மன்றம்.
Sept13.2014.














Thursday 11 September 2014

நன்னீர்க்கிணறு.





Sept 11.2014ம் திகதியன்று  அனலைதீவு மத்திய வயற்பகுதியின்  வட எல்லையில் அனலைதீவு பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமான காணியை கோவில் நிர்வாகத்தினரின் நன்கொடையாகப்பெற்று  அக்காணியில் புதிதாக கிண்ப்பட்ட நன்னீர்க்கிணறு  மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி.எழிலரசி அன்ரன் யோகநாயகம், அனர்த்த முகாமைத்துவ உயர் அதிகாரிகள், அனலைதீவு கிராம அலுவலர்கள் திரு.வடிவழகையன், திரு.தர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன்னும் பல நன்னீர்கிணறுகள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். 
நிதியுதவி: அனர்த்த முகாமைத்துவ அமைச்சு.











Monday 8 September 2014

சப்பறத்திருவிழா.


அனலைதீவு (புளியந்தீவு) அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரன் கோவில் சப்பறத்திருவிழா.  (20 photos)