Friday 25 May 2018

"சதாசிவ வித்தியாசாலை"



"சதாசிவ வித்தியாசாலை"
தொடர்: 3



1934ம் ஆண்டு சைவவித்தியா விருத்திச் சங்கப் பொது முகாமைக்காரர்  
திரு. சு இராசரத்தினம் அவர்கள் முகாமைக்காரனாக நியமிக்கப்பட்டு 1937ம் ஆண்டுவரை கடமையாற்றினார். இவர் வித்தியாசங்கத்தின் ஆலோசனையுடன் வித்தியாசாலையைத்திறம்பட நடாத்தியதுடன் இற்றைவரையும் தமிழில் கல்விகற்பித்து வந்த இவ்வித்தியாசாலையை 1937ம் ஆண்டு துவிபாசா வித்தியாசாலையாக உயர்ச்சியடையச் செய்தார்.  அவ்வாண்டில் காலைநகர் திரு. வி. வன்னியசிங்கம் டீ. யு. அவர்கள் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார்.  இவர் ஆசிரியார்களின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் கல்வி ஒழுக்கம், சுத்தம் என்பவற்றில் சிறப்புற்று விளங்கச் சிறந்த பணியாற்றினார்.  நிர்வாகத்தில் கண்ணுங் கருத்துமாய்த் திறம்பட நடாத்தினார்.  வித்தியாசாலையின் முன்றிலில் நந்தவனம் என்னும் பெயருக்கேற்ப பூஞ் செடிகளையுண்டாக்கி மாணவர்களை வித்தியாசாலையில் நாட்டங் கொள்ளச் செய்து கல்வியின் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
1937ம் ஆண்டு துவிபாசா வித்தியாசாலை ஆகும்வரை திரு. சீ. சு. வேலுப்பிள்ளை ஆசிரியரின் பின் இவ்வித்தியாசாலையின் தலைமையாசிரியர்களாகப் பின் வருவோர் நியமிக்கப்பட்டுக் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கங்கொடுத்திருக்கின்றார்கள்.  இவர்களது கால வரையைறை சரியாகக் கிடைக்கவில்லை.
திருவாளர்கள் . சுப்பிரமணியம் யு. சுப்பிரமணியம் N. பொன்னையா  
யு. காசிப்பிள்ளை . இராமலிங்கம்
 . இளையதம்பி யு. வேலுப்பிள்ளை N. சேதுபதி  மு. சதாசிவம்பிள்ளை ஆகியவர்களே அத்தலைமையாசிரியர்களாவர்.
1937 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வித்தியாசங்கத்தின் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படலாயின.  வித்தியாசங்கத்தின் நிர்வாகஸ்தர்களிடையே பல அபிப்பிராய பேதங்கள் ஏற்படலாயின.  அவை காரணமாகப் பொது மக்களிடையேயும் பேதங்களும் விவாதங்களுந்தோன்றின.  இதனையறிந்த இதன் ஸ்தாபகரும் மலாயாவில் உத்தியோகம் வகித்து வந்தவருமான டக்டர். சோமசுந்தரம் அவர்கள் அங்கிருந்து வந்து நிலைமையை விசாரித்து பலரின் ஆலோசனைகளுடன் சங்கத்தின் முன்னைய கட்டுப்பாடுகளில் திருத்தங்களும் மாற்றங்களும் அமைத்து புதிய கட்டுப்பாடுகளடங்கிய சாதனம் ஒன்றைப் பிறப்பித்து அதன் மூலம் சங்கத்தை ஸ்திரப்படுத்தினார்.  அச்சங்கத்தின் புதிய விதிகளுக்கமைய இருபத்தேழு பேர் கொண்ட நிருவாகசபை ஒன்று நிறுவப்பட்டது  அவர்களுள் ஒன்பது பேர் கொண்ட உபசபைமூலம் வித்தியாசாலையின் வளர்ச்சி கவனிக்கப்பட்டு வந்தது.  தேவைப்படும்போது நிருவாகசபை கூட்டப்பட்டு விடயங்கள் பரிசீலனைசெய்யப்படும்.  மூன்று வருடங்களுக்கொருமுறை இந்திருவாகசபை மாற்றியமைக்கப்படும்.  இச்சந்தர்ப்பத்தில் முன்னர் திரு. . வைத்திலிங்கம் அவர்களால் வாய்ச் சொல் மூலங் கொடுக்கப்பட்ட கட்டிடத்திற்கான நிலம் உறுதி மூலந்தருமசாதனஞ் செய்யப்பெற்றது.
1937 ஆம் ஆண்டு தொடக்கம் 1939 ஆம் ஆண்டுவரை வித்தியாசங்கத்தின் கீழ் திரு. . வைத்திலிங்கம் உடையார் அவர்கள் முகாமைக்காரராகத் தெரிவு செய்யப்பட்டு வித்தியாசாலையைத் திறம்பட நடாத்தினார்.  இக்காலத்தில் தலைமையாசிரியர் பதவியை ஏற்று நடத்திய திரு. . வன்னியசிங்கம் அவர்கள் சில வசதியீனங்களினிமித்தம் விலக திரு. சு. கரிகர ஐயர் டீ. யு.  அவர்கள் சிறிது காலம் கடமையாற்றி நீங்க திரு N. வெங்கடேஸ்வர ஐயர் டீ. யு. அப்பதவியை ஏற்று நடத்தினார்கள். இவரது காலத்தில் மாணவரின் தொகை மேலும் அதிகரிக்கவே ஆசிரியர்களும் அதிகமாயினர்.  கல்விவளர்ச்சி முன்னையிலும் முன்னேற்ரமடைந்து வந்தது.
1937 ஆம் ஆண்டு முகாமைக்காரனாகத் திரும்பவும் திரு வே. செல்லப்பா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.  வித்தியாசாலையின் வளர்ச்சியின் பொருட்டுத் தம் நேரம் முழுவதையுஞ் செலவழித்து ஆகவேண்டிய ஆக்கவேலைகளையும் கல்வி வளர்ச்சிக்கான கருமங்களையும் ஆற்றினார்.  மாணவர்களுக்குப் போதிய இடவசதியில்லாதிரந்தமையால் அக்கால ஆசிரியர்கள் தங்கள் ஒருமாத வேதனத்தை நன்கொடையளித்து மேற்குப்பக்க விறாந்தையைக் கட்டிமுடித்தனர்.  1944 ஆம் ஆண்டு திரு N. வெங்கடேஸ்வர ஐயர் அவர்கள் தமது சொந்த நலன்குருதி தலைமையாசிரியர் பதவியின்றும் விலக அப்பதவியை திரு. சு. சிவபாதசுந்தரம் டீ. யு. அவர்கள் ஏற்று இன்றும் நடாத்தி வந்தார். இவ்வூர்வாசியானமையால் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோரின் இயல்புகளை நன்கறிந்தவர்.  ஆதலினால் இவ்வூர் மக்கள் வருங்காலத்தில் சிறந்த கல்விமான்களாக மிளிரவேண்டும் என்ற நோக்கத்துடன் வித்தியாசாலையின் நிருவாகத்தையும் கல்விவளர்ச்சியையும் மிக்கதிறம்படநடாத்தி வந்தார்.  வித்தியாசாலைக்குத் தேவையான உபகரணங்களுக்கு வித்தியாசங்கத்தினை எதிர்ப்பார்க்காது தாமேவாங்கியபின் பணத்தை அவர்களிடம் பெற்றுச் சீர் பெற நடாத்தினார்.
1945 ஆம் ஆண்டு முகாமைக்காரர் திரு. வே . செல்லப்பா அவர்கள் இறக்க அடுத்த ஆண்டில் திரு . பொன்னம்பலம் அவர்கள் முகாமைக்காரனாகத் தெரிவு செய்யப்பட்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்தினார். இவ் வித்தியாசாலை ஊரின் மத்தியில் அமைந்திரந்தமையால் வடக்குத் தெற்குப் பக்கங்களில் வதியும் மாணவர்கள் இவ்விடத்தில் வந்து கல்விகற்பதில் ஏற்படும் வசதியீனங்களை நீக்கும் பொருட்டு அப்பகுதிகளில் ஒவ்வோர் பாடசாலை அரசாங்கத்தினரால் கட்டப்பட்டது. இது காரணமாக இவ்வித்தியாசாலையில் மாணவர்க தொகை சிறிது குறையவே ஆசிரியர்களின் எண்ணிக்கையுங் குறைவடைந்தது.
1948 ஆம் ஆண்டில் திரு. வே. அம்பலவாணர் இவர்கள் முகாமைக்காரனாக நியமிக்கப்பட்டு 1950 ஆம் ஆண்டுவரை கடமை  ஆற்றினார்.  இவர் காலத்தில்இ துவிபாசா தித்தியாசாலையாக இயங்கிவந்த இவ்வித்தியாசாலை ஆங்கிலவித்தியாசாலையாக உயர்ச்சியடைந்தது. மாணவர்களின் தொகை நாளாவட்டத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.  ஆங்கிலபாடசாலைக் கேற்ற புதிய முறையான போதிய தளபாடங்கள் வேண்டியதாயிற்று.  இவற்றைத் தமது சொந்தப் பணத்தில் தேடிவைத்துப் பல துறைகளிலும் வித்தியாசாலையை விருத்தியாக்கியவர் இம்முகாமைக்காராகும்.  இவர் 1950 ஆம் ஆண்டில் அகாலமரணமானது வித்தியாசாலையின் வளர்ச்சிக்கு ஒரு பெருந்தடையாகும்.
இவர் இறந்ததும் 1950 ஆம் ஆண்டு திரு. . சிவம் அவர்கள் முகாமைக்காரனாகிச் சில மாதங்கள் கடமையாற்றி இறந்தார்.  அக்காலத்தில் இவரால் வகுக்கப்பட் திட்டங்கள் பூர்த்தியாயின் வித்தியாசாலை மிக உன்னதமான நிலையையடைந்திருக்குமெனலாம்.  மாணவரிடத்துச் சங்கீத ஞானம் சிறிதளவேனும் அமையவேண்டும் என்ற பூரண விருப்பத்தால் ஒரு சங்கீத ஆசிரியரை நியமித்தார்.
அதன் பின்னர் திரு. ஐயம்பெருமாள் அவர்கள் முகாமைக்காரனாகத் தெரிவு செய்யப்பட்டு 1952 ஆம் ஆண்டுவரை வித்தியாசாலையைத் திறம்பட நடாத்தினார்.  இக்காலத்தில் மாணவர் வரவு அதிகமானது.  ஆங்கிலத்தில் தராதரப் பத்திரமுடைய ஆசிரியர்களும் பட்டதாரிகளும் நியமிக்கப்பட்டனர். விஞ்ஞானபாடத்தில் மாணவர்கள் அறிவு பெறவேண்டுமென்னும் பேராவலால் திரு மு. P. தாமோதர மேனன் டீ. யு. அவர்கள் நியமிக்கப்பட்டார்.  அவர் சிறிது காலங் கடமையாற்றிவிலக அப்பாடத்திற்குரிய ஆசிரியர்களைத் தேடுவதில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனடையாது சிறிது காலந் தடைப்பட்டன.
இந்நேரத்தில் வித்தியாசாலையில் அநேக திருத்தங்கள் செய்யப்படவேண்டியதாயிற்று.  மேலும் தளபாடங்கள் உபகரணங்கள் விளையாட்டிடம் நிரந்தரமலசலகூடம் ஆதியன தேவையாயிருந்தது. இவையாவற்றையுஞ் செய்து முடிக்க வித்தியாசங்கத்திடம் பணமில்லாதிருந்தது.  இது காரணமாக வித்தியாசாலையை அரசாங்கத்திற்கு கொடுக்க ஆலோசித்தனர்.  அவ்விதஞ் செய்ய இதன் உறுதி தடையாயிருந்தது.  சைவவித்தியாவிருத்திச் சங்கத்திடங்கொடுக்க ஒருசிலர் முயற்சித்தனர்.  இதைப்பொதுமக்களில் பலர் ஆதரிக்கவில்லை.  இச்சந்தர்பத்தில் இவ்வூர் வாசியும்இ மலாயாவில் உத்தியோகம் வகிப்பவருமான திரு. . பொன்னம்பலம் அவர்களின் முயற்சியால் வித்தியாசங்கம் கூட்டப்பட்டு புதிய நிருவாகசபையும் உபசபையும் தெரிவு செய்யப்பட்டனர்.  அதன் முகாமைக்காரனாக திரு. வே. சண்முகம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். கல்வி வளர்ச்சியில் ஊக்கமும் விடாமுயற்சியும் கொண்ட உபசபையினர் அமைந்தது வித்தியாசாலையின் வளர்ச்சிக்குப் பெரும் உதவியாயிருந்தது.
திரு. . பொன்னம்பலம் அவர்கள் சபையினருக்கு ஆதரவு கொடுத்ததோடு போதிய பணவுதவியுஞ் செய்தார்கள்.  இந்நிலையையுணர்ந்த இதன் வளர்ச்சியில் அக்கறை கொண்ட முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு. . சோமசுந்தரம் அவர்கள் சபையினருக்குத் தகுந்த புத்திமதி கூறி ஊக்குவித்ததோடு பணவுதவியுங் கொடுத்து ஆதரித்தார்கள்.  இவர்களின் உதவியுடன் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொடுத்த பணவுதவியுடனும் அக்கால வித்தியாசாலை ஆசிரியர்கள் உவந்தளித்த நன்கொடைப் பணத்தையுஞ் சேர்த்து தளபாடங்கள் உபகரணங்கள் மலசல கூடம் கட்டிடத்திருத்தம் ஆதியாந்தேவைகளை ஓரளவிற்குப் பூர்த்தி செய்தனர்.  விஞ்ஞான ஆய்வுகூடமொன்றை நிறுவி அதற்கான தளபாடங்கள் உபகரணங்கள் ஆதியனவற்றைத் தேடிக் கொடுத்தனர்.  விஞ்ஞான ஆசிரியராக திரு. தியாகராசா யோசேப்பு டீ. யு. அவர்ளை நியமித்தனர்.  இவர் ஆசியரியர்களுக்கு ஒர் எடுத்துக் காட்டாகவுள்ளவர்.  சிறந்த பண்பும் அமைதியும் நிறைந்தவர்.  விஞ்ஞானம் கணிதம் ஆகிய இப்பாடங்களில் மாணவர்களுக்குப் புத்துணர்ச்சியையும் ஆர்வத்தையும் உண்டாக்கியவர்.  தலைமையாசிரியர் திரு. சிவபாதசுந்தரம் அவர்கள் டிப்ளோமா படிப்புக்காகச் சென்றிருந்த பத்து மாதங்கள் வரை பதில் தலைமையாசிரியராக விருந்து வித்தியாசாலையைத் திறம்பட நடாத்தியவர்.  இவ்வளவு உயர்ச்சிக்கும் அரும்பாடுபட்டவர் இக்கால உபசபையின் உறுப்பினர்களேயாவர்.  இவர்கள் இன்னும் வித்தியாசாலைக்குத் தேவையான ஆங்கிலப்பட்டதாரிகளை நியமித்து சிறப்புற 1959 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினர்.   பு. . நு. வகுப்பை ஆரம்பித்து நடாத்தினர். 1956 ஆம் ஆண்டு
பு. . நு. பரீட்சைக்கு இவ் வித்தியாசாலை முதன் முறையாக நான்கு மாணவர்களை அனுப்பியது.  இக்கால எல்லைக்குள் முகாமைக்காரனாக விருந்த திரு வே. சண்முகம் அவர்கள் உபசபையினருடன் ஒத்துழைத்துத் தகுந்த ஆலோசனைகள் கூறியதோடு வேண்டிய நேரங்களில் போதிய முற்பண உதவியும் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
1959 ஆம் ஆண்டு ஆனி மாதம் முதலாந்திகதி திரும்பவும் வித்தியாசங்கம் கூடப் பெற்று திரு. நா. சுப்பிரமணியம் அவர்களை முகாமைக்காரனாகத் தெரிவு செய்தது. 30-11-1960 வரை வித்தியாசாலையின் வளர்ச்சியில் ஆர்வம் மிருந்தவராய் ஆவன செய்து வந்தார்.  அரசினரின் பாடசாலைகளைத் தேசீய மயமாக்கும் கொள்கைக்கு ஆதரவு கொடுக்குமுகமாக அவர்களின் கால எல்லைக்கு முன்னரே இச்சங்க நிருவாகஸ்தர்கள் வித்தியாசாலையை 30-11-1960ல் அரசினருக்குக் கையளித்தனர்.  தற்சமயம் அப்போது வித்தியாசாலையில் 18 ஆசிரியர்கள் பணிபுரிந்தார்கள்.  அவர்களில் ஐவர் சர்வகலாசாலைப் பட்டதாரிகளாகும்.
இவ்வித்தியாலயத்திற்கு நீண்டநாட்களாக ஒரு விளையாட்டு மைதானம் இல்லாமை ஒரு பெருங்குறை பாடாக இருந்தது.  இக்குறைபாட்டை உணர்ந்த தற்போது மலாயாவில் வசிக்கும் திரு. வை. சுப்பிரமணியம் திரு. வை. சபாபதி ஆகிய இவர்கள் இவ்வித்தியாலயத்தின் வடபால் அமைந்த தங்கள் பெருநிலப்பரப்பை விளையாட்டு மைதானமாக உபயோகிக்க 1957ம் ஆண்டு தொடக்கம் மனமுவந்தளித்தார்கள்.  இந்நன்றி என்றும் மறக்கப்பாலதன்று.
ஆண் பெண் மாணவர்கள் கல்விபயிலும் இவ்வித்தியாலயத்திற்கு நிரந்தரமான மல சல கூடங்களை அமைப்பதற்கு அண்மையில் அமந்துள்ள தமது காணியில் வசதியளித்த வித்தியாலய ஆதிபராக விளங்கிய திரு. சு. சிவபாதசுந்தரம் அவர்கள் செய்த பேருதவியை இவ்வித்தியாலம் என்றும் மறக்கக்கூடியதன்று.
இவ்வித்தியாசாலையின் ஆரம்பகர்த்தாக்களும் இவ்வுயர்ச்சிக்குப் பூரண ஆதரவு கொடுத்துதுவிய கல்வி அபிமானிகள் முக்கியஸ்தர்கள் பலரும் சிவபதமடைந்தனர்.  இவர்கள் சிவபதமடைந்த காலத்தும் இவ்வித்தியாசாலையை நாம் எண்ணும் போது எம் கண் முன் அவர்கள் காட்சியளிப்பதைக் காணப் பேருவகை கொள்ளுகின்றோம்.

-தொடரும்.
இந்த அரிய வரலாற்றுத் திரட்டை  ஆவணப்படுத்தியவருக்கு நன்றி.
படங்கள் நன்றி:  சதாசிவன்.