Saturday 11 June 2022


 

சமூகத்திற்கு நல்லது எனக்கருதி செய்யும் தவறுகளை பொதுவெளியில் பேசும் இடைவெளியை அனுமதிக்காத
நடைமுறை சமூகத்திற்கு விளைச்சல் தராது.
தமது இயற்கை வளங்கனிள் நலனுக்காக பேசாத சமூகம் இழக்கும் இயற்கையின் கட்டமைப்பை மீட்க பல சந்ததிகள் காத்திருக்க நேரிடும்.
நமது கடல் வளங்களை யாரோ சூறையாடுவதை கண்டுகொள்ளாமல் நமது கடலின் வளங்களைப் பாதுகாத்து உயிருடன் வாழவைத்துக்கொண்டிருக்கும் கடல் நிலங்களில் கடலட்டையை வளர்த்து கடலைப் பாலைவனமாக்கும்
திட்டங்களின் விழைவு அடுத்த சந்ததிக்கல்ல நமது இன்றைய வாழ்வாதாரத்திற்கே கேடானது.
கடலுக்குள் அட்டை விடும் அபிவிருத்தியாளர்கள் இதுவரை தரையில் நிகழ்த்திய அபிவிருத்திகளின் விளைவு என்ன?
இனியாவது தரையில் நிகழ்த்தவிருக்கும் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் என்ன?
பசிப்பவனுக்கு தினமும் மீனைக்கொடுப்பதைவிட மீனைப்பிடிக்கக் கறற்றுக்கொடுங்கள்.
தீவகங்களுக்குள் அட்டைவளர்ப்பு அழிவுச்செயல்.