அனலைதீவு
சதாசிவ மகா வித்தியாலய பெண்கள்
துடுப்பாட்ட அணியினர் இன்று நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் வட மாகாணத்தில் முதலிடம்
பெற்றுள்ளார்கள். அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய அதிபர்
மதிப்பிற்குரிய திரு.நா.இராதாகிருஸ்ணன்
அவர்களின் அக்கறையுடனான விடாமுயற்சியும் ஊக்குவிப்பும் இந்த அளப்பரிய வெற்றிக்கு
வித்திட்டது என்ற வகையில் மனநெகிழ்வோடு
அவரைப் பாராட்டிக் கௌரவப்படுத்துகிறோம்.
இந்த
மகத்தான வெற்றியை தமதாக்கிக்கொள்ள உழைத்த மாணவச் செல்வங்கள், பொறுப்பாசிரியர் திரு.பா.யசோதரன்,
அணியை பயிற்றுவித்த ஆசிரியர்கள் திரு.சௌ.விஜயதாஸ்,
திரு.அ.அருண்ராஜ், திரு.க.உதயபிரகாஷ் ஆகியோரை
மனதாரப் பாராட்டுகிறோம்.
ஒத்துழைப்பு
வழங்கிய ஆசிரியர்கள், ஊக்குவித்த பெற்றோர் அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக
மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்து அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறோம்.
இடர்ப்பாடுகள்
நிறைந்த ஒரு சமூக வெளியிலிருந்து
தமது திறமைகளை அடையாளங்காட்ட கடுமையாக உழைத்து விளையாட்டுத்துறையில் மாகாண மட்டத்தில் முதன்மையாகி வெற்றிபெறுவது மிகப்பெரிய சாதனைதான்.
இதுபோன்ற
சாதனைகள் தொடர இந்த விiளாயட்டுவீரர்களுக்கான அடிப்படை வசதிகள் தேவைகள் பண உதவிகள் என்பவற்றை
நாமாக முன்வந்து உரிய நேரத்தில் நிவர்த்திசெய்து
உதவுவதே அவர்களுக்கான உண்மையான பாராட்டாக அமையுமென்பதை நாமனைவரும் உணர்ந்து இனிவருங்காலங்கள் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய விளையாட்டுத்துறையின்
சாதனைக்காலங்களாக அமைய ஒன்றிணைந்து உழைப்போம்.
-அனலைதீவு
கலாசார ஒன்றியம்-கனடா.
பதிவு நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
No comments:
Post a Comment