Monday 25 July 2016

கண்ணீர்.




என் தீவில்
தாகம் கொள்ளுது தண்ணீர்.
எதிர்காலம் அள்ளுது  கண்ணீர்.
வெந்நீர்  ஊற்றும் சோம்பல்
வேர்மேல் என்று அறியாது
விக்கல் வந்தால் கடலில்
குடிநீர் துளியும் கிடையாது.
கருவறைக் குடமும் நீர்தானே
கிணற்றில் உப்பை இடலாமா?
இருப்பதை இறைத்து வதம் செய்து
என் தீவின் அடிமடி தொடலாமா?

கோடி முனிவர் தவத்திற்கும் என்
வயல்வெளித் தண்ணீர் கிடைக்காது.
பேரலை பொங்கிப் புடைத்தாலும் என்
தீவின்  கரைகளை உடைக்காது.
சுண்ணப் பாறைகள் உடையும் முன்னே
மனிதா துளியிலும் கடவுளைப்பார்.
எண்ணத் தவறுகள் அரித்த பின்னே
உன்னைத் தவிர்த்து பிற  உயிரே வாழும்.
-சிவம்.


அனலைதீவில் வயல்வெளியிலுள்ள பொருக்குக்கிணறும் அருகில் ஒரே நீருற்றுவாயில்  மக்களின் குடிநீர் வசதிக்காக தோண்டப்பட்ட கிணற்றுத் தண்ணீரும் பவுசரில் நீர் உறிஞ்சும் நடைமுறையால் இருநீர்த்தன்மையை  எட்டிவிட்ட நிலையிலேயே நாம் இந்த நடைமுறையை அதே மக்களின் நன்மை கருதி நிறுத்துமாறு கோருகிறோம். இக்கருத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரும் உணர்கின்றனர்.அவர்களின் அனலைதீவு மக்கள் மீதான அக்கறையையும் அவர்களின் சேவைகளையும் மதித்து நன்றியுள்ளவர்களாகவேயுள்ள நாம் தயவுசெய்து இந்தத்  தீவிலுள்ள குடிநீர் வளத்தை பாதுகாத்துத் தருமாறு பணிவோடு வேண்டுகிறோம். 

இக்கருத்துடனும் வேண்டுகோளுடனும்  உடன்படுபவர்களும் முரண்படுபவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துமாறு வேண்டுகிறோம்.
இப்பதிவுக்கான முழுப்பொறுப்புடனும் 
பணிவுள்ள
-சிவம்.








No comments:

Post a Comment