Wednesday 20 November 2019

நயினாகுளம்.



 அனலைதீவு ஐயனார் கோவில் வரலாற்றுடன் தொடர்புடைய நயினாகுளம் அரச விவசாயத் திணைக்களத்தின் நிர்வாக நிதித்திட்டத்தின்கீழ் புனரமைத்து மறுசீரமைக்கும் பணி 2018ம் ஆண்டு நடைபெற்றது.

இத்திருப்பணியை பொறுப்பேற்று நடைமுறைப்படுத்திய அனலைதீவு விவசாய சம்மேளன நிர்வாகத்தினர் மற்றும் தலைவர் திரு.கு.குமாரதேவன், இத்தெய்வத் திருப்பணியை முன்னிலைப்படுத்திய 2017-2018 அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா நிர்வாகத்தினர் அனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக்காள்கிறோம்.

அனலைதீவு ஐயனார் கோவில் ஆலய நிர்வாகத்தினர் நயினாகுளம் புனரமைப்பு ஆரம்ப கட்ட வேலைகளுக்கான மீள் கடனாக அனலைதீவு விவசாய சம்மேளன நிர்வாகத்தினருக்கு ரூபா 5 இலட்சம் நிதியுதவியினை வழங்கியிருந்தனர். இந்த நிதியானது அனலைதீவு விவசாய சம்மேளன நிர்வாகத்தினரால் அனலைதீவு ஐயனார் கோவில் ஆலய நிர்வாகத்தினரிடம் மீளச் செலுத்தப்பட்டது.

எதிர்கால நிலத்தடி நீர்வளத்தின் பயன்பாடு கருதி அரச திட்டமிடலுக்கு அதிகமான அளவில், 290அடி நீளமும் 120 அடி அகலமும் கொண்ட குளமாக புனரமைத்த வகையில் ஏற்பட்ட அதிக செலவுத் தொகையான ஐந்து இலட்சத்து முப்பத்தி நான்காயிரம் ரூபாவை இந்த தெய்வத் திருப்பணியை நிறைவுசெய்த அனலைதீவு விவசாய சம்மேளன நிர்வாகத்தினருக்கு அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா நிர்வாகத்தினர் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கியதனூடாக அனலைதீவு ஐயனார் கோவிலுக்குச் சொந்தமான திருக்குளத்தின் புனருத்தாரண தெய்வத்திருப்பணியில் பங்குகொண்டு தமது வரலாற்றுக் கடமையை நிறைவுசெய்தனர்.

நயினாகுளம் சிறந்த முறையில் புனரமைக்க உதவிய அரச அதிகாரிகள், பொதுமக்கள், அனலைதீவு விவசாய சம்மேளன நிர்வாகத்தினர் அனைவருக்கும் ஊர் மக்கள் அனைவரினதும் சார்பாக இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐயனாரின் வரலாற்றுடன் தொடர்புடைய இத்திருக்குளத்தின் புனரமைப்பு பணியினால் எதிர்கால நிலத்தடி நீர்வளமும் குடிநீர்வளமும் கணிசமான அளவு ஊர்மக்களுக்கு பயன்பாடு உடையதாக அமையுமென்பதால் இத்திருப்பணியில் பங்குகொண்டு ஆதரவளிக்க விரும்பும் மனம் படைத்தவர்கள் அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா நிர்வாகத்தினருடன் தொடர்புகொண்டு உதவுமாறு பணிவன்போடு வேண்டுகிறோம்.

அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா

படங்கள் உதவி: திரு. கு. குமாரதேவன்
திரு. க. உதயப்பிரகாஷ்
Nov.20.2019
படங்கள், பதிவு நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.


















Sunday 17 November 2019

ஊரும் உழவும்.


 அனலைதீவு ஊரும் உழவும்.
நன்றி: அனலைதீவு விவசாயி சம்மேளனம்.
படங்கள்: திரு.க.உதயப்பிரகாஷ்
படங்கள் நன்றி: அளலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.