Friday 17 June 2016


மாகாண மட்டத்திற்கு தெரிவாகியும் தீவக கல்வி வலயத்தால் புறக்கணிக்கப்பட்ட யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய பெண்கள் துடுப்பாட்ட அணி
தீவகம் வலயக்கல்வி (வேலனை) விளையாட்டு போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான துடுப்பாட்டபோட்டியில் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய பெண்கள் துடுப்பாட்ட அணி வெற்றி பெற்று (முதலாம் இடம்) மாகாண மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்தது.
ஆனாலும் மாகாண மட்ட போட்டிகளுக்கு இந்த பாடசாலை அணி அழைக்கப்படவில்லை பாடசாலை நிர்வாகத்தால் இது தொடர்பாக வலய மட்டத்தில் வினவியவேளை இது வரை தீவக-வலயக்கல்வி பணிமனை தகுந்த பதிலளிக்கவில்லை.
தீவக வலய மட்டத்தில் முதலிடம் பெற்ற யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியால அணியை தவிர்த்து இரண்டாம் இடம்பிடித்த மண்டைதீவு மகா வித்தியாலயமும் மூன்றாமிடம் பெற்ற புங்குடுதீவு ஸ்ரீ சுப்ரமணிய மகளீர் மகா வித்தியாலமும் மாகாண மட்ட போட்டிகளில் பங்கு பற்றியுள்ளனர்.
இது தீவக வலய கல்வி பணிமனையால் திட்டமிடப்பட்ட நிராகரிப்பா? இல்லை வேறு எந்த காரணத்திற்காக மாணவர்களின் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன.
தேசிய அணியில் திறமை இருந்தும் இடம் கிடைக்காமல் பேரினவாதிகளால் நம்மில் பலர் புறக்கணிக்கப்படுகின்றோம் அது அவ்வாறு இருக்க நம்மவர்களால் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம் இப்போதெல்லாம்.
போதிய வசதிகள் இல்லாத போதும் பாடசாலை ஆசியர்கள் பெற்றோர்களால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு பயிற்சிகளை மேற்கொண்டு மாகாண மட்ட போட்டியில் விளையாடும் கனவுடன் காத்திருந்த மாணவர்களின் நிலை கலைக்கபட்ட கனவாகிவிட்டது.
சந்தர்ப்பம் என்பது எப்பொழும் வருவது கிடையாது திறமையை வெளிக்காட்டி பெற்ற சந்தர்பத்தை திட்டமிட்ட செயலாக தட்டிக்கழிக்கும் கல்வி அதிகாரிகளை நாம் என்ன செய்வது. அதிகாரிகள் மட்டத்தில் போட்டி பொறாமைகளால் நம் மாணவர்களை நீங்கள் பகடக்காய்களாக்காதீர்கள்.
இது தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் தீவக வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் விளையாட்டு பொறுப்பதிகாரி பதில் கூறவேண்டும்......திறமை இருந்தும் நாம் புறக்கணிக்கப்படக்கூடாது........
Pulendran Sulaksan

No comments:

Post a Comment